ஹேப்பி பர்த்டே நண்பா! - கூகுள் புதிய வசதி


கூகுள் தளம் இதுவரை பயனாளர்களின் பிறந்த நாள் அன்று கூகுள் முகப்பு தோற்றத்தில் "பிறந்தநாள் வாழ்த்து" படத்தைக் (Doodle) காட்டி வந்தது. தற்போது நமது நண்பர்களின் பிறந்தநாள் குறித்து நமக்கு நினைவூட்டும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி உங்கள் கூகுள்+ சர்க்கிளில் உள்ள நண்பர்களின் பிறந்தநாள் அன்று நீங்கள் கூகுள் தளத்திற்கு சென்றால் அங்கே உங்கள்  நண்பர்களின் பிறந்தநாள் பற்றி நினைவு செய்தி காட்டும்.

UPDATED SCREENSHOT:Default-ஆக உங்கள் பிறந்த நாள் அன்று உங்கள் சர்க்கிளில் உள்ள அனைவருக்கும் உங்கள் பிறந்தநாள் பற்றி அறிவித்துவிடும். இதனையும், உங்கள் பிறந்த நாளையும் மாற்ற (ஹிஹிஹிஹி) கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள்.

https://plus.google.com/up/birthday


அங்கே உங்கள் பிறந்த நாளையும், மாதத்தையும் சரியாகக் கொடுத்து, யாருக்கெல்லாம் உங்கள் பிறந்தநாள் பற்றி தெரியலாம் என்பதை தேர்வு செய்து OK என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இதில் விருப்பமில்லை என்றால் Visible to பகுதியில் "Only me" என்பதை தேர்வு செய்யவும்.

கூகிளில் உங்கள் கொடுத்துள்ள பிறந்த வருடத்தை மாற்ற முடியாது. இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் இந்த வசதி வந்துவிடும்.

இந்த பிறந்தநாள் அறிவிப்பு வசதி ஏற்கனவே பேஸ்புக் தளத்தில்உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

14 Comments

 1. அப்பாடா...... மாத்திப்புட்டேன்! :)

  ReplyDelete
 2. நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. புதிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... வாழ்த்துக்கள்... (TM 1)

  ReplyDelete
 4. நன்றி சகோ தகவலுக்கு .

  ReplyDelete
 5. கூகுள் Rocks!
  என் வலைபூவில்: சாதனை பதிவர்கள்(பதிவுலக சாதனையாளர்கள்)
  http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

  மறக்காம பாருங்க

  ReplyDelete
 6. இப்ப தான் இந்த வசதியை எல்லாம் கொண்டு வாரானா ரொம்ப லேட்...

  ReplyDelete
 7. மாத்திப்புட்டேன்..நன்றி நண்பா..

  ReplyDelete
 8. நல்ல பதிவு எனிமேல் நண்பர்களிடம் நல்ல பெயர்கிடைக்கலாம்

  ReplyDelete
 9. நல்ல தகவல் நன்றி

  ReplyDelete
 10. என்னைப் போன்ற க்ரோனிக் பேச்சிலர்களுக்கு உதவும் !! ;-)

  ReplyDelete
 11. என் போன்ற க்ரோனிக் பேச்சிலர்களுக்கு உதவும்.. ;-)

  ReplyDelete