சமையல் பதிவுகளை தனித்துக் காட்டலாம்
கூகுள் தேடலின் அடுத்த பரிமாணமான Rich Snippets பற்றி ஏற்கனவே பார்த்தோம். அதில் ஒரு பகுதியாக நமது புகைப்படத்தை கூகுளில் தெரிய வைப்பது பற்றியும் பார்த்தோம். தற்போது சமையல் குறிப்புகளைப் பற்றிய நம்முடைய பதிவுகளை Rich Snippets முறையில் கூகுளில் தனித்து தெரிய வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.
சமையல் பதிவுகளை தனித்துக் காட்டுவதற்கு பதிவில் சமையல் பற்றிய சில விவரங்கள் (நிரல்களுடன்) கண்டிப்பாக இருக்க வேண்டும்.
1. சமையலின் பெயர் (Recipe Name)
2. சமையலின் புகைப்படம் (Photo)
3. தயார்  செய்வதற்கான நேரம் (அ) சமைப்பதற்கான நேரம் (அ) மொத்தம் ஆகும் நேரம் (அ) தேவையான பொருட்கள் [இவற்றில் ஏதாவது ஒன்று. ஆனால் தேவையான பொருட்களுக்கு பதிலாக நேரத்தை தேர்வு செய்யவும்.]
4. கலோரிகள் (Calories) - இது பற்றி நம்மில் பலருக்கு தெரியாததால் தவிர்த்துவிடலாம்.
5. விமர்சனம் (Review) - சமையலைப் பற்றிய வாசகர்களின் விமர்சனம். இது Ratings அடிப்படையில் கணக்கிடப்படும். [ப்ளாக்கரில் கணக்கிடும் வசதி இல்லையென்பதால் "நமக்கு நாமே" திட்டப்படி நாமாகவே மதிப்பு (Rating) கொடுக்கலாம்.]
இவை ஐந்தில் முதலாவது கண்டிப்பாக இருத்தல் வேண்டும். மற்ற நான்கில் ஏதாவது இரண்டு இருந்தால் போதுமானது.
பலவிதமான நிரல்கள் இருந்தாலும், தேவையான நிரல்களை மட்டும் சேர்த்து எளிதாக செய்வது பற்றி மட்டும் பார்ப்போம்.
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்:
1. நீங்கள் எப்போதும் போல சமையல் பதிவை Compose Mode-ல் எழுதுங்கள்.
2. எழுதி முடித்தப் பின் HTML என்பதை கிளிக் செய்யுங்கள்.
3. முதல் வரியில்
என்பதையும், கடைசி வரியில்
என்பதையும் சேருங்கள்.
4.  புகைப்படத்தின் நிரல் <img src="..... என்று தொடங்கும். அதில் img என்பதற்கு அருகே இடைவெளி விட்டு  itemprop="image" என்பதை சேருங்கள். [சமையல் முடித்தப்பின் உள்ள படத்தில் மட்டும் கொடுக்கவும்.]
5. பதிவில் உள்ள சமையலின் பெயருக்கு முன்னால்  என்பதையும், அதற்கு பின்னால் என்பதையும் சேருங்கள்.
6. பதிவின் இடையில் சமையலுக்கு தயாராவதற்கான நேரத்தையும், சமையல் நேரத்தையும் பின்வருமாறு கொடுங்கள்.
<meta itemprop="prepTime" content="PT20M"> <meta itemprop="cookTime" content="PT1H">
மேலுள்ள நிரலில் PT20M என்பதும், PT1H என்பதும் நேரத்தை குறிப்பதற்கான நிரலாகும்.  இதில் M என்பது நிமிடங்களையும், H என்பது மணி நேரத்தையும் குறிக்கும். [இது பதிவில் தெரியாது.]
7.  பிறகு ஸ்டெப் மூன்றில் சேர்த்த
என்பதற்கு முன்னால் பின்வருமாறு Review Rating சேருங்கள்.
இதில்  11 என்பதில் உங்களுக்கு விருப்பமானதையும், 4.5 என்பதில் ஒன்று முதல் ஐந்திற்குள் உங்களுக்கு பிடித்த எண்ணைக் கொடுங்கள்.
அவ்வளவு  தான்! சேர்க்க வேண்டிய நிரல்கள் முடிந்தது.
நிரல்களுடன் கூடிய பதிவு பின்வருமாறு இருக்கும்:
பிரியாணி என்பது அரிசியால் செய்யப்படும் உணவாகும். பிரியாணி வகைகளில் கோழி பிரியாணி, இறைச்சி பிரியாணி, முட்டை பிரியாணி, காய்கறி பிரியாணி என்று பலவகைகள் உண்டு
உணவு:சிக்கன் பிரியாணி
<meta itemprop="prepTime" content="PT20M">
<meta itemprop="cookTime" content="PT1H">
தேவையானவை:-
கோழி
மசாலா
அரிசி
செய்முறை:
அரிசியை முதலில் கழுவிக் கொள்ளுங்கள். அடுப்பில் சட்டியை வைத்து சூடு காட்டி கொஞ்சம் எண்ணெய் ஊற்றுங்கள். பிறகு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதக்குங்கள். வெங்காயம் போடுங்கள். கொஞ்ச நேரம் கழித்து மசாலாக்களை போடுங்கள். பிறகு கோழியை போடுங்கள்.  அதன்பின் அரிசியை போட்டு நன்றாக கிண்டுங்கள். கொஞ்ச நேரம் அப்படியே வைத்து அடுப்பை நிறுத்திவிடுங்கள்.
மேலுள்ளதில் சிவப்பு நிரல்கள் அவசியம் இருக்க வேண்டும். நீல நிரல்கள் நீங்கள் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.
சரி, நாம் சரியாக சேர்த்திருக்கிறோமா? என்பதை எப்படி அறிவது?
HTML Mode-ல் உள்ள எல்லா நிரல்களையும் காப்பி செய்து, http://www.google.com/webmasters/tools/richsnippets என்ற முகவரிக்கு சென்று, அங்குள்ள பெட்டியில் கொடுத்து Preview என்பதைக் கொடுத்தால் சரியாக உள்ளதா? என்று காட்டும்.
HTML Mode-ல் வைத்து எழுதினோம் அல்லவா? அங்கிருந்துக் கொண்டே Preview என்பதை அழுத்தி பதிவு சரியாக தெரிகிறதா? என்று பார்க்கவும். சரியாக இருந்தால், Compose Mode-கு மாறாமலேயே (Labels எல்லாம் கொடுத்தப்பின்) Post செய்யுங்கள்.
பதிவு எழுதிக்கொண்டிருக்கும்போது Compose Mode-கு மாறினால் சில நிரல்கள் காணாமல் போய்விடும்.
நீங்கள் கூகுளில் "சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?" என்று தேடினால் முதல் பக்கத்தில் என்னுடைய சோதனை பதிவு புகைப்படத்துடன் பின்வருமாறு தெரியும்.
[அந்த பதிவில் Rating நிரல் சேர்க்கவில்லை. அதனால் தெரியவில்லை]
முதல் முறை இவ்வாறு செய்யும்போது சிரமமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து இதை செய்தால் எளிதாகிவிடும். நிரல்களை சேர்க்கும் முன் எழுதிய பதிவை காப்பி செய்து வேறு இடத்தில் சேமித்து வையுங்கள். பிழை ஏற்பட்டால் அது உதவும்.
முடிந்தவரை எளிதாக சொல்ல வேண்டும் என்பதற்காக பலமுறை திருத்தி இந்த பதிவை எழுதியுள்ளேன். புரியவில்லை எனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
Post a Comment
20 Comments
1. சூப்பர் பதிவு நன்றி
ReplyDelete
2. எதிர்பார்த்த தேடிய பதிவு சகோ
தமிழில் எளிமையாக விளக்கியதற்கு நன்றிகள்
ReplyDelete
3. கூகுள்ல பிரியாணி வரும்னு பார்த்தா, செய்தி மட்டும் தான் வருது ;-)
ReplyDelete
4. அண்ணா சூப்பர்
ReplyDelete
5. பலருக்கும் பயனுள்ள பகிர்வு!
ReplyDelete
6. அருமையான செய்தி அண்ணா ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் நிரல் இணைகனும் போல...மேலே உள்ள தோசை,இட்லி படம் சூப்பர் எந்த கடையில் பிடித்தீர்கள்....கூகிள் கடையில் தானே.....
ReplyDelete
Replies
1. நன்றி தம்பி! கூகிள் கடையில் வாங்கியது தான்!
Delete
7. சலாம் பாஸித்! அருமையான பதிவு. மீண்டும் பொறுமையாக படித்தால் சில சந்தேகங்கள் வரலாம், அதனால் பிறகு அவற்றை கேட்கிறேன் :) இப்போதைக்கு ஒரு சந்தேகம்.
//சிக்கன் பிரியாணி செய்வது எப்படி?// என epic browser ல் தேடினால் உங்களின் சோதனை பதிவு நீங்கள் மேலே காட்டியுள்ளபடி முதல் பக்கத்தில் வரவில்லை. chrome ல் தேடினால் முதல் பக்கத்தில், முதல் லிங்கில் வருகிறது, ஆனால் புகைப்படத்துடன் தெரியவில்லை. அப்படியானால் ஒவ்வொரு browser க்கும் வித்தியாசப்படுமா?
ReplyDelete
Replies
1. வ அலைக்கும் ஸலாம் சகோ.!
google.com என்ற முகவரியில் மட்டும் தான் படமாக வரும். மற்ற கூகுள் டொமைனில் தற்போது தெரியாது!
Delete
8. விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !
ReplyDelete
9. நல்ல பதிவு...
இதே போல வேறு எந்த வகை பதிவுகளைச் செய்யலாம்??
கொஞ்சம் உதவுங்க!
ReplyDelete
Replies
1. கூகுள் தேடுபொறியின் அடுத்த பரிணாமம் என்ற பதிவில் அனைத்து வகைகளையும் குறிப்பிட்டுள்ளேன் நண்பா!
Delete
2. நன்றி நண்பரே!
Delete