அலெக்சாவில் ப்ளாக்கை இணைப்பது எப்படி?


இணையதளங்களை வரிசையிடும் அமேசான் நிறுவனத்தின் அலெக்சா தளம் பற்றியும், அலெக்ஸா Widget-ஐ நம் ப்ளாக்கில் இணைப்பது பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். அந்த Widget-ஐ வைக்காமலும் நம் தளத்தை அலெக்சாவில் இணைக்கலாம். அது பற்றி பார்ப்போம்.

1. முதலில் Alexa.com தளத்திற்கு சென்று உங்கள் கணக்கு மூலம் உள்நுழையுங்கள். அல்லது புதிதாக கணக்கு ஒன்றை உருவாக்குங்கள்.

2.  பிறகு http://www.alexa.com/siteowners/claim என்ற முகவரிக்கு செல்லுங்கள்.



3. அங்கு உங்கள் ப்ளாக் முகவரியைக் கொடுத்து Claim Your Site என்னும் பட்டனை அழுத்துங்கள்.


4. பிறகு Free என்பதற்கு கீழே Sign Up என்பதை கிளிக் செய்யுங்கள்.

5. பிறகு உங்கள் தளத்திற்கென பிரத்யேகமான ஐடி ஒன்று கொடுக்கப்படும். அதை உங்கள் ப்ளாக்கில் இணைக்க பல வழிகளையும் காட்டும்.


இதில் வலதுபுறம் Meta Code பின்வருவது போல இருக்கும்.

<meta name="alexaVerifyID" content="q8t4DdnkamRaTQRdN42XhFu65o0" />

6. ப்ரவ்சரில் இன்னொரு Tab-ஐ திறந்து Blogger Dashboard => Edit Html பகுதிக்கு செல்லுங்கள்.

7. </head> என்ற நிரலுக்கு முன்னால் உங்கள் Meta Code-ஐ Paste செய்து Save செய்துக் கொள்ளுங்கள்.

8. திரும்பவும் அலெக்ஸா தளத்திற்கு வந்து Meta Code உள்ளதற்கு கீழே உள்ள Verify my ID என்பதை கிளிக் செய்யுங்கள்.


9. "Your site is successfully claimed" என்று சொன்னால் உங்கள் தளம் சேர்க்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம். பிறகு Continue என்பதை அழுத்துங்கள்.

10. பிறகு உங்கள் ப்ளாக் பற்றிய தகவல்களை கொடுக்கவும். உங்கள் தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம். பிறகு Save & Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான்! இது போதும். உங்கள் ப்ளாக் அலெக்சாவில் இணைக்கப்பட்டுவிட்டது.

பிறகு Alexa.com தளத்திற்கு சென்று உங்கள் ப்ளாக் முகவரியைக் கொடுத்தால் உங்கள் ப்ளாக்கின் ரேன்க் என்னவென்று காட்டும்.




Post a Comment

24 Comments

  1. இதன் பயன்களை பற்றி கொஞ்சம் சொல்லலாம் அல்லவா சகோ ;-)

    ReplyDelete
  2. பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .

    ReplyDelete
  4. புதிய தகவல்

    (¯`·._.·[ பகிர்வுக்கு நன்றி ! ]·._.·´¯)

    ReplyDelete
  5. உபயோகமான பதிவு ஆனால் இதன் பலன் என்ன

    ReplyDelete
    Replies
    1. அங்குதான் உங்கள் ப்ளாக் உலக அளவில் தர நிர்ணயம் செய்யப்படுகிறது! இங்கே வாக்குகளை கொண்டு டபுள் கேம் ஆட முடியாது!

      Delete
  6. விளக்கமான தகவல்... நன்றி நண்பரே...
    நன்றி.
    (த.ம. 4)

    பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

    ReplyDelete
  7. பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. இதன் பயன்கள் பற்றியும் எழுதுங்கள்! முழுமையாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்!

    ReplyDelete
  9. சிறப்பான தகவல்! பகிர்வுக்குநன்றி!

    ReplyDelete
  10. பலருக்கும் இந்த பதிவு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்

    ReplyDelete
  11. அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல பதிவு..

    ReplyDelete
  12. Ithai vachu enna panna mutiyum.uruppatiyaana nanmai ethaavathu undaa.

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  14. பயனுள்ள பதிவு சகோ. விரைவில் முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  15. எனக்கு நல்ல பயனுள்ள பதிவு



    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  16. Super...Very useful post abdul..
    For latest Tamilcinema news come to my site...
    www.viswaroobam.com

    ReplyDelete
  17. நல்ல உபயோகமுள்ள பதிவு நன்றி நண்பா...

    ReplyDelete
  18. என் வலைப்பூவினையும் இணைத்து விட்டேன்.


    நன்றி.

    ReplyDelete
  19. இதுவரை இணைக்காமல் இருந்தேன்... தற்போது, நான் பழைய முறையிலேயே இணைத்து விட்டேன்.

    ReplyDelete
  20. வணக்கம் சகோ .ஏற்கனவே பதிவு செய்து என் தளத்தில் வைக்கப்பட்ட
    இந்த widget திடீர் என்று no data என்று காட்டுவதற்கு காரணம் என்ன ?...
    (இப்போது நான் widget ஐ நீக்கி விட்டேன் ) தெரிந்தால் தயவு செய்து
    உங்கள் பதிலைத் தாருங்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. சரியாக காட்டுகிறது சகோ.!

      http://www.alexa.com/siteinfo/http://rupika-rupika.blogspot.com

      Delete