ஒரு பொருளை திறனாய்வு செய்து அதில் உள்ள சிறப்பம்சங்கள், பிடித்தவைகள், பிடிக்காதவைகள் ஆகியவற்றை எழுதுவது விமர்சனம் ஆகும். இது புத்தகம் (Book Review), சினிமா (Movie Review), வீடியோ கேம் (Video Game Review), மின்னணு சாதனங்கள் (Electronic Product Review), மொபைல் (Mobile Review), மென்பொருள்கள் (Software Review) என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி நாம் எழுதும் விமர்சனங்களை கூகுள் தேடலில் பிரபலமாக்குவது எப்படி? என்று பார்ப்போம்.
இது ஏற்கனவே நாம் பார்த்த Rich Snippets தொடரின் அடுத்த பகுதியாகும்.
கூகிளில் "ரியல் ப்ளேயர்" என்று தேடிப் பாருங்கள். ப்ளாக்கர் நண்பனின் ரியல் ப்ளேயர் (Real Player Free) - Software Review என்ற பதிவு மேலே உள்ள படம் போல வரும். அதில் நான் கொடுத்த 4.1 மதிப்பு நட்சத்திரங்களுடனும், Review By Abdul Basith என்று எனது பெயரும் வரும். விமர்சனப் பதிவுகளை இவ்வாறு தெரிய வைப்பது பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
இதனை இரண்டு முறையில் தெரிய வைக்கலாம்.
Aggregate Review - வாசகர்கள் பலர் கொடுக்கும் மதிப்பை வைத்து கணக்கிடுவது
Individual Review - தனிப்பட்ட ஒருவர் கொடுக்கும் மதிப்பு
முதலாவது சொன்ன Aggregate Review முறையை ப்ளாக்கரில் கொண்டு வர முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. (வெறும் நிரல்களைக் கொண்டு தெரிய வைக்கலாம். ஆனால் அது அவசியமில்லை)
இரண்டாவது சொன்ன Individual Rating என்பது எளிமையானது. அதைப் பற்றி மட்டும் பார்ப்போம்.
விமர்சனப் பதிவுகளை தனித்துக்காட்ட சில விவரங்களை (நிரல்களுடன்) சேர்க்க வேண்டும். தேவையான மூன்று தகவல்கள் மட்டும் இருந்தாலே போதும்.
1. விமர்சிக்கப்படும் பொருள் (Item Reviewed)
2. விமர்சிப்பவரின் பெயர் (Reviewer)
3. மதிப்பீடு (Rating)
இணைக்க வேண்டிய நிரல்கள்:
<div itemscope itemtype="http://data-vocabulary.org/Review">
<span itemprop="itemreviewed">How to Train your Dragon</span>........................
........................
........................
<span itemprop="reviewer">Abdul Basith</span> Rating: <span itemprop="rating">4.5</span>/5</div>
* சிவப்பு நிறங்களில் உள்ளவைகள் நிரல்கள். இவைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். நீங்கள் இதையே காப்பி செய்து, தகவல்களை மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
எப்படி நிரல்களை இணைப்பது?
பதிவு எழுதி முடித்தப் பின், HTML Mode-ற்கு மாறி இணைக்கலாம் அல்லது வலது புறம் Post Settings என்பதன் கீழே Options என்பதை கிளிக் செய்து, அங்கு Compose Mode என்ற இடத்தில் "Interpret typed HTML" என்பதை தேர்வு செய்து Compose Mode-ல் வைத்தே நிரல்களை இணைக்கலாம்.
சரி, நாம் சரியாக சேர்த்திருக்கிறோமா? என்பதை எப்படி அறிவது?
HTML Mode-ல் உள்ள எல்லா நிரல்களையும் காப்பி செய்து, http://www.google.com/webmasters/tools/richsnippets என்ற முகவரிக்கு சென்று, அங்குள்ள பெட்டியில் கொடுத்து Preview என்பதைக் கொடுத்தால் சரியாக உள்ளதா? என்று காட்டும்.
அதில் நட்சத்திரங்களும் (Preview-ல் எண்களை காட்டாது), உங்கள் பெயரும் தெரிந்தால், சரியாக உள்ளது என்று அர்த்தம்.
டிஸ்கி: இந்த பதிவு அதிகமானவர்களிடம் சென்றடைவது அவசியம் என நீங்கள் கருதினால், திரட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துக் கொள்ளங்கள்.
22 Comments
உண்மையில் அருமையான பதிவு ஆங்கில தளங்களில் மட்டும் தெரிந்து கொண்டு இருந்தது இனி தமிழ் தளங்களிலும் தெரியும்.....எனக்கு ரொம்ப பயன்படும்....முதலாவதாய் சொன்ன Aggregate Review சொல்லி இருக்கலாம் நம்ம rating போடுவதை விட மற்றவர்கள் போட்டால் எந்த பிரச்சனையும் இல்லை.....தங்களுக்கு ரொம்ப நன்றி.......
ReplyDeleteAggregate Review ப்ளாக்கரில் கொண்டு வருவது (எனக்கு) கடினம்.
Deleteநன்றி சகோ.
ReplyDeleteஉபயோகமான தகவல். உங்கள் சேவை பாராட்டுக்குரியது. நன்றி.
ReplyDeleteஅருமையான பதிவு.....நன்றி.......
ReplyDeleteபுதிய தகவல் அன்பரே நன்றி
ReplyDeletemikka nannri
ReplyDeletethe daily cine story
www.saaddai.com
புதிய தகவல்... செய்து பார்க்கிறேன் நண்பரே... நன்றி… (TM 5)
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி
ReplyDeleteஆஹா செம பதிவு நண்பா ட்ரை பண்றன்
ReplyDeleteThanks
ReplyDeletefor more info. visit
http://support.google.com/webmasters/bin/answer.py?hl=en&answer=146645#Aggregate_reviews
நண்பா இது விமர்சன பதிவிற்கு மட்டும் தான் பொருந்தும் அல்லவே?!
ReplyDeleteநண்பா எனக்கும் இதே சந்தேகம் தான்..!!
Deleteஏங்க பதிவின் தலைப்பே விமர்சனம் எழுதும் பதிவருக்கு என உள்ளது அதன் பிறகும் என்ன சந்தேகம்.....
Deleteஆம், விமர்சன பதிவுகளுக்கு மட்டும் தான். ஆனால்....
Delete:D :D :D
@ chinna malai,
Deleteஉங்கள அளவுக்கு எனக்கு தொழில்நுட்பம் புரியாதுங்க, நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லை.., ஒரு சந்தேகத்துக்கு கேட்டா..........
@ Abdul Basith
Delete//
ஆம், விமர்சன பதிவுகளுக்கு மட்டும் தான். ஆனால்....
:D :D :D
//
ஏதோ சொல்ல வந்த மாதிரி தெரியுதே?! :)
நல்ல தகவல்..பகிர்வுக்கு நன்றி..நண்பா...
ReplyDeleteஅருமையான பதிவு.....நன்றி.......
ReplyDeletehttp://vchking.blogspot.com
please see my website
Pathivukku nandri
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteI need ur phone no for some details i need. if you help me? pls.. send your contact no to my email address dasananbu5@gmail.com
ReplyDelete