பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி?


சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளம், இணையதளங்களில் வாசகர்கள் கருத்திடுவதற்கு வசதியாக FACEBOOK COMMENTS BOX என்னும் வசதியை தந்துள்ளது. இதனை நமது ப்ளாக்கில் சேர்ப்பது எப்படி? என்று பார்ப்போம்.

இதனை வைப்பதற்கு நாம் பேஸ்புக் அப்ளிகேசன் ஒன்று உருவாக்க வேண்டும். Facebook Application உருவாக்குவது எப்படி? என்ற பதிவில் உள்ளபடி உங்கள் பிளாக்கிற்கு ஒரு அப்ளிகேசன் உருவாக்கிக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே  அந்த பதிவு மூலம் உருவாக்கியிருந்தால், அந்த பதிவிற்கு சென்று App domain பகுதியில் உள்ள மாற்றத்தை செய்யுங்கள்.

அப்ளிகேசன் உருவாக்கிய பிறகு அதன் APP ID-யை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு பின்வருபவற்றை கவனமாக செய்யுங்கள். அதற்கு முன் உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.

1. Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று Edit Html என்பதை கிளிக் செய்யுங்கள்.

2. பிறகு Proceed என்பதை கிளிக் செய்து, Expand widget Templates என்பதை டிக் செய்யுங்கள்.

3.
<html
என்று தொடங்கும் நிரலை தேடி அதன் பக்கத்தில் ஒரு இடைவெளிவிட்டு
xmlns:fb='http://www.facebook.com/2008/fbml'
என்ற நிரலை சேர்க்கவும். அதற்கு அடுத்தும் ஒரு இடைவெளி விடுங்கள்.

4. பிறகு
<body>
என்ற நிரலை தேடி அதற்கு பின்னால் கீழே உள்ள நிரல்களை சேர்க்கவும்.
<div id='fb-root'/><script>
    window.fbAsyncInit = function() {    FB.init({
      appId  : '216333555150843',
      status : true, // check login status        cookie : true, // enable cookies to allow the server to access the   session
      xfbml  : true  // parse XFBML    });
  };
    (function() {    var e = document.createElement('script');      e.src = document.location.protocol +   '//connect.facebook.net/en_US/all.js';    e.async = true;      document.getElementById('fb-root').appendChild(e);
    }());</script>
மேலே உள்ள நிரல்களில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்களை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக உங்கள் அப்ளிகேசனின் APP ID-யை சேருங்கள்.

5. பிறகு
</head>
என்ற நிரலை தேடி அதற்கு முன்னால் பின்வருபவற்றை சேருங்கள்.
<meta content='216333555150842' property='fb:app_id'/>

<meta content='basith27' property='fb:admins'/>

* 216333555150842 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் அப்ளிகேசனின் App ID-யை கொடுங்கள்.

* basith27 என்பதற்கு பதிலாக உங்கள் பேஸ்புக் User ID கொடுங்கள்.

6. பிறகு பின்வரும் நிரல்களை திரட்டி பட்டன்களுக்கு கீழே Paste செய்யுங்கள்.
<h3>Post Comment</h3>

    <div id='fb-root'/><script src='http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1'/><fb:comments expr:href='data:post.url' num_posts='3' width='550'/>


* num_posts - எத்தனை கருத்துக்கள் Default-ஆக தெரிய வேண்டும் என்பதை கொடுங்கள்.

* Width - அகல அளவு.

7. Save Templates என்பதை கிளிக் செய்யுங்கள்.

இதை செய்யும் போது பிழை ஏற்பட்டால் மறுபடியும் முதலில் இருந்து செய்யுங்கள். இந்த முறை ஒவ்வொரு Step-பையும் செய்தவுடன் Save செய்துக் கொள்ளுங்கள்.

இது  ப்ளாக்கில் எப்படி இருக்கும்? என்பதை பதிவின் கீழே திரட்டிக்கு கீழே உள்ளதை பாருங்கள். சோதித்து பார்க்க அதில் நீங்கள் கருத்திடலாம்.

பேஸ்புக் மட்டுமல்லாமல், யாஹூ, ஹாட்மெயில், AOL கணக்குகள் மூலமாகவும் கருத்திடலாம்.

ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். நிரலை பின்னூட்டத்தில் தெரிவிக்க விரும்பினால் http://simplebits.com/cgi-bin/simplecode.pl என்ற முகவரிக்கு சென்று அந்த நிரலை HTML ENTITIES ஆக மாற்றி கொடுக்கவும்.

இறைவன் நாடினால், பேஸ்புக் கம்மென்ட்களை மட்டுப்படுத்துவது பற்றி வி........ரைவில் பார்ப்போம்.

Post a Comment

37 Comments

  1. நன்றி நண்பா

    ReplyDelete
  2. என்னோட தளத்தில் இணைக்க முடியவில்லை body அந்த கோடிங் இல்ல

    ReplyDelete
    Replies
    1. சில டெம்ப்ளேட்களில் மாறியிருக்கும். <body என்று தொடங்கும் Code-ற்கு அடுத்த வரியில் பயன்படுத்துங்கள்.

      Delete
  3. நல்ல பதிவு, நிறைய பேருக்கு பயன்படும்.

    ReplyDelete
  4. நல்லதொரு தகவல் நன்றி!

    ReplyDelete
  5. நண்பரே!உங்களின் அனைத்து பதிவுகளும் என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது .உங்கள் சேவை தொடரட்டும் .

    ReplyDelete
  6. என்னோட டெம்ப்ளேட்டில் Facebook Comments Box-ஐ சேர்ப்பதற்கு ரொம்ப நாளாக முயற்சித்து தோற்றுக் கொண்டிருக்கிறேன்.! இதுவரையில் இணைக்க முடியவில்லை., இந்த முறை உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்., இன்றிரவு முயற்சிப்பார்க்கிறேன் .., நன்றி சகோ விளக்கமான.. அனைவருக்கும் உபயோகமுள்ள பதிவை பகிர்ந்துகொண்டமைக்கு.!

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் சிறந்த பதிவுகளை கொடுக்கும் நண்பர் அப்துல் பாசித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  8. நல்ல பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பா..

    ReplyDelete
  9. ட்ரை பண்ணி பார்கிறேன்

    ReplyDelete
  10. பெரும்பாலானோருக்கும் பயனுள்ள பதிவு நண்பா.

    ReplyDelete
  11. நல்ல தகவல் . நன்றி

    ReplyDelete
  12. மிக அருமையான தகவல் நண்பா

    ReplyDelete
  13. நண்பரே 6வது படியில் பட்டஙன்களுக்கு கீழே பேஸ்ட் செய்ய வேண்டும் என்றாள் எங்கு செய்வது...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் திரட்டி ஓட்டு பட்டைகள் வைத்துள்ளீர்கள் அல்லவா? கடைசியாக உள்ள திரட்டி நிரலுக்கு அடுத்ததாக இந்த நிரலை பேஸ்ட் செய்ய வேண்டும்.

      Delete
  14. அருமை நண்பரே, பேஸ்புக் காமென்ட் பாக்ஸ் வேர்ட்பிரஸ்- இல் வருமா? பல விட்ஜெட்டுகள் வேர்ட்பிரஸ் இல் வருவதில்லை. அதனால் இந்தக் கேள்வி.
    அன்புடன், ரஞ்சனி

    ReplyDelete
    Replies
    1. இலவச வோர்ட்பிரஸ் தளத்தில் இணைக்க முடியாது சகோ.!

      Delete
    2. நன்றி நண்பரே!

      Delete
  15. நன்றி சகோ ..மிகவும் எளிமையாக விளக்கி உள்ளீர்கள் ..இது சமந்தமாக நான் நிறைய ஆங்கில தளங்கள் படித்துள்ளேன் ஆனால் அவர்கள் எல்லாம் தங்கள் தளத்தின் முகவரியையும் ஊடே சேர்த்து இருப்பர்..நீங்கள் தான் தக்க வழிகாட்டுதலுடன் ..பெருந்தன்மையுடன் ....உதவி உள்ளீர்கள்..வளர்க உம பணி

    ReplyDelete
  16. நல்லதொரு தகவல் நன்றி!

    ReplyDelete
  17. xmlns:fb='https://www.facebook.com/2008/fbml' இதற்கு அப்புறம் ஒரு இடைவெளி விட சொல்லிருந்தீர்கள் அது என் ப்ளாக்இல் வரமாட்டேன் என்கிறது ..PREVIEW MODEஇல் வருகிறது ஆனால் SAVE TEMPLATE கொடுத்தால் வரமாட்டேன் என்கிறது

    ReplyDelete
    Replies
    1. என்ன பிழை காட்டுகிறது நண்பரே?

      இல்லை என்றால் அந்த நிரலை சேர்க்க சொன்ன அதே இடத்தில் கடைசியாக > என்பதற்கு முன்னால் சேர்த்து பாருங்கள்.

      Delete
  18. நன்றி நண்பா

    ReplyDelete
  19. வெற்றிகரமாக என் வலைப்பூவில் இணைத்து விட்டேன்..

    மிக்க மகிழ்ச்சி..

    நன்றி சகோ!

    ReplyDelete
  20. சிறு சந்தேகம்...
    DISQUS போன்ற commenting system ஐ பிளாகரில் சேர்க்கலாமா?
    அதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

    ReplyDelete
    Replies
    1. சிலர் சேர்க்கலாம் என்கின்றனர், சிலர் வேண்டாம் என்கின்றனர். சில நேரம் இதனால் ப்ளாக் திறக்க நேரம் எடுக்கலாம். பயன்படுத்தி பாருங்கள்.

      Delete
  21. சூப்பருண்ணா ரொம்ப டாங்ஸ்ண்ணா.............

    ReplyDelete
  22. இணைத்து விட்டேன் - நன்றி! :)

    ReplyDelete
  23. hi basith,

    thanks lot for this post. i added in my blog.

    regards;
    Abu Nadeem

    ReplyDelete
  24. //பிறகு பின்வரும் நிரல்களை திரட்டி பட்டன்களுக்கு கீழே Paste செய்யுங்கள்.//
    அண்ணா, அந்த கடைசி ஸ்டெப் மட்டும் புரிய மாட்டேங்குது?

    ReplyDelete
    Replies
    1. அண்ணா, அச்திட்டோம்ல. எப்படியோ ஒரு வழியா சரிபன்னிட்டேன்னா. ரொம்ப நன்றி அண்ணா.

      Delete
  25. நானும் இதை நிறுவி விட்டேன்! மிக்க நன்றி!
    ஓர் ஐயம்! இந்த முகநூல் கருத்துப் பெட்டியில் வருகையாளர்கள் இடும் கருத்துக்கள். நம்முடைய முகநூல் கணக்குக்குத்தான் வந்து சேருகின்றன. இதற்குப் பதில், வலைப்பூவின் விசிறிப் பக்கத்துக்குச் சென்று சேர்ந்தால் மிக மிகச் சிறப்பாக இருக்கும். சொல்லப் போனால், அப்படித்தான் இருக்க வேண்டும்! அதற்கு ஏதாவது செய்ய முடியுமா?

    ReplyDelete
  26. நண்பா திரட்டி இணைக்கவில்லை என்னா செய்வது pls ?

    ReplyDelete
    Replies
    1. நானும் திரட்டி இணைக்க வில்லை என்ன செய்வது ?

      Delete