சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகள் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ட்விட்டர் தளம். பேஸ்புக், கூகுள் ப்ளஸ் என்று பல தளங்கள் வந்தாலும் தனக்கென்ற தனி வழியில் சென்றுக் கொண்டிருக்கும் ட்விட்டர் தளம், நாம் பகிரும் ட்வீட்களை நம்முடைய பதிவில் இணைக்கும் வசதியையும் தருகிறது.
இது பல மாதங்களுக்கு முன்னாலேயே அறிமுகப்படுத்தப்பட்ட வசதி ஆகும். சோதனைக்காக ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இணைத்த போது சரியாகத் தெரியவில்லை. தற்போது வேலை செய்கிறது.
ட்விட்டர் தளத்தில் உங்களுடைய அல்லது உங்களுக்கு பிடித்த ட்வீட்களை கிளிக் செய்தால், அது விரிந்து பின்வருமாறு தெரியும்.
அதில் Details என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு Embed this Tweet என்பதை கிளிக் செய்யுங்கள்.
அந்த ட்வீட்டுக்கு பிரத்யேக நிரல் கொடுக்கும். அதில் HTML நிரல்களை தான் காப்பி செய்து உங்கள் பதிவில் இணைக்க வேண்டும்.
மேலும் பதிவெழுதும் பக்கத்தில் வலதுபுறம் உள்ள Post Settings பகுதியில் உள்ள Option என்பதை கிளிக் செய்து, "Interpret typed HTML" என்பதனையும் தேர்வு செய்யவும்.
பதிவில் இணைத்த ட்வீட்கள் இப்படி தெரியும்,
செந்தமிழ் பேச்சினை கேட்கையிலே...இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே...#வெளிநாட்டு வாழ்க்கை
— ப்ளாக்கர் நண்பன் (@bloggernanban) August 25, 2012
இது வேலை செய்கிறதா? என்பதனை ReTweet செய்து தெரிந்துக் கொள்ளலாம். :) :) :)
14 Comments
நல்ல தகவல்...
ReplyDeleteநான் அதிகம் ட்விட்டர் பக்கம் போவதில்லை :-)
ஒன்லி முக நூல் ... அதுவும் அடிக்கடிநான் முக நூல் செக்யூரிட்டி செக்கப்பில் மாட்டிக்கொள்வதால் இனி முக நூலுக்கும் போகலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறேன் :-(
இப்பொழுது கூட எனது முக நூல் கணக்கு செக் யூரிட்டி செக்கப்பில் மாட்டிக்கொண்டுள்ளது. எனது செல் போன் என்னைக் கேட்டது கொடுத்தேன் . ஆனால் இன்னும் எனது ஐடியை அவர்கள் விடுவிக்கவில்லை
செம்ம கடுப்பா இருக்கு ;-)
அறிந்து கொண்டேன்... நன்றி...
ReplyDeleteடிவிட்டர் பத்தின தகவல் அருமை சகோ...
ReplyDeleteஅவ்வ்வ், எப்பிடியாவது எதையாவது கண்டுபிடிச்சிகிட்டே இருக்கீங்களே! :) :)
ReplyDeleteநன்றி நண்பா ( நாளைக்கு என்னோட தளத்தில் இது தான் ,ஆஹா
ReplyDeleteஉலராத ஆசாத்
தமிழ் 10ஒட்டு பட்டை சரியாய் வேலை செய்யவில்லை ,தரை தப்பட்ட
ReplyDeleteசவுண்ட் வருது
நல்ல தகவல் நண்பரே...
ReplyDeleteஎன்னிடம் ட்விட்டர் உள்ளது
ஆனால் ட்வீட் இல்லையே..
நான் என்ன செய்வது
எப்படி இணைப்பது
(#டவுட்டு) ஹி ஹி ஹி
அருமை. அனைவருக்கும் பயன்படும்.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி பாராட்டுகள் சகோ !!!!......
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteநல்ல பகிர்வு..நன்றி நண்பா
ReplyDeleteI no use twitter
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசூப்பர் ட்வீட்டு.. தொடருங்க!
ReplyDelete