ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு


SEO என்றொரு சங்கதி இருக்கிறது - Search Engine Optimization! அதாவது நமது தளத்தில் உள்ள தகவல்கள், தேடு பொறிகள் மூலம் எளிதாக கிடைத்திடுமாறு - தளத்தை வடிவமைக்கும் சூத்திரம்! இதை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம் - சிறந்த முறையில் SE Optimize செய்யப்பட்ட தளம் அதிகம் பேரை சென்றடையும்! ஆனால், அவ்வாறு வடிவமைப்பது எளிதா என்று நீங்கள் கேட்டால் - நிச்சயம் இல்லை! இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டுமானால் தலையணை சைஸுக்கு பெரிய புத்தகமாய் எழுத வேண்டியிருக்கும்! சரி, இருப்பதிலேயே எளிதான ஒரு ஆலோசனையைப் இந்தப் பதிவில் பார்ப்போம்!

அர்த்தமுள்ள URL முகவரி:

உங்கள் தளத்தில் உள்ள பல்வேறு பக்கங்களின் URL-களின் பெயர்களை - அந்த பக்கத்தில் என்ன தகவல் உள்ளதோ அதற்கேற்ப பொருத்தமாக வைக்க வேண்டும்! உதாரணத்திற்கு, உங்களை தொடர்பு கொள்ளுவதற்கான விவரங்கள் உள்ள பக்கத்திற்கு contact.html என தலைப்பு வைக்கலாம்! ஆனால் நீங்கள் பதிவராக இருக்கும் பட்சத்தில் உங்கள் பதிவின் URL முகவரியின் தலைப்பை நிர்ணயிக்கும் உரிமை உங்களிடம் இல்லை மாறாக அது உங்கள் பதிவின் தலைப்பை சார்ந்து உள்ளது! உதாரணத்திற்கு நீங்கள் Avengers படத்தின் விமர்சனம் எழுதி, பதிவின் தலைப்பை 'The Avengers - 2012 - Movie Review' என வைத்தால், பதிவின் URL தலைப்பு "avengers-2012-movie-review.html" என பொருத்தமாக வந்திடும்!

இந்த முகவரி விதிவிலக்கு ;) ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் மட்டுமே - காரணம், ஆங்கிலம் தவிர்த்த மற்ற மொழிகளில் டொமைன் நேம் மற்றும் URL முகவரிகள் வைக்கும் வசதி இன்னமும் பரவலாக நடைமுறைக்கு வரவில்லை! எனவே, நீங்கள் பதிவின் பெயரை தமிழில் வைத்தால் கூகிள் ப்ளாக்கர் - தன்னிச்சையாக ஏதாவது ஒரு முகவரியை தெரிவு செய்யும்! முகவரிகளின் தலைப்பிற்கும், உங்கள் பதிவில் உள்ள தகவலிற்கும் எந்தவொரு தொடர்பும் இன்றி "1.html", "blog-post_19.html" என்று உபயோகமில்லாத ஒன்றாய் இருக்கும்!

உதாரணத்திற்கு எனது கீழ்க்கண்ட பதிவின் பெயர் முழுக்க முழுக்க தமிழில் இருப்பதால்,

என் பெயர் லார்கோ! & எதிரே ஒரு எதிரி!

இதன் URL முகவரி இவ்வாறாக வந்துள்ளது:
http://www.bladepedia.com/2012/05/blog-post_16.html

பதிவின் பெயரில் ஆங்கில கலப்பு கீழ்க்கண்டவாறு இருந்தால்,
சலூனில் சில Sci-Fi சிந்தனைகள்!

URL முகவரியில் அந்த ஆங்கில சொற்களை காணலாம்! உண்மையில் இந்த SEO டிப்ஸ் பதிவை நான் எழுதக் காரணமாய் இருந்ததே மேற்கண்ட சலூன் பதிவுதான்! URL-இல் "sci-fi" என்ற ஆங்கில சொல் இருந்ததை கவனித்து ஆச்சரியப்பட்டு மற்ற பதிவுகளின் URL-களை ஒப்பிட்டுப் பார்த்ததில் இந்த உண்மை உறைத்தது!:

http://www.bladepedia.com/2012/06/sci-fi.html

சரி இதற்கு என்னதான் தீர்வு?! உண்மையில் பெரும்பாலானோர், தேடு பொறியில் தகவல்களை தேடும் போது ஆங்கிலத்தைத்தான் உபயோகிக்கிறார்கள்! உதாரணத்திற்கு ஆன்லைன் ஷாப்பிங் வழிமுறைகள் பற்றி தேடவேண்டுமானால், பொறுமையாய் தமிழில் யாரும் டைப் செய்து தேடுவதில்லை! மாறாக, "Online Shopping Tips" என்றே தேடுவார்கள்! எனவே, பதிவின் தலைப்பை முதலில் ஆங்கிலத்தில் வையுங்கள், பிறகு பப்ளிஷ் செய்த பின் உடனடியாக கீழ்க்கண்டவாறு எடிட் செய்து மீண்டும் தமிழில் மாற்றிக் கொள்ளலாம்! :)

Dashboard --> Posts --> பதிவை Edit செய்யவும் --> தலைப்பை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மாற்றவும் --> Update --> அவ்ளோதான்! :)

இன்னொரு முக்கிய விஷயம்! முதலில் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது அதன் நீளம் 39 கேரக்டர்களை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்! ஆம், அதுதான் உச்சபட்ச தலைப்பு நீளம் (.html என்பதை சேர்க்காமல்)!.அதே போல முடிந்த அளவு உங்கள் தலைப்பில் "Tamil" என்ற சொல் வருமாறு பார்த்துக்கொள்ளுங்கள் - எதற்கு என்று அறிய ப்ளாக்கர் நண்பரின் இந்த பதிவை பாருங்கள்: தமிழ் என்றால் ஆபாசமா?. உதாரணத்திற்கு, இந்த பதிவின் தலைப்பை முதலில் கீழ்க்கண்டவாறு வைக்குமாறு நண்பர் அப்துல் பாஷித்தை கேட்டுக் கொண்டேன்!

"SEO Tips Meaningful URL for Tamil Blogs"

பிறகு பப்ளிஷ் செய்த பின் உங்களுக்கு பிடித்த தமிழ் பெயராக மாற்றிக்கொள்ளுங்கள் என்ற அரிய வாய்ப்பையும் ;) அவருக்கு வழங்கினேன்! எனவே, நீங்கள் URL முகவரியில் காண்பது நான் வைத்த பெயர்! பதிவின் தலைப்பில் காண்பது 'ப்ளாக்கர் நண்பர்' வைத்த பெயர்! :) அப்புறம் என்ன தமிழ் தெரியாத யாராவது ஒருவர் "Meaningful URL for Blogs" அல்லது "SEO Tips" என்று தெரியாத்தனமாக தேடி வைத்தால் நம் தமிழ் பதிவும் அவர் தேடலில் இடம் பெற்று அவர் மண்டையை சொரிய வைக்கும்! ;)

என்ன புரிந்ததா நண்பர்களே?! :) வாழ்த்துக்கள்! நீங்கள் மேற்கண்ட பதிவை படித்ததின் மூலம் மேலும் சில SEO ஆலோசனைகளையும் பக்க விளைவுகளாக பெறுகிறீர்கள்! அவை என்ன என்று பார்ப்போம்! (யாருப்பா அங்கே தம் அடிக்க ஓடுவது?!)

2. அதிகமான Backlinks:

Backlink என்பது மற்றொரு தளத்தில் உங்கள் தளத்துக்கான இணைப்பு இருப்பது! இணைப்புக்களின் எண்ணிக்கை மற்ற தளங்களில் (குறிப்பாக பிரபல தளங்களில்) அதிகரிக்க அதிகரிக்க - உங்கள் தளத்தின் மதிப்பும், தேடு பொறியில் உங்கள் தளம் முன்னணியில் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்! அதே போல Alexa மற்றும் Google Page Rank-இல் உங்கள் தளம் முன்னேறும்! இந்த பதிவில் மட்டும் எனது ப்ளேட்பீடியா வலைப்பூவில் வெளியான மூன்று பதிவுகளின் URL-களை சுட்டிகளாக ஆங்காங்கே தெளித்துள்ளேன்! பிரபல தளமான ப்ளாகர் நண்பனில் இவ்வாறாக எனது Backlinks-இன் எண்ணிக்கையை கள்ளத்தனமாக அதிகரித்துள்ளேன்! :)

3. அருமையான Advertisement:

இதை படித்துக்கொண்டிருக்கும் ப்ளாகர் நண்பனின் - லட்சக்கணக்கான வாசக நண்பர்களிடம், ப்ளேட்பீடியா என்றொரு வலைப்பூ இருக்கிறது, அதில் கார்த்திக் என்ற ப்ளேடு பார்ட்டி படு மொக்கையாக எழுதி வருகிறார் என்ற (தமிழ்)நாட்டுக்கு தேவையான தகவலை பைசா செலவில்லாமல் விளம்பரம் செய்துள்ளேன்! இதன் மூலம் எனது வலைப்பூவை வாசிப்போர் எண்ணிக்கை குறைந்த பட்சம் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும்(!) வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!

இந்த முழுநீளப் பதிவை முழுதாய் படித்த வாசக நண்பர்களுக்கும், விருந்தினர் பக்கத்தில் விரிவாய் எழுத வாய்ப்பு வழங்கிய நண்பர் அப்துல் பாஷித்துக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் ப்ளேட்பீடியாவின் மனமார்ந்த நன்றிகள்! மாறாக ரொம்பவே கடித்திருந்தால் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! :)

Reference: Search Engine Optimization starter guide (PDF by GOOGLE)


கார்த்திக் சோமலிங்கா
About the Guest Author:
IT துறையில் பதினைந்து வருடங்களாக பணியாற்றி வரும் சகோ.கார்த்திக் சோமலிங்கா அவர்கள், அண்மையில் ப்ளேட்பீடியா என்ற வலைப்பூவை துவக்கி தமிழ் காமிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், மொக்கை போன்ற பல பிரிவுகளில் நகைச்சுவையாக எழுதிவருகிறார்! விரைவில் கதைகளை வெளியிட்டு கலக்க போகிறார்!


நீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

Post a Comment

28 Comments

 1. விருந்தினர் பக்கத்தில் எழுத வாய்ப்பு கொடுத்ததிற்கு மிக்க நன்றி நண்பரே! இருந்தாலும் என்னைப் பற்றிய உங்கள் அறிமுகத்தை நான் இவ்வாறு மாற்ற விரும்புகிறேன் ;)

  //
  IT துறையில் பதினைந்து வருடங்களாக பணியாற்றி வரும் சகோ.கார்த்திக் சோமலிங்கா அவர்கள், அண்மையில் ப்ளேட்பீடியா என்ற வலைப்பூவை துவக்கி தமிழ் காமிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், மொக்கை போன்ற பல பிரிவுகளில் நகைச்சுவையாக எழுதிவருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்! விரைவில் கதைகளை வெளியிட்டு கதிகலங்க வைக்கப்போவதாகவும் புரளி கிளப்பி வருகிறார்! :)
  //

  :) :) :)

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. நிறைய பேர் அறிய வேண்டிய தகவல்.முடிந்தால் தலைப்பில் நேரடியாக ஆங்கில வார்த்தைகளை சேர்த்தால் இன்னும் நலம்.

  ReplyDelete
  Replies
  1. முழுத் தலைப்பையும் ஆங்கிலத்தில் வைத்தால் - தமிழ்மணத்தில் பிரச்சினை ஆகி விடும் என்று ப்ளாக்கர் நண்பர் சொல்கிறார்! இதைப் பற்றி அவரே விளக்குவார்! :)

   Delete
 4. அருமையான தொழில்நுட்பத்தை எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்.. ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் தேவையான பதிவு.. பதிவெழுதிய கார்த்திக் சோமலிங்கா அவர்களுக்கு நன்றி..! (என்னா 'நையாண்டி'ய்யா உமக்கு..!)

  இவரையும் பதிவெழுத அனுமதித்த திரு அப்துல்பாசித் அவர்களுக்கு நன்றி...!

  (உங்களோட ஸ்டைல்ல கருத்து இருக்கா திரு கார்த்தி அவர்களே..!)

  ReplyDelete
  Replies
  1. //இவரையும் பதிவெழுத அனுமதித்த//
   அவர் அனுமதி தந்திராவிட்டால் 'வோர்ட்பிரஸ் நண்பன்'-இல் இப்பதிவு வெளியாகி இருக்கும் ;)

   Delete
 5. விருந்தினர் பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றி சகோ.! SEO என்னும் பெரிய விஷயத்தை மிக எளிதாக தங்கள் நகைச்சுவை பாணியில் அழகாக எழுதியுள்ளீர்கள்.

  //ப்ளாகர் நண்பனின் - லட்சக்கணக்கான வாசக நண்பர்களிடம், //

  //இதன் மூலம் எனது வலைப்பூவை வாசிப்போர் எண்ணிக்கை குறைந்த பட்சம் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கும்(!) //

  பகல் கனவு! :D :D :D

  ReplyDelete
  Replies
  1. நீங்க அப்படி சொல்லறீங்க! ஆனா உங்க கட்சியில இருந்து already ரெண்டு பேரு ப்ளேட்பீடியாவுக்கு தாவீட்டாங்க! ;) :)

   Delete
 6. இந்த வரிவிலக்கை தமிழ் பதிவர்களுக்கு சொன்ன கார்த்திக் அவர்களுக்கும், வாய்ப்பு தந்த அப்துல் பாஸித்துக்கும் தமிழ் பதிவர் உலகம் பட்டம் வழங்கும், மானாட மயிலாட புகழ் நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியும் நடைபெறும் என்பதை பதிவர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கம்பெனி CEO மாதிரி, பதிவுலக SEO அப்படின்னு கலக்கலா எதாவது பட்டம் கொடுங்கப்பா!

   Delete
 7. அஹ்ஹா நல்ல யோசனை, இப்படியெல்லாம் கூட வழி இருக்கிறதா, நன்றி பாஸ்.

  ReplyDelete
 8. Prabhu / Abdul Basith:

  In principle, this is Good information for all tamil bloggers.

  However, my comments are as follows :
  I am not sure if keyword in title are as relevant as it used to be (as far as google is concerned). Ask the owner of DP (DigitalPoint) Shawn Hogan. He will argue that it does not matter at all. He still has his forum URLs go with the default set up of V-Bulletin. DP still ranks fantastically for thousands of terms.

  3) The maximum title length as far as I know for google is 65 characters. Different search engines can have different lengths though. 39 is too low a number for any SE. Please verify your source.

  Anony Munna.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே!

   URL:
   http://www.bloggernanban.com/2012/06/seo-tips-meaningful-url-for-tamil-blogs.html

   நான் '39 characters limitation' என சொல்வது URL-இன் இந்த போஸ்ட் டைட்டில் பகுதியை மட்டும்!
   seo-tips-meaningful-url-for-tamil-blogs (.html சேர்க்காமல்!)

   இது கூகிள் ப்ளாக்கருக்கு பொருந்தும் - மற்ற தளங்களில் எப்படி என்று தெரியவில்லை! :) ஆனால் URL-இன் முழு நீளம் நீங்கள் சொல்வது போல் 65 character-களாக இருக்கலாம்! (ப்ளாக் டொமைனின் FQDN நீளம் கூட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால் - போஸ்ட் டைட்டிலின் நீளத்தை கட்டுப் படுத்தி இருப்பார்கள் என நினைக்கிறேன்!)

   Delete
  2. //I am not sure if keyword in title are as relevant as it used to be (as far as google is concerned)//
   as per Google it is relevant! See page 8 of the following SEO Starter Guide from Google:

   http://static.googleusercontent.com/external_content/untrusted_dlcp/www.google.com/en//webmasters/docs/search-engine-optimization-starter-guide.pdf

   PS:
   @Abdul Basith: Could you pl. add reference to this guide at the bottom of the post - before my intro block ;)

   Delete
  3. My Bad. I agree. Sorry to have confused the context.

   I was wrongly talking about the page title length.
   Thanks for the reply.

   Anony Munna.

   Delete
 9. விரிவான விளக்கத்திற்கு நன்றி ....

  ReplyDelete
 10. Thanks for sharing useful SEO Tips for our friends.I think its most useful all of us too..

  thanks & regards
  sam @ cuteparents

  ReplyDelete
 11. விரிவாய் விளக்கம் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. பயன்படுத்திப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 12. அருமையான பதிவு அதுக்கு ஓரு அழகான மொக்கை ,வாழ்த்துக்கள்

  என்னைக்கு என்னோட தளத்தில்

  http://asathalimelathaniyam.blogspot.com/2012/06/blog-post_22.html
  பேஸ்புக் பெண்கள் பெயரில் உலா வரும் போலி முகவரியை யை கண்டுபுடிக்க அருமையான சாப்ட்வேர்

  ReplyDelete
 13. புதிய தகவல் அன்பரே விருந்தாளருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. ம் சூப்பர்ராய் சொன்ன ப்லேடு அவர்களுக்கு ஒரு கைதட்டல் வாய்ப்பு கொடுத்த அப்துல் பாசித் அவர்களும் ஒரு கரகோஷம்(கரகாட்டம்மே ஆடலாம்)
  ப்லேடு ஒரு குசும்பு கோவாலு......

  ReplyDelete
 15. உபயோகமான பதிவு இந்த விருந்தினரின் பதிவு - நன்றி

  ReplyDelete
 16. விரிவான விளக்கத்திற்கு நன்றி ....

  ReplyDelete
 17. அருமையான தொழில்நுட்பத்தை எளிமையாக சொல்லியிருக்கிறீர்கள்

  ReplyDelete