ஆப்பிள் நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம்


ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபேட் சாதனத்தின் மூன்றாம் பதிப்பை "The New iPad" என்ற பெயரில் வெளியிட்டது. உலகமெங்கும் ஐபேடை விற்பனை செய்துவரும் ஆப்பிள், ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யும் போது அதன் விளம்பரத்தில் சொல்லப்பட்ட ஒரு வாசகத்தால் தற்போது 2.25 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பதினொரு கோடி) அபராதம் கட்ட போகிறது.

பல புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபேடில் உள்ள முக்கிய வசதி 4G வசதியாகும். ஆனால் இது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சில மொபைல்நிறுவனங்களில் மட்டும் தான் வேலை செய்யும்.

ஆஸ்திரேலியாவில் விளம்பரம் செய்யும் போது "Wi-Fi + 4G" என்று விளம்பரம் செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இரண்டு மொபைல் நிறுவனங்கள் தான் 4G வசதியை தருகின்றன. ஆனால் அந்த இரண்டிலும் ஐபேட் 3 வேலை செய்யாது. இந்த விளம்பரம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துகிறது என்று ஆஸ்திரேலியாவில் உள்ள Australian Competition and Consumer Commission (ACCC) என்ற நுகர்வோர் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

அந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.25 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பதினோரு கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது



தற்போது  அந்த விளம்பரத்தை "Wi-Fi + Cellular" என்று மாற்றியுள்ளது. மேலும் விற்பனை செய்யப்பட ஐபேடை வாடிக்கையாளர்கள் விரும்பினால் திரும்ப தந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிஸ்கி:  இதை செய்தியை படிக்கும் போது "இந்த கிரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏழே நாளில் உலக அழகி ஆகலாம்" என்பது போன்ற விளம்பரங்கள் தான் நினைவிற்கு வருகிறது.

Post a Comment

13 Comments

  1. ஆப்பிளுக்கே ஆப்பா?

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,

    தன் நாட்டு மக்களின் மனித உரிமையை அமெரிக்க ஏகபோக முதலாளித்துவத்திடமிருந்து மட்டுமல்ல.......

    இந்தியாவில் தொலைந்த நீதி தேவதை ஆஸ்திரேலியாவில்..!

    ..... இவ்வாறு ஓர் இந்தியனின் மனித உரிமையை அதுவும் தன்னிடமிருந்தேகூட நிலைநாட்டிய பெருமை முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு உண்டு..!

    மீண்டும் மனித உரிமையை போற்றி உள்ள ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..!

    நல்லதொரு சமூக செய்தி பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ :-)))

    ReplyDelete
  3. போட்டு தாக்கு...எவனும் திரும்பி தரமாட்டனு நினைக்கிறன்....

    ReplyDelete
  4. ஆஹா முதலுக்கே மோசம் வந்திருச்சே :)

    ReplyDelete
  5. நம்மூர்ல 2G அப்படின்னு விளம்பரம் பண்ணாதான் பிரச்சினை, இல்லையா ஜீ? ;)

    ReplyDelete
  6. "இந்த கிரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏழே நாளில் உலக அழகி ஆகலாம்"
    Fair and Lovely தனது விளம்பரத்தில் இதே போல் விளம்பரம் செய்து பிறகு ஒருவர் தொடந்த வழக்கில் அபராதம் கட்டி, அந்த விளம்பரத்தையும் மாற்றி விட்டதாக வக்கீல்களுக்காக வெளிவரும் பத்திரிக்கையில் முன்பு ஒரு முறை படித்தேன்.(வெகுஜன பத்திரிக்கைகளில் அது சம்பந்தமான எந்த ஒரு செய்தியும் வரவில்லை. விளம்பரம் தரும் முதலாளி அல்லவா!)

    ReplyDelete
  7. என் ப்ளாக்கை தமிழ்மணத்தில் சேர்த்துவிட்டேன்தமிழ் மணம் என்னைய ஆட்டைய்ள்ள சேர்க்க மாட்டிகுது ... என் ப்ளாக் ல ஒரே ஒரு பதிவு போட்ருக்கேன் ... எப்போ எனது ப்ளாக் தமிழ் மனத்தில் வரும் ...

    ReplyDelete
  8. புதிய தகவல் ! நன்றி !

    பறக்கும் பைக் விரைவில்
    http://automobiletamilan.blogspot.in/2012/06/flying-bike-on-tamilan.html

    ReplyDelete
  9. அப்ப க்ரீம் கம்பெனி காரங்கள நீதியின் முன் நிக்கவைக்க வேண்டியது தான் பாக்கி ???????????????!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete