நம்மை முட்டாளாக்கும் கூகுள்?


 கூகுள் எப்பொழுதும் புதுப்புது வசதிகளை அடிக்கடி தந்துக் கொண்டிருக்கும். அதே சமயம் நம்மை முட்டாளாக்குவதற்கும் அது தவறவில்லை. வருடந்தோறும் நம்மை முட்டாளாக்கும் கூகுள் தற்போதும் சில வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றி இங்கு பார்ப்போம்.


முட்டாளாக்கும் புது வசதிகள்(?):

Gmail Tap:நாம் கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் QWERTY கீபோர்ட் 1874-ல் கண்டுபிடிக்கப்பட்டு இன்று வரை எவ்வித மாற்றமுமின்றி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது அதனை மாற்றி Gmail Tap என்னும் புதிய உள்ளீடு முறையை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. 26 ஆங்கில எழுத்துக்களை சுருக்கி இரண்டு எழுத்துக்களாக மாற்றம் செய்துள்ளது. இது ஆன்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களுக்கான மென்பொருள் ஆகும். இது Morse Code முறையை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றிய வீடியோவை பார்க்கவும்.

Update: இது பொய்யான தகவல் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் இது வேலை செய்கிறது. ஆன்ட்ராய்ட் மென்பொருளை  பதிவிறக்கம் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Chrome Multitask:1968-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட மவுஸ் (Mouse) கணினி பயன்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் ஒரு மவுஸை மட்டும் தான் பயன்படுத்த முடியும். தற்போது ஒரே நேரத்தில் பல மவுஸ் பாயிண்ட்களை பயன்படுத்தி பல்வேறு செயல்களை செய்ய Multitask என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை சோதனை செய்து பார்க்க இங்கே க்ளிக் செய்து அங்குள்ள Try Multi Task mode என்பதை க்ளிக் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு வீடியோவை பாருங்கள்.

இவை இரண்டும் உண்மை இல்லை. முட்டாள்கள் தினம் (????) என்று கொண்டாடப்படும் ஏப்ரல் ஒன்றான இன்று கூகுள் வெளியிட்டுள்ள விளையாட்டு செய்திகள் ஆகும். இது போன்று வருடந்தோறும் ஏப்ரல் ஒன்றாம் தேதி பல வித்தியாசமான செய்திகளை வெளியிடும்.

10 கருத்துக்கள்:

 1. HAPPY ஏப்ரல் FOOL DAY

  ReplyDelete
 2. எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க...

  ReplyDelete
 3. அவிங்களே ஆக்கிட்டாய்ங்களா......

  ReplyDelete
 4. என்னடா கலைல இருந்து ஒன்னுமே நடக்கலையேன்னு நெனச்சேன், நடந்துருச்சு, நடத்திட்டாய்ய்ய்ய்ங்ங்ங்க!

  ReplyDelete
 5. நல்ல பதிவு நன்பா

  ReplyDelete
 6. நல்ல பதிவு நண்பரே! நான் உங்களை ஏற்கனவே என்னுடைய circle ல் சேர்த்துவிட்டேன். எனினும் விரைவில் 500 followers கிடைத்து, அந்த பதிவை இட வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 7. ஏப்ரல் மாதம் முதல் நாள் இங்கும் விளையாட்டா! :- )

  ReplyDelete
 8. பயனுள்ள பகிர்விற்கு நன்றிங்க..

  ReplyDelete
 9. என்ன ஏமாற்றியது நீங்கள் தான்

  ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers