ஒரு பதிவு ஒன்பது பலன்கள்


சில சமயங்களில் ஒரு பதிவை எழுத நினைக்கும் போது இவ்வளவு சிறியதாக உள்ளதே இதை ஒரு பதிவாக எழுத வேண்டுமா என்று நினைத்தது உண்டு. அப்படி நினைத்தவற்றை தொகுத்து ஒரே பதிவாக இங்கே தந்துள்ளேன்.


1. Photoshop க்கு ஐந்து மாற்று மென்பொருட்கள்

நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருளான போட்டோஷாப் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. போட்டோஷாப்பில் நாம் செய்யும் வேலைகளை மற்ற பல மென்பொருட்கள் மூலமும் நம்மால் செய்ய இயலும். அவை,

 1. GIMP
 2. GimpShop
 3. Krita
 4. Paint.net
 5. CinePiant


2. Non-Market Android Apps-களை இன்ஸ்டால் செய்வது எப்படி? 

Android அலைபேசிகளை பயன்படுத்தும் அனைவரும், பயன்பாடுகளை Google Play-யில் இருந்து மட்டுமே தரவிறக்கம் செய்து இருப்போம். வேறு இடத்தில் இருந்து தரவிறக்கம் செய்தவற்றை பயன்படுத்த கீழே உள்ளது போல செய்யவும். 

Menu -> Settings -> Applications இதில் "Unknown Sources" என்பதை கிளிக் செய்து விடவும் 

இப்போது உங்கள் "File Manager" ஐ ஓபன் செய்து தரவிறக்கம் செய்த பயன்பாட்டை இன்ஸ்டால் செய்து விடலாம். உங்கள் File Manager ஒத்துழைக்க மறுத்தால் ASTRO File Manager என்ற பயன்பாட்டை தரவிறக்கம் செய்து கொள்ளவும். 

3. Opera Extension-கள் இப்போது அலைபேசிக்கும்

இணைய உலவிகளை பயன்படுத்தும் எல்லோரும் ஏதேனும் ஒரு Extension (நீட்சி )பயன்படுத்தி இருப்போம். எல்லா உலவிகளிலும் இந்த வசதி உள்ளது. Opera ஆனது அலைபேசிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உலவி ஆகும்.  இது இப்போது Extension-களை அலைபேசியிலும் பய்னபடுத்த வழி வகை செய்துள்ளது. இதனால் நிறைய புதிய வசதிகள் அலைபேசிக்கும் கிடைக்கும். 

இதை Android அலைபேசியில் பயன்படுத்த - Opera Mobile Labs build with extensions for Android (.apk)

4. உங்கள் இணைய இணைப்பின் வேகத்தை கண்டுபிடிப்பது எப்படி? 


5. ஜிமெயிலில் Chat Box இடத்தை Right Side க்கு மாற்றுவது எப்படி? 

நிறைய பேர் தங்கள் ஜிமெயில் கணக்கில் நிறைய நண்பர்களை கொண்டுள்ளனர். அது இடது பக்கம் கீழே இருந்தால் ஆன்லைனில் உள்ள அனைவரையும் உங்களால் பார்க்க முடியாது. அதை தவிர்க்க வலது பக்கம் உங்கள் Chat Box ஐ வைத்து கொள்ளலாம். இதற்கு Settings >> Labs என்பதில் "Right-side chat" என்பதை "Enable" செய்து விடவும். 

6. ஆன்லைனில் தமிழ் புத்தகங்கள் வாங்க நம்பிக்கையான தளங்கள் 

இணையத்தில் நிறைய புத்தக பிரியர்கள் உள்ளனர். ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்வது குறித்து நிறைய பேருக்கு பயமும் உள்ளது. அப்படி வாங்க சில நம்பிக்கையான தளங்கள் கீழே 

 1. Udumalai.Com
 2. விகடன் - விகடன் நிறுவன புத்தகங்கள் மட்டும் 
 3. கிழக்கு பதிப்பகம் - முதலில் அவர்கள் பதிப்பக புத்தங்கள் மட்டும் தந்தவர்கள் இன்று அனைத்து பதிப்பகமும் கிடைக்க வழிவகை செய்துள்ளனர். 
உங்களுக்கு தெரிந்த மற்றவற்றை பின்னூட்டத்தில் நீங்கள் கூறலாம். 

7. ஆன்லைனில் வாங்கும் பொருட்களின் தற்போதைய விலை அறிய 

முன்பெல்லாம் கணினியோ, அலைபேசியோ வாங்க வேண்டும் என்றால் கடைக்கு சென்று பல மாடல்களை அலசி விட்டு பின்னர் வாங்குவோம். ஆனால் இன்று அனைத்தும் ஆன்லைன் மூலம் வாங்கும் நிலைக்கு வந்து விட்டோம். அப்படி வாங்கும் போது எந்த தளம் குறைந்த விலைக்கு தருகிறது என்று பார்த்து வாங்க  MySmartPrice  தளம் உதவுகிறது. 

8. ஆன்லைன் போட்டோஷாப் தளங்கள் 

போட்டோ எடிட் செய்யும் எந்த கணினியும் இல்லாத கணினிகளை பயன்படுத்தும் போது இணைய இணைப்பு இருந்தால் பின் வரும் தளங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். 

 1. Pixlr
 2. Splashup
 3. Photoshop Online Free
 4. OIE – Online Image Editor
 5. PicMonkey
9. ஒன்பது சிறந்த Cloud Storage தளங்கள் 

கூகுள் டிரைவ் வந்த பின் நிறைய பேர் Cloud Storage பற்றி தெரிந்துள்ளனர். ஆன்லைனில் உங்கள் Files, Folder சேமித்து வைக்கும் இவை இப்போது நிறைய உள்ளன, அவற்றில் சிறந்த ஒன்பது தளங்களை பார்ப்போம். 

 1. Google Drive - 5GB வரை இலவசம் 
 2. Dropbox -  2GB வரை இலவசம் 
 3. Box -  5GB வரை இலவசம் 
 4. SugarSync -  5GB வரை இலவசம் 
 5. Cubby -  5GB வரை இலவசம் 
 6. CX -  10 GB வரை இலவசம் 
 7. Mozy Stash -  2GB வரை இலவசம்
 8. Wuala  -  5GB வரை இலவசம் 
 9. Bitcasa


பிரபு கிருஷ்ணா
About the Guest Author:
கற்போம் குழும வலைப்பதிவை நிர்வகித்து தொழில்நுட்ப பதிவுகளை எழுதி வரும் சகோ. பிரபு கிருஷ்ணா அவர்கள் பலே பிரபு தளத்தில் தனது எண்ணங்களையும், Tech Hints என்னும் ஆங்கில தளத்தில் தொழில்நுட்பம் பற்றியும் எழுதி வருகிறார். பொறியியல் பட்டதாரியான இவர் தற்போது நண்பர்களுடன் இணைந்து "நேற்று வரை நீ" என்னும் குறும்படத்தை இயக்கி வருகிறார்.

நீங்களும் விருந்தினர் பதிவு எழுத விரும்பினால் அது பற்றிய விவரங்களை இங்கே கிளிக் செய்து பார்க்கவும்.

Post a Comment

18 Comments

 1. சின்ன சின்ன தகவல் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து தந்ததற்கு நன்றி இந்த ஒன்பதும் அனைவர்க்கும் பயன்படும் எனக்கு இதில் ரொம்ப பிடித்தது ஆறு மற்றும் ஏழு...பிரபு அவர்களின் குறும்படத்திற்கு காத்துகொண்டு உள்ளோம்...

  ReplyDelete
 2. பிரபு அவர்கள் தொழில்நுட்பதில் பிச்சி பின்னி எடுப்பார் என பார்த்தல் திரைப்பட துறையிலும் தன்னுடைய கைவரிசையை காட்டுவார் போல எப்படி இருந்தாலும் படம் நல்லபடியாய் மற்றும் வெற்றியடைய வாழ்த்துக்கள் காத்துகொண்டு உள்ளோம்.....

  ReplyDelete
 3. முதல் விருந்தினர் பதிவு எழுதியதற்கு வாழ்த்துக்களுடன் நன்றி சகோ.! அனைத்தும் பயனுள்ள தகவல்கள்.

  ReplyDelete
 4. இத்தனை நாள் எங்கிருந்தாய் பிரபு? முன்னமே அறிந்து கொள்ளாதது என் துரதரிஷ்டமே.

  ReplyDelete
 5. நல்ல தகவல்...
  நன்றி நண்பரே!!

  ReplyDelete
 6. நல்ல பல தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 7. மிகவும் பயனுள்ள பகிர்வு நண்பரே.

  ReplyDelete
 8. nanri nanbare payanulla thagaval......

  ReplyDelete
 9. ஒரு பதிவு ஒன்பது பலன்கள் இல்லை இல்லை நவரச சுவைகள்.

  நேற்று வரை நீ - டெக்னிக்கல் ரைட்டர்
  நாளை குறும்படம் வந்தால் தெரியும்
  நீ ஒரு டெக்டனிக்கல் டைரக்டர் என்று.

  அட்வான்ஸ் வாழ்த்துகள்

  ReplyDelete
 10. முதல் கெஸ்ட் போஸ்ட் எழுத அனுமதி அளித்த உங்களுக்கு நன்றி சகோ.

  கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி.

  @ chinna malai, ரவி சேவியர் :-))))))

  ReplyDelete
 11. முந்திய கருத்தில் அனுமதி என்பதை விட வாய்ப்பு என்பது சரியாக இருக்கும். (யோசித்த பின் தோன்றியது)

  ReplyDelete
 12. நல்ல தகவல்...
  நன்றி

  ReplyDelete
 13. உங்கள் தளத்தை புக்மார்க் செய்துவிட்டேன் நண்பா .... பயணம் தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete