திருடப்பட்ட 6.5 மில்லியன் LinkedIn Passwords

linked in

LinkedIn என்பது தொழில்முறை சமூக வலையமைப்பு  (Professional Social Networking) தளமாகும். மற்ற சமூக வலையமைப்பு தளங்கள் போல பொழுதுபோக்கிற்காக அல்லாமல் தொழில் சார்ந்த விசயங்களை பகிர்ந்துக் கொள்வதற்கு பயன்படுகிறது. இங்கு கிடைக்கும் நண்பர்கள் மூலமாக பல நேரம் நமக்கு வேலைகள் கூட கிடைக்கலாம்.

சமூக வலையமைப்பு தளங்களில் பிரபலமான இந்த தளத்தின் சுமார் ஆறரை மில்லியன் கடவுச்சொற்களை ஹேக்கர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். கடவுச்சொற்களுக்கான மின்னஞ்சல்களை அவர்கள் வெளியிடவில்லை என்றாலும் அந்த தகவல்கள் அவர்களிடம் உள்ளது. அவைகள் லின்க்டின் தளத்தின் கடவுச்சொற்கள் தான் என அந்த தளம்உறுதி செய்து மன்னிப்பும் கேட்டுள்ளது.

நம்மில் பலர் லின்க்டின் கணக்கு வைத்திருப்போம். அதில் உள்ளவர்கள் உடனடியாக கடவுச்சொல்லை மாற்றவும்.

கடவுச்சொல்லை மாற்ற:

LinkedIn தளத்தின் வலதுபுறம் மேலே உங்கள் பெயர் இருக்கும் இடத்தில் மவுஸை நகர்த்தி Settings என்பதை கிளிக் செய்யுங்கள்.


அங்கு Password என்பதற்கு அருகில்உள்ள Change என்பதை கிளிக் செய்யுங்கள்.


பிறகு உங்கள் பழைய கடவுச்சொல்லையும், புதிய கடவுச்சொல்லை இரண்டு முறையும் கொடுத்து Change Password என்பதை கிளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான்! புதிய கடவுச்சொல்லுக்கு மாறிவிடும்.

Post a Comment

10 Comments

 1. எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே ..!

  ReplyDelete
 2. எதையும் விட மாட்டன்களோ....நீங்களும் தான் எல்லா சமுக வலை அமைப்பிலும் கணக்கு வைத்து உள்ளீர் ஹீ ஹீ...

  ReplyDelete
  Replies
  1. ஆமா ., எங்களுக்கு எல்லாத்திலையும் அக்கௌன்ட் இருக்கு, அதைவிட முக்கியமான விஷயம் என்னென்னா அந்த அக்கௌன்ட்டை மெய்ன்டேன் பண்ண ஒரு அக்கௌன்டன்ட்டும் வச்சிருக்கோம் ஹி ஹி ஹி :D

   Delete
 3. தகவலுக்கு நன்றி அண்ணா

  ReplyDelete
 4. இந்த Linkedin தளத்தைப்பற்றி இன்னும் கொஞ்சம் விம் ப்ளீஸ். :)

  ReplyDelete
 5. பயனுள்ள தகவல் ! நன்றி நண்பரே !

  ReplyDelete
 6. எனக்கும் Linkedin பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஆவல்...
  கொஞ்சம் சொல்லுங்க!

  ReplyDelete