ஆன்ட்ராய்ட் கேம்ஸ்களை நீக்க புதிய வழி


கடந்த பதிவில் ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை நிறுவுதல் பற்றி பார்த்தோம். மேலும் கூகுள் ப்ளே தளத்தில் இருந்தே Applications/Games-களை நீக்குவதற்கு கூகுள் தந்துள்ள புதிய வசதியை பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தேன். அது பற்றி இங்கே பார்ப்போம்.

உங்கள் ஆன்ட்ராய்டில் கொடுத்துள்ள கூகுள் கணக்கு மூலம் கூகுள் ப்ளே (http://play.google.com) தளத்தில் உள்நுழையுங்கள்.

அங்கே வலதுபுறம் My Android Apps என்பதை கிளிக் செய்தால் உங்கள் மொபைலில் நிறுவியுள்ள அனைத்து அப்ளிகேசன்கள் மற்றும் கேம்ஸ்கலைக் காட்டும்.



எந்த அப்ளிகேசன் அல்லது கேமை நீக்க வேண்டுமோ அதன் பக்கத்தில் இருக்கும் Delete ஐகானை கிளிக் செய்யுங்கள். (SYSTEM APP என்பதை நீக்க முடியாது)


நீக்க வேண்டுமா? என்பதை உறுதி செய்ய சொல்லும். UNINSTALL பட்டனை கிளிக் செய்யுங்கள்.


விரைவில் அந்த அப்ளிகேசன் அல்லது விளையாட்டு நீக்கப்படும் என்று சொல்லும். பிறகு CLOSE என்பதை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இணைய இணைப்பு கிடைத்ததும் அந்த அப்ளிகேசன் அல்லது விளையாட்டு நீக்கப்பட்டுவிடும்.

டிஸ்கி: Android Apps/Games களை மொபைலில் இருந்தே நீக்குவது எளிதாக இருக்கும் போது இதை ஏன் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது? என்று தான் புரியவில்லை.

Post a Comment

9 Comments

  1. நன்றி நண்பா, தகவலுக்கு!

    ReplyDelete
  2. நன்றி அண்ணா நல்ல தகவல்.....

    ReplyDelete
  3. ஆப்பிள் குறிவைத்தே பல இமேஜ் விடுறான் ஆப்பிள் பாவம்...அழுதுடும்

    ReplyDelete
  4. நன்றி சகோ. பயனுள்ள தகவல்

    ReplyDelete
  5. பயனுள்ள நல்ல தகவல்....நன்றி சகோ.

    எங்க தளத்திற்கும் வாங்க ....உங்க கருத்த சொல்லுங்க ......

    புதிய வரவுகள்:
    கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)

    கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
    ,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

    ReplyDelete
  6. நல்ல விளக்கமான பதிவு! நன்றி!

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  8. நல்ல தகவலுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
  9. நல்ல பகிர்வு நண்பா...

    ReplyDelete