இந்தியாவில் கூகுள் வணிக புகைப்படங்கள்


கூகுள் நிறுவனம் மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு வசதிகளை தந்துக் கொண்டிருக்கிறது. அவற்றில் வணிகர்களுக்கான ஒரு வசதி Google Places. இது வணிகர்கள் தாங்கள் வைத்திருக்கும் உணவகங்கள், அழகு நிலையங்கள், ஷோரூம்கள் போன்றவற்றை கூகுளில் பதிவு செய்வதற்கான வசதியாகும்.

இதன் மூலம் கூகுள் தளத்தில் அல்லது கூகுள் வரைபடத்தில் (Google Map) உங்கள் வணிகம் தொடர்பாக தேடப்படும்போது உங்கள் நிறுவனம் முன்னிலையில் வரும். இதனால் உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

உதாரணத்திற்கு சென்னையில் உள்ள ஷாப்பிங் மால்களை தேடினால் கடைகளுடன் அவற்றின் முகவரிகளும், வரைபடமும் காட்டும்.


உங்கள் நிறுவனத்தையும் பதிவு செய்ய http://www.google.com/places/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் நிறுவனம் பற்றிய தகவல்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பிறகு உங்கள் நிறுவனத்தை உறுதிப்படுத்த Verification Code-ஐ உங்கள் நிறுவன முகவரிக்கோ அல்லது உங்கள் மொபைலுக்கோ அனுப்புவார்கள். அதனைக் கொடுத்து உறுதிப்படுத்த வேண்டும். உறுதியானதும் உங்கள் நிறுவனம் கூகுள் தேடல் பக்கத்திலும், வரைபடத்திலும் தெரியும்.

இந்த வசதியை 2010-ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தியது. இதில் மேலும் ஒரு கூடுதல் வசதியாக Business Photos என்றொரு வசதியையும் அப்போது அறிமுகப்படுத்தியது. அதாவது நம்முடைய கடையின் உட்புற தோற்றத்தை 360 டிகிரியில் புகைப்படங்களாக எடுக்கும் வசதி. இதற்கு நாம் விண்ணப்பித்தால் கூகுள் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட புகைப்படக்காரர் நமது கடைக்கு வருகை தந்து 360 டிகிரியில் புகைப்படம் எடுப்பார். நமது கடையின் உள்புற தோற்றம், வியாபார பொருட்கள், உணவகம் என்றால் பரிமாறப்படும் உணவு வகைகள் போன்றவைகள் இந்த புகைப்படங்களில் வரும். வாடிக்கையாளர்கள் இணையத்தில் இருந்துக் கொண்டே உங்கள் கடைகளில் நேரடியாக வருகை தருவது போல பார்க்கலாம்.

இது  பற்றிய கூகுள் விளம்பரம்:



சில நாடுகளில் மட்டுமே இருந்த இந்த வசதி தற்போது இந்தியாவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆரம்பமாக ஹைதராபாத் நகரத்தில் மட்டுமே இந்த வசதி உள்ளது. விரைவில் அனைத்து நகரங்களுக்கும் வரும் என கூறியுள்ளது கூகுள். தற்போது Restaurants, Cafes, Spas, Salons, Gyms, Showrooms மற்றும் retail stores ஆகியவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

உங்கள் நிறுவனத்திற்கான வணிக புகைப்படங்கள் எடுப்பதற்கு விண்ணப்பிக்க https://services.google.com/fb/forms/businessphotosrequestshoot/ என்ற முகவரிக்கு செல்லவும்.

வணிக புகைப்படங்கள் எப்படி தெரியும் என்பதை கீழே உள்ளதை பார்த்தால் புரியும். மவுஸ் மூலம் கிளிக் செய்து கடையை சுற்றி பார்க்கலாம்.

Update

நீங்களும் கூகிளின் நம்பக புகைப்படக்காரராக (Google Trusted Photographer) ஆக http://maps.google.com/intl/en/help/maps/businessphotos/photographers/ என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

22 Comments

  1. நன்றி சகோ, நல்ல தகவல்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ.!

      Delete
  2. அருமையான தகவல் அண்ணா இதில் கல்லூரி பற்றியும் போடலாம் தானே(உடனே என்னிடம் உள்ளதா என கேட்க்க வேண்டாம்)சும்மா ஒரு தகவலுக்கு...

    ReplyDelete
    Replies
    1. இல்லை சகோ.! கல்லூரி இதில் வராது.

      Delete
  3. கூகிள் ஓவர் டெவலப்பு .. :)

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் நண்பா!

      Delete
  4. ப்ளேட்பீடியா சர்வதேச தலைமையக முகவரியை இணைக்கலாமா நண்பரே? ;)

    ReplyDelete
    Replies
    1. உகாண்டாவை இன்னும் பட்டியலில் சேர்க்கவில்லை நண்பரே!
      :D :D :D

      Delete
  5. சப்பா..................நல்ல வேல....

    ReplyDelete
    Replies
    1. :) :) :)

      வருகைக்கு நன்றி நண்பா!

      Delete
  6. நல்ல தகவலுக்கு நன்றி நண்பரே !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி நண்பரே!

      Delete
  7. கூகிளின் புகைப்படக்காரராக என்ன செய்ய வேண்டும்..?! :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல கேள்வி நண்பா! கூகிளின் நம்பக புகைப்படக்காரராக (Google Trusted Photographer) ஆக http://maps.google.com/intl/en/help/maps/businessphotos/photographers/ என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

      Delete
  8. ஹாய் அண்ணா..

    வாழ்த்துக்கள் முதலில்..

    மிகவும் அருமையான பதிவுகள்..



    கிட்டத்தட்ட பிளாக்கர் நண்பன் பார்த்து தான் ப்ளாக் பற்றிய அநேக விஷயங்களை தெரிந்து கொண்டேன், திருத்தி கொண்டேன், இணைத்து கொண்டேன்.



    அலெக்ஸ்சா ரேன்க்கினை பற்றி கூறி இருந்தீர்கள். எல்லாம் இணைந்தாகி

    விட்டது ஆனால் links not available என்று காட்டுகிறது..

    என்னுடைய கேள்வி

    1. அப்பிடி என்றால் என்ன?

    2. links கட்டாயம் தேவையா?

    3. அப்பிடி என்றால் எப்பிடி இணைப்பது?

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோ.!

      alexa-வில் links என்பது எத்தனை தளங்களில் உங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளார்கள் என்பதை குறிக்கும். அது அப்டேட் ஆக சில வாரங்கள் ஆகாம். பொறுத்திருந்து பார்க்கவும்.

      Delete
  9. உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொது எனது இந்த தளத்திற்கு (http://ideasofharrypotter.blogspot.com/) வந்து

    திருத்தங்கள் ஆலோசனைகள் இருந்தால் கூறவும் நன்றி..

    ReplyDelete
  10. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  11. அவர்களின் டவெலப்மென்ட் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது நண்பா...

    தகவலுக்கு நன்றி நண்பா..

    ReplyDelete
  12. உங்கள் இமெயில் ஐடி கிடைக்குமா? நன்றி.

    ReplyDelete
  13. நல்ல தகவல்...
    இதன் மூலம் பல நிறுவனங்கள் பயன்டையும்!


    //கல்லூரி பற்றியும் போடலாம் தானே// ---> // இல்லை சகோ.! கல்லூரி இதில் வராது.//

    என்னங்க.. இன்று பல பள்ளிகளும், கல்லூரிகளும் தானே முக்கிய வணிக வளாகங்கள்?

    ReplyDelete