நம்முடைய பதிவுகளை அதிகமான வாசகர்களிடம் சென்றடையச் செய்வதற்கு Aggregators எனப்படும் திரட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றில் முக்கியமான சில திரட்டிகளில் ஒளிந்திருக்கும் ரகசியங்களை மட்டும் நாம் பார்ப்போம். இது புதியவர்களுக்கான பதிவாகும்.
தமிழ்மணம் திரட்டி:
தமிழ்மணத்தில் பதிவுகளை பகிர்ந்தால் அந்த தளத்தில் நடுப்பகுதியில் நம் பதிவுகள் வரும் என்பது அனைவருக்கும் தெரியும்.
கடந்த 24 மணி நேரங்களில் (மற்றும் கடந்த வாரம்) அதிகம் பார்க்கப்பட்ட பத்து+ பதிவுகள் சூடான இடுகை பகுதியிலும்,
சமீபத்தில் ஏழு ஓட்டுக்கள் பெற்ற பத்து+ பதிவுகள் வாசகர் பரிந்துரை பகுதியிலும்,
கடந்த இரண்டு நாட்களில் அதிக ஓட்டுக்கள் பெற்ற ஒரு பதிவு மகுடம் பகுதியிலும்
தெரியும் என்பதையும் அதிகமானோர் அறிந்திருப்பீர்கள்.
இவையல்லாமல் தளத்தின் கீழே ஆறு பிரிவுகளில் தனியே சில பதிவுகள் தெரியும். அந்த ஆறு பிரிவுகள்,
நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சினிமா, சமையல்
இந்த ஆறு பிரிவுகளுக்கு ஏற்றார் போல குறிச்சொற்களை (Labels or Tags) சேர்த்தால் நம்முடைய பதிவுகள் அங்கும் தோன்றும். இதனை ஒரு சிலரே (சில சமயம் பதிவிற்கு தொடர்பில்லை என்றாலும்) பயன்படுத்துகின்றனர்.
![]() |
படத்தை கிளிக் செய்து பார்க்கவும் |
உதாரணத்திற்கு, மேலுள்ள படத்தில் நான் எழுதிய சோதனை பதிவு ஐந்து பிரிவுகளிலும் தெரிவதைப் பாருங்கள். அதற்கு காரணம் அந்த பதிவில் ஐந்து பிரிவுகளுக்கு ஏற்றார் போல நான் குறிச்சொற்கள் கொடுத்தது தான்.
இது மட்டுமின்றி தளத்தின் மேலே இந்த ஆறு பிரிவுகளுடன் சேர்த்து மேலும் சில பிரிவுகள் இருக்கிறது. அவைகள்,
ஈழம், சினிமா, இசை, நகைச்சுவை, அரசியல், அனுபவம், புனைவுகள், சமையல், நிகழ்வுகள், பொருளாதாரம், தொழில்நுட்பம்
அதை கிளிக் செய்தால் அந்த பிரிவுகள் தொடர்பான பதிவுகளை மட்டும் காட்டும்.
![]() |
படத்தை கிளிக் செய்து பார்க்கவும் |
மேலுள்ள படத்தில், நான் எழுதிய சோதனை பதிவு "இசை" என்னும் குறிச்சொல் உள்ளதால் "இசை" பிரிவில் தெரிகிறது.
எந்தெந்த குறிச்சொற்களை சேர்த்தால் எந்தெந்த பிரிவுகளில் வரும் என்பதை கீழே கொடுத்துள்ளேன்.
இசை - இசை
நகைச்சுவை - நகைச்சுவை, மொக்கை, நையாண்டி
அரசியல் - அரசியல், சமூகம்
அனுபவம் - அனுபவம், நிகழ்வுகள்
புனைவுகள் - சிறுகதை, கவிதை, இலக்கியம்
சமையல் - சமையல், சமையல் குறிப்பு
நிகழ்வுகள் - செய்திகள்,
பொருளாதாரம் - வணிகம், பொருளாதாரம்
தொழில்நுட்பம் - தொழில்நுட்பம், இணையம்
இதில் ஒரே பிரிவில் உள்ள இரண்டு குறிச்சொற்களை பயன்படுத்தினால் இரண்டு முறை உங்கள் பதிவுகள் தெரியும்.
மேலே சொன்னவைகளில் "இரண்டி பிரிவுகளை விட்டுவிட்டீர்களே?" என்று கேட்கிறீர்களா? நீங்கக் கேட்கவில்லை என்றாலும் சொல்கிறேன்.
சினிமா, ஈழம் - இந்த இரண்டும் தனி பிரிவுகள் ஆகும்.
சினிமா
"சினிமா, திரை விமர்சனம்" ஆகிய குறிச்சொற்கள் மற்றும் நடிகர்களின் பெயர்கள் தலைப்பில் உள்ள பதிவுகள் அனைத்தும் தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் தெரியாது. அவைகள் தமிழ்மணத்தின் இன்னொரு தளமான திரைமணம் தளத்திற்கு சென்றுவிடும்.
ஈழம்
"ஈழம், இலங்கை, பிரபாகரன், தமிழீழம்" போன்ற குறிச்சொற்கள் (தலைப்பிலும் என்று நினைக்கிறேன்) இருந்தால் அந்த பதிவுகளும் முகப்பு பக்கத்தில் தெரியாது. தமிழ்மணம் ஈழம் தளத்திற்கு சென்றுவிடும்.
#மேலே குறிப்பிட்டுள்ள குறிச்சொற்களைத் தவிர வேறு சொற்களும் பிரிவுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். இவைகள் நான் கவனித்தவை மட்டுமே!
மேலும் சில ரகசியங்களை இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
28 Comments
ரகசியம் அறிந்தேன். ஆனாலும் நமக்கு தொழில்நுட்பம் என்ற குறிச்சொல்லுக்கே தமிழ்மணம் வாசகர்களை அள்ளித் தருகிறது.
ReplyDeleteஇதுவரை நான் பயன்படுத்தியதும் இல்லை, அறிந்திருக்கவும் இல்லை.. இனி கவனம் கொள்கிறேன்!
ReplyDeleteமிக அருமையான பகிர்வு...என்னுடைய blogger.autoobiletamilan.com தளத்தில்
ReplyDeleteLabels: facebook, இனையம் கொடுத்தால் ஓட்டுப்பட்டை செயல்படுகிறது.
நல்ல பதிவு. தொழில்நுட்பம் என்ற குறிச்சொல் இடும் போது தனியாகப் பட்டியலிடுவதைப் பற்றி முன்னரே அறிந்திருந்தேன். விளக்கமாக சொல்லி விட்டீர்கள். நன்றி
ReplyDeleteஅருமையான தகவல்கள்! :) சோதனை சக்சஸ்!!! :D இனி இவற்றை முறையாக பயன்படுத்தி வாசகர்களை அள்ளுகிறேன்! ;)
ReplyDeleteநல்ல தகவல்.. என் வலைப்பூவில் தமிழ்மணம் பட்டை வேலை செய்யவில்லை. பழைய ஓட்டு பட்டையினை எடுத்துவிட்டு புதுசாகவும் வைத்து பார்த்தேன், வேலை செய்யவில்லை. நான் என்ன செய்வது? முடிந்தால் கொஞ்சம் சொல்லவும்.
ReplyDeleteநான் எப்போதும் குறிசொற்களை பயன் படுத்துகிறேன் ஆனால் அது பதிவு சம்பந்தப்படும் வார்த்தைகளையே உபயோகித்தேன். குறிசொற்களை திரட்டிக்கு தகுந்தாற் போல் அமைக்கச் சொல்லியிருக்கிறீர்கள் மிக்க பயனுள்ள தகவல். அடுத்து தமிழ்மணத்தில் "அனைத்து குறிச்சொற்கள்" எனும் டேபினுள் சென்றால் பல குறிசொற்களை காணலாம்.
ReplyDelete:) :) :)
ReplyDeleteநல்ல தகவலகள் என் அருமைத் தம்பி.. கீப் அப் த குட் வொர்க்...
Super boss
ReplyDeleteஉபயோகமான பதிவு ! தொடரட்டும் தங்கள் சேவை !
ReplyDeleteஉபயோகமான பதிவு அன்பரே ,,,
ReplyDeleteஹி.ஹி.. இன்று காலையில் இதனைப் பார்த்து தான் கடுப்பாகிப் போனேன்.
ReplyDeletehttp://4.bp.blogspot.com/-zuqBMsF9-vE/UD2soKU-G9I/AAAAAAAAE1I/RGNmqV0MQIU/s1600/isai.png
சம்பந்தமே இல்லாத ஒட்டிகளை நான் பயன்படுத்துவது கிடையாது.
பயனுள்ள பகிர்வு
நன்றி
தெரியாத தகவல் நண்பரே... நன்றி...
ReplyDeleteஅட இதான் அதா
ReplyDeleteநல்ல தகவலகள் bro.
ReplyDeleteநல்ல தகவல் . நன்றி
ReplyDelete:-)
ReplyDeleteThakavalukku nabdri nanba
ReplyDeleteஅறிந்து கொண்டேன் நன்றிங்க..
ReplyDeleteதொலிழ்நுட்ப்பத்திற்க்கேற்ற விளக்கமான பதிவு நன்றி
ReplyDeleteஉதவிகரமான பதிவு நண்பா... இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா... இணைப்பதோடு சரி... :-)
ReplyDeleteநன்றி நண்பா (ஆனால் எனக்கு தேவை படாது சவுதியில் தமிழ் மணம் தடை
ReplyDeleteஅருமையான தகவல்! குறிசொற்களை பற்றி தெரிந்தாலும் பதிவு போடும் நேரம் மறந்துடுறேன் அவ்வ்வ்வ்வ்
ReplyDeleteஇனி மைன்ட்ல வச்சுக்குறேன்! தேங்க்ஸ் ப்ரதர்
தமிழ்மணத்தில இவ்வளோ விஷயம் இருக்கா? நன்றி பாஸ்
ReplyDeleteபதிவுகளின் கீழ் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வரவைப்பது எப்படி னு சொல்லுங்க அண்ணா.தமிழ்மணம் கொடுக்கும் முறைப்படி செய்யும் போது பதிவின் மேல் புறம் ஓட்டுப்பட்டை வருகிறது.
ReplyDeleteநன்றி நண்பா
ReplyDeleteதலைப்புக்கு சம்மந்தமில்லா கேள்வி...
ReplyDeleteஎனக்கு ப்ளாக்கரில் உள்ள பிரிவுகளில் என்னால் பதிவு இட முடியவில்லை
உதாரணம் - அதாவது என் ப்ளாக்கரில் உள்ள பக்கம் ஒன்றை திறந்தாள் காலியாகவே உள்ளது. அதனில் நான் எவ்வாறு பிரித்து பதிவு எழுதுவது
அல்லது எப்படி label சேர்ப்பது என்று சொல்லவும் நண்பரே...
இதர்க்கு கிழ் எந்த கோடுமே வேலை செய்ய வில்லை ஏன் etc: facebook comment boxs,திரட்டிகளின் ஓட்டு பட்டைகள்,
ReplyDeletemy blogs :http://udhayammalar.blogspot.com கொஞ்சம் பார்த்து சொல்லுங்க