சென்னை பதிவர்கள் சந்திப்பு - Live Telecast & Tweets

இன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் தமிழ் பதிவர்கள் சந்திப்பிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கலந்துக் கொள்ளமுடியவில்லை என்ற வருத்தம் இருக்கத் தான் செய்கிறது. என்னை போன்று கலந்துக் கொள்ள முடியாதவர்களுக்காக இங்கே விழாவின் நேரடி ஒளிபரப்பு.

நேரடி ஒளிபரப்புடன் விழா குறித்து நேரடி ட்வீட்கள் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் ட்வீட்கள் இடம்பெற, உங்கள் செய்தியுடன் #tamilbloggersmeet என்பதை சேர்க்கவும். இதற்கு Hashtag என்று பெயர்.

ஒரே செய்தியை ட்விட்டரில் காப்பி செய்து போட்டால் கீழுள்ள பெட்டியில் தெரிவதில்லை என்று நினைக்கிறேன். உங்களின் வாழ்த்துக்களை வேறு வார்த்தைகளில் சொல்லவும்.Update: தமிழ் பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும், உறுதுணையாக இருந்தவர்களுக்கும் பதிவர் என்ற முறையில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது பற்றி தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பகிர்பவர்கள் #tamilbloggersmeet என்று சேர்த்தால், மேலுள்ள பெட்டியில் தங்கள் ட்வீட்கள் தெரியும்.

28 கருத்துக்கள்:

 1. ஸ்ட்ரீமிங் சரியாக கிடைக்க வில்லை

  ReplyDelete
  Replies
  1. இணைய வேகத்தைப் பொறுத்து ஸ்ட்ரீமிங் இருக்கும் நண்பா. ஒளிபரப்பிலும் சிறிது தடங்கல் இருக்கிறது தான்.

   Delete
 2. ம்ம்ம், பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்களை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன் நண்பா! (கூகிள் அனாலிட்டிக்ஸில்)

   :D :D :D

   Delete
 3. நிறைய பேரை யாருன்னே தெரியலை... :(

  கீழே பேரும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும்! :)

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு தான் நீங்க விழால கலந்துக்கணும்ங்கறது... :D

   Delete
  2. ஹி ஹி ஹி...ஆபீஸ்ல ஆடியோ கேட்க அனுமதியில்லை அதான் பேரை தெரிஞ்சுக்க முடியலையேன்னு ஒரு சின்ன வருத்தம்!

   Delete
 4. ரொம்ப Slow! :( விளம்பரம் மட்டும்தான் பாக்க முடிஞ்சது!

  ReplyDelete
  Replies
  1. அதையாவது பாக்க முடிஞ்சதேன்னு சந்தோசப்படுங்க! :)

   Delete
  2. //ரொம்ப Slow!//

   உங்க இன்டர்நெட் வேகம் தானே? :D :D :D

   நான் 2mbps வேக இணைப்பு வைத்திருக்கிறேன். பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. (ஆனால் ஆபிசில் இருப்பதால் ஆடியோ கேட்பதில் தான் பிரச்சனை)

   :( :( :(

   Delete
  3. என்னிடம் இருப்பதும் 2mbps இணைப்பே! ஆனால் இந்த வீடியோ லிங்க் மட்டும் ரொம்ப ஸ்லோ! :) விளம்பரங்கள் மட்டும் செம ஃபாஸ்ட்! :D

   Delete
  4. அட இதுக்குள்ள ஒரு பஞ்சாயத்து நடந்து இருக்க அத மிஸ் பண்ணிட்டனே

   Delete
 5. ஓரளவு நல்ல தெளிவாக இருக்கு.பகிர்விற்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு.

  ReplyDelete
 6. வெறும் எழுத்தில் மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த பதிவர்களை ஒளியும் ஒலியுமாக பார்ப்பதில் மனதில் இனம் புரியாத சந்தோசம்! :)

  ReplyDelete
 7. கண்ணா!ரெண்டு லட்டு திங்க ஆசையா!

  தமிழ்வாசியும் உங்களோடு வாத்தியம் வாசிக்கிறார்.

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. Replies
  1. உணவு இடைவெளி நண்பரே!

   Delete
 9. நானும் பார்த்தேன். ஒலி அமைப்பு கொஞ்சம் சரியில்லை. வார்த்தைகள் தெளிவாக விளங்கவில்லை. மற்றபடி விழா சிறப்பு.

  ReplyDelete
 10. நன்றி நன்றி மிக்க நன்றி இப் பகிர்வு சங்கர நாராயணன்
  அவர்கள் உரை கேட்டு மீதியும் தொடர முடிகிறது !!!....

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்!

  இன்று என் தளத்தில்
  பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
  கோப்பை வென்ற இளம் இந்தியா!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

  ReplyDelete
 12. http://josephinetalks.blogspot.in/2012/08/blog-post_26.html வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. விழாவில் கலந்துகொண்டது, கருத்துப்பரிமாற்றங்கள், கௌரவிக்கப்பட்டது
  எல்லாமே இன்றைய நாளை இனியதாக்கியது. சுப்பு ரத்தினம்..

  ReplyDelete
  Replies
  1. உங்களை போன்ற பெரிய பதிவர்கள் இருக்கும் காலத்தில் நாங்களும் எழுதுகிறோம் என்பதை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது ஐயா!

   Delete
 14. அண்ணே ஆரம்பத்துல எல்லா ஜன்னலும் முடிட்டு ஏசி போட்டுட்டோம்.. அதனால டேட்டாகார்டு-ல சிக்னல் பிராப்ளம் அப்புறம் முன்பக்கமிருந்த 2 ஜண்னல்கள் திறந்துவிட்டவுடனே கொஞ்சம் சரியாச்சு. அதுக்கப்புறமும் நெட் ஸ்பீட் ப்ராப்ளம் அதனால் வீடியோ குவாலிடிய கொஞ்சம் குரைச்சி அப்லோட் செய்தோம்... இனி வர்ற காலத்துல இந்த அனுபவத்தை வச்சி இன்னும் சிறப்பா திட்டமிடலாம்ணே.

  அப்புறம் அந்த தொப்பி போட்ட தம்பி நாந்தான் :)

  எல்லோரும் ரொம்ப அமைதியா சந்தோசமா கலந்துகிட்டாங்க...

  ReplyDelete
  Replies
  1. விழாவை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள் அண்ணே!

   இந்த கம்மென்ட் மாத்தி போட்டுட்டீங்களா?

   :D :D :D

   Delete
 15. நமக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லீங்னா.. நானெல்லாம் உங்கள மாதிரி பதிவர்களுக்கு வாசகன் மட்டுங்னா!!

  உங்க எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடனும் ந்னு இருக்கறதால இந்த பின்னூட்டங்னா!!

  உங்கள தொடருரேனுங்னா!!

  ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers