Youtube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]


"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒன்று Youtube தளத்தில் வீடியோக்களைப் பகிர்ந்து, விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது. இது பற்றிய சிறு வீடியோவை இங்கு பார்ப்போம்.

Youtube தளம் நம் வீடியோக்களை பகிர்வதற்கு நமக்கென்று தனி சேனல் தருகிறது. அதில் நம் படங்களை பகிரலாம். பகிர்வது மட்டுமின்றி, கூகுள் ஆட்சென்ஸ் விளம்பரம் கொடுத்து, அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான வழியையும் தருகிறது யூட்யூப்.

விளம்பரம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள்:

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

அனுமதிக்கப்படாத வீடியோக்கள்:

1. வர்த்தக உரிமம் (Commercial license) இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்துவது.

2. காப்புரிமைப்பெற்ற பாடல்களை நீங்களோ அல்லது வேறு யாரோ பாடும் வீடியோக்கள்.

3. நீங்கள் விளையாடும் "வீடியோ கேம்களை" வீடியோவாக எடுப்பது.

4. காப்புரிமை இல்லாத மென்பொருள்களின் செயல்பாடுகளை படமாக்கப்பட்ட வீடியோக்கள்.

Youtube விளம்பரத்தில் இரண்டு கணக்குகள் உள்ளன. Youtube Monetization மற்றும் Youtube Partnership.

Youtube Monetization என்பது நாம் அனைவரும் எளிதாக பெறக் கூடிய கணக்கு. இதை எப்படி ஆக்டிவேட் செய்வது என்ற வீடியோவைத் தான் பார்க்கப் போகிறோம்.





வீடியோவில் சொன்னது போல Monetization-ஐ ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு இருக்க வேண்டும். ஆட்சென்ஸ் கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை, உங்கள் யூட்யூப் சேனலுக்காகவே புதிய கணக்கு பெறலாம்.

ஆனால்  அந்த ஈமெயில் ஐடிக்கு ஏற்கனவே ஆட்சென்ஸ் கணக்கு இருக்கக் கூடாது, அல்லது ஆட்சென்ஸ் கணக்கு முடக்கப்பட்டிருக்கக் கூடாது.

Youtube Monetization வசதி சில நாடுகளுக்கு இல்லை. நான் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கடந்த வாரம் போல தான் இந்த வசதி வந்தது.

"யூட்யூப் விளம்பரம் மூலம்ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம்" என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்து உள்ளது.

இது பற்றிய விரிவான விளக்கத்தை கற்போம் தளத்தில் Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற பதிவில் பார்க்கலாம்.


ஆமாம்! பதிவில் Youtube Partnership என்று இருக்கிறதே? அப்படியென்றால் என்ன....?  

Post a Comment

31 Comments

  1. // ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்து உள்ளது. // தல பதிவு எழுதவே நேரம் இல்லை...இதுல வீடியோ வேற வா... என்ன வீட்ட விட்டு வெளில அனுப்பாம விட மாட்டீங்க போலியே....

    ReplyDelete
  2. வரலாறுக்கு "நீ குழாயில்" ஒரு இடம் கிடைக்குமா?

    #YouTube=நீ குழாய்

    ReplyDelete
    Replies
    1. அதான், நீ குழாய் வரலாற்றில் இடம் பிடிச்சுடுச்சே! :D

      Delete
  3. தேவைப்படுவோருக்கு பயன் தரும் விளக்கமான பகிர்வு... நன்றி...

    ReplyDelete
  4. அருமையான பகிர்வு... நன்றி..

    ReplyDelete
  5. பயனுள்ள பதிவு நன்றி நண்பரே..

    எனது தளத்தில் தங்கத்தின் கடந்த ஆண்டுகளின் விலை விவரம்...
    http://yayathin.blogspot.in/2012/09/blog-post_4418.html

    ReplyDelete
  6. நல்ல தகவல் முயற்ச்சிக்கிறேன்

    ReplyDelete
  7. இணையம் மூலம் சம்பாதிப்ப நினைக்கும் அனைவருக்கும் பயய்படும் பதிவு.
    நன்றி!

    ReplyDelete
  8. மிகவும் பயனுள்ள பதிவு .. நன்றி நண்பா

    ReplyDelete
  9. வணக்கம் சகோ பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி .
    என் தளத்தில் ஒரு சின்னக் குழப்பம் .நான் என் தளத்தை
    திறந்ததுமே கொஞ்ச நாளாய் அதில் தளத்தின் மேல் முனையில்
    ஒரே விளம்பரமாய் வந்து விழுகிறது இதற்க்கு காரணம் என்ன ?..
    இதை எப்படித் தவிர்ப்பது ?...அத்துடன் இன்று ஓர் பதிவை எழுதி
    அதை சேவ் செய்ய முயற்சித்த போது வழமைபோல் சேவ் பண்ண
    முடியவில்லை அதற்கும் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் சகோ பிளீஸ் .

    ReplyDelete
    Replies
    1. எனக்கு விளம்பரம் எதுவும் வரவில்லையே சகோ?

      சேவ் கொடுத்தான் என்ன பிழை சொல்கிறது?

      Delete
    2. //ஓர் பதிவை எழுதி
      அதை சேவ் செய்ய முயற்சித்த போது வழமைபோல் சேவ் பண்ண
      முடியவில்லை அதற்கும் காரணம் தெரிந்தால் சொல்லுங்கள் சகோ பிளீஸ் //

      இது உங்கள் பதிவின் நீளம் காரணமாக இருக்கலாம். அதிகமான படங்கள், பெரிய கட்டுரை போன்றவையே காரணம். எனவே முயன்றவரை சிறிதாய் எழுதுங்கள். Save ஆகாவிட்டால் சில வினாடிகள் கழித்து மீண்டும் Save செய்யுங்கள். தொடர்ந்து இதே போல வந்தால் போஸ்ட்டில் HTML பகுதிக்கு சென்று அதை முழுமையாக காபி செய்து MS Word - இல் சேமிக்கவும். இப்போது மீண்டும் Post-ஐ க்ளோஸ் செய்துவிட்டு இதை HTML பகுதியில் பேஸ்ட் செய்யுங்கள். இப்போது Save ஆகும். மறுபடியும் பிரச்சினை என்றால் Save செய்யாமல் publish கொடுங்கள்.

      Delete
    3. வணக்கம் சகோ நெவர் வாறுக்கு மேல்
      Ads not this site என்று சேர்க்கப்பட்டு விழுவதுடன்
      ஒரே விளம்பரம் வலைத்தளத்தை விட்டு வெளியேறும் வரை
      வந்தபடியேதான் இருக்கின்றது .பிளீஸ் சகோ இதற்க்கு
      ஒரு நல்ல பதிலை விரைவாக எனக்கு கண்டு பிடித்துத்
      தாருங்கள் .இது எனது இரண்டாவது தளம். மற்றத் தளத்தில்
      என் நீண்ட கால உழைப்பும் கனவும் அடங்கியுள்ளது .அதனால்
      சிரமம் பார்க்காமல் இந்த உதவியை எனக்கு செய்து தாருங்கள்
      சகோ .

      Delete
    4. http://anpuullam.blogspot.com/

      இந்த தளத்தை தானே சகோ. சொல்கிறீர்கள்?

      Delete
  10. நல்ல தகவல் பதிவு

    ReplyDelete
  11. நல்ல தகவல் பதிவு

    ReplyDelete
  12. நன்றி, முடிந்தால் என் சமையல் வீடியோக்களை பகிர வேண்டும்..

    ReplyDelete
  13. நல்ல வழிகள்தான்...நன்றி சகோ

    ReplyDelete
  14. Good News For Earnings Thanks...
    http://priyankamarees.blogspot.in/

    ReplyDelete
  15. தகவலுக்கு நன்றிங்க !!

    ReplyDelete
  16. Keep posting useful information like this. Thanks for this.
    www.mindsbuilding.com

    ReplyDelete
  17. // 3. நீங்கள் விளையாடும் "வீடியோ கேம்களை" வீடியோவாக எடுப்பது.//

    Actually, I have seen some mega-publishers (youtube partners) doing this.
    Not sure if this is not allowed as per youtube. Please confirm.

    Is the Youtube partner account linked to adsense account?
    Being banned from one means banned in other also? Kindly clarify.

    ReplyDelete
    Replies
    1. If we want to do this, we should have commercial licence from that game creators.

      Youtube Monetization and Youtube partners are different. Some rules which is prohibited for monetization accounts are allowed in Partnership accounts.

      //Is the Youtube partner account linked to adsense account?//

      Adsense is need for both Youtube Monetization and Youtube partners.

      //Being banned from one means banned in other also? //

      i think so...!

      Delete
  18. Monetization செய்வது எப்படி?

    ReplyDelete
  19. Monetization செய்வது எப்படி? யாராவது சொல்லுங்களேன்?

    ReplyDelete
  20. என்னுடைய blogger க்கு adsence கணக்கு திறக்க முடியவில்லை ஸ்ரதயவு செய்து பதில் சொல்லவும்

    ReplyDelete
  21. சார் நான் Youtube channel தொடங்கிட்டான் பாருங்க நன்றி சார்
    https://m.youtube.com/watch?v=xTExhpC8nLY

    ReplyDelete
  22. உங்களின் பதிவு எனக்கு பயனுள்ளதாக இருந்தது நண்பா..
    ஒரு சிஸ்டத்தில் எத்தனை (email ID)கணக்கு தொடங்கலாம் நண்பா.....

    ReplyDelete
    Replies
    1. Unlimited என்று நினைக்கிறேன்.

      Delete