கூகுள் தேடுபொறி என்றும் முதலிடத்தில் இருப்பதற்கு காரணம் அது எப்பொழுதும் தனது தேடல் முடிவுகளை மாற்றம் செய்துக் கொண்டே இருப்பது தான். தற்போது Knowledge Graph என்ற பெயரில் மேலும் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது கூகிள்.
Knowledge Base:
பொதுவாக தேடல் பொறிகளில் நாம் ஏதாவது வார்த்தைகளை தேடினால் அந்த வார்த்தைகளை குறியீடுகளாக (Keywords) எடுத்துக் கொண்டு அது தொடர்பான இணையப் பக்கங்களை நமக்கு காட்டும். இந்த முறையினை தான் கூகிளும் பின்பற்றி வந்தது.
தற்போது Knowledge Graph என்ற பெயரில் தேடும் வார்த்தைகள் பற்றிய தகவல்களை தேடல் முடிவு பக்கத்தில் பக்கப்பட்டியில் (sidebar) காட்டப்போகிறது.
உதாரணத்திற்கு Taj Mahal என்று தேடினால் இந்த இரண்டு வார்த்தைகளைக் கொண்ட இணையப் பக்கங்களை தேடல் முடிவில் காட்டும். இனி இவற்றுடன் சேர்த்து பக்கப்பட்டியலில் (Sidebar) Taj Mahal பற்றிய தகவல்களையும், அது தொடர்பான வேறு தேடல்களையும் காட்டும்.
மேலும் Google Knowledge Graph மூலம் பிரபலங்கள், முக்கிய கட்டிடங்கள், முக்கிய அடையாளங்கள் (Landmarks), திரைப்படங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி உடனடித் தகவல்களை நாம் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் நமது நேரம் மிச்சமாகும்.
கூகிளின் அறிவு வரைபடத்தில் (Knowledge Graph) இதுவரை 500 மில்லியன் பொருட்களும் (Objects) 3.5 மில்லியன் தகவல்களும் சேமிக்கப்பட்டுள்ளன.
Update: தற்போது இந்த வசதி அனைவருக்கும் வந்துவிட்டது.
கூகுள் = விக்கிபீடியா + என்சைக்ளோபீடியா
டிஸ்கி: வேறொரு கூகிள் உடனடித் தேடல்கள் பற்றி நேற்று பாதி எழுதிய நிலையில் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது கூகுள். மேலும் சில உடனடி தேடல்கள் பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.
19 Comments
thanks for information
ReplyDeleteஅருமையான வசதி தகவல் சொன்னதற்கு நன்றி GOOGLE NO.1
ReplyDeleteபயனுள்ள அருமையான பதிவு
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 3
ReplyDeleteஒவ்வொரு நாளும் பயங்கரமா டெவலப்பாகி போய்கிட்டே இருக்கு கூகிள் தேடுபொறி ..!
ReplyDeleteinformative post
ReplyDeletethanks friend
ReplyDeleteஇது மிகவும் பயனுள்ள சேவையாக இருக்கும்!!
ReplyDeleteஒரு சந்தேகம்.. கூகிள் ஏன் இவற்றை முதலில் அமெரிக்காவில் மட்டும் வெளியிடணும்??
புதிய தகவல் அன்பரே
ReplyDeletearumayaana pathivu baasith
ReplyDeletecome to my blog www.nihlas.co.cc
thakavalukku nandri basith avargale.
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா ....
ReplyDeleteஅருமையான தகவல் இப்போது வரை எப்படி இந்த தகவல் உங்களுக்கு கிடைத்தது என கேட்டால் விக்கிபீடியா இருக்க கவலை என்ன என்றவர்கள் இனி கூகிள் knowledge graph இருக்க கவலை என்ன என இனி கூறுவார்கள்.....
ReplyDeleteநேற்றிரவே இதை பார்த்தேன், நல்ல வசதி.
ReplyDeleteதகவலுக்கு நன்றிகள்......
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவலாக அனைவருக்கும் இருக்குமென்று நம்புகின்றேன். பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteஹ்ம்ம்ம்...இதற்கும் அமெரிக்காவுக்குத்தான் முதலிடமா??
ReplyDeletethank you
ReplyDeletethank you
ReplyDelete