ஜிமெயில் ஹேக் பற்றிய பதிவில் நண்பர்கள் ஃபெரோஸ் கான் அவர்களும், வைரை சதீஷ் அவர்களும் ஒரு சந்தேகம் கேட்டிருந்தனர். அதாவது நமக்கு வரும் குழும மெயில்களையோ, அல்லது வேறு மெயில்களையோ இன்பாக்ஸில் வருவதை தவிர்த்து தானாக அழிப்பது அல்லது தனி லேபில்ஸ் கொடுத்து தனியாக வைத்திருப்பது பற்றி கேட்டிருந்தனர். அதற்கு
Filter வசதி நமக்கு உதவி செய்கிறது.
[படங்கள் சரியாக தெரியவில்லையெனில் அதனை கிளிக் செய்து பார்க்கவும்.]
நமக்கு வரும் குழும மின்னஞ்சல்களிலோ அல்லது மற்ற மின்னஞ்சல்களிலோ மேலே உள்ள
More என்பதை கிளிக் செய்து
Filter messages like this என்று கொடுங்கள்.
இங்கு தான் தேவையில்லாத மின்னஞ்சல்களை எப்படி வடிகட்ட (Filter) வேண்டும் என்று கொடுக்க வேண்டும். இவற்றில் உள்ள முக்கிய தேர்வுகள்,
From - வடிகட்ட நினைக்கும் மின்னஞ்சல் முகவரி கொடுங்கள். உதாரணத்திற்கு குழும மெயில் முகவரி.
Subject - Subject பகுதியில் எந்த வார்த்தை இருந்தால் வடிக்கட்ட வேண்டும்? என்று கொடுங்கள்.
Has the words - மின்னஞ்சலில் எந்த வார்த்தைகள் இருந்தால் வடிக்கட்ட வேண்டும்? என்று கொடுங்கள்.
இவற்றை கொடுத்துவிட்டு
Create filter with this search என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு பல்வேறு தேர்வுகள் வரும். வடிகட்டிய மெயில்களை என்ன செய்ய வேண்டும்? என்பதை அங்கே கொடுக்க வேண்டும். அவற்றில் சில,
Skip the inbox (Archive it) - இன்பாக்ஸில் வராதவாறு செய்வதற்கு.
All Mails லேபிளை கிளிக் செய்தால் இந்த மெயில்களை பார்க்கலாம்.
Apply the label - வடிகட்டும் மின்னஞ்சல்களுக்கு லேபிள் கொடுப்பதற்கு. இதனை கொடுத்தால் வடிகட்டிய மின்னஞ்சல்களை எளிதில் தேடலாம்.
Delete it - வடிகட்டும் மின்னஞ்சல்களை தானாக அழிப்பதற்கு.
உங்கள் தேர்வுகளை கொடுத்தப்பின்
Create Filter என்பதை கிளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் தேர்வுகளின்படி மின்னஞ்சல்கள் வடிகட்டப்படும். இதனால் நமக்கு பிடிக்காத மெயில்கள் இன்பாக்ஸில் தெரிவதை தவிர்க்கலாம்.
நீங்கள் செய்த
Filter-களை மாற்றம் செய்வதற்கோ அல்லது நீக்கம் செய்வதற்கோ,
Gmail Settings => Filters பகுதியில் சென்று செய்துக் கொள்ளலாம்.
15 Comments
அவசியம் பயன்படும் பதிவு. நன்றி அப்துல்
ReplyDeleteThank Usefull For Gmail Users
ReplyDeleteநல்ல தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள்.
ReplyDeleteஇதே வசதியைப் பயன்படுத்தி நமக்கு வரும் அஞ்சல்களைக் குழுபிரித்தும் வைத்துக்கொள்ளலாம்!
thanks for sharing
ReplyDeleteவாட் எ கிரேட் இன்பர்மேசன் நண்பா.?, I mean what a great information friend.?
ReplyDeletethanks for sharing
ReplyDeleteநன்றி நண்பா.நான் Filter பன்னிட்டேன்
ReplyDeleteவிளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !
ReplyDeleteஅருமை அண்ணா நன்றி
ReplyDeleteநிச்சயம்
ReplyDeleteநல்ல
தகவல்.
நானும்
செய்து
பார்க்கிறேன்.
பயனுள்ள பதிவு.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவலை மற்றவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நோக்கிலே படைக்கப்பட்ட படைப்பு அருமை.
ReplyDeleteநன்றி
பயனுள்ள பதிவு. நன்றி சகோ!
ReplyDeleteஇனிமேல் தேவையில்லாத மெயிலை வடிகட்டிட வேண்டியதுதான்...தகவலுக்கு நன்றி நண்பா..
ReplyDeleteசீனாவில் பொருள்களை மலிவு விலைக்கு எவ்வாறு "விற்கப்படுகிறது" - பகுதி 1 ...
அஸ்ஸலாமு அலைக்கும். மிகவும் அழகான முறையில் விளக்கி என் சந்தேகத்தை தீர்த்ததற்கு ரொம்ப நன்றி சகோ. தோழமையுன்
ReplyDelete