பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்


 சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

Dailymotion

Yahoo
மேலே உள்ளது நண்பர்கள்  பார்த்த வீடியோ எனவும், படித்த கட்டுரை எனவும் பேஸ்புக்கில் வந்த செய்தி. இது போன்று ஆபாச படங்கள் பார்த்ததாகவும் செய்தி வரும். இதை நம்பி நாம் க்ளிக் செய்தால் பின்வருமாறு காட்டும்,


எந்தவொரு பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்தினாலும் இது போல காட்டும். அதாவது உங்கள் பேஸ்புக் கணக்கை அந்த அப்ளிகேசன் அணுகுவதற்கு அனுமதி கேட்கும். மேலுள்ள படத்தை நன்றாக பாருங்கள்.

This app may post on your behalf, including videos you watched, films you watched and more.
அதாவது  நீங்கள் அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தினால் உங்கள் கணக்கில் இருந்து செய்திகளை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பும். இதன் மூலம் Spam செய்திகளை அனுப்புவதற்கு நீங்களே அனுமதி அளிக்கிறீர்கள்.

அவ்வாறு  க்ளிக் செய்த பின் அது அந்த தளத்திற்கு சென்றுவிடும். அங்கு நீங்கள் எதை க்ளிக் செய்கிறீர்களோ அவையும், சில சமயம் க்ளிக் செய்யாதவைகளும் நீங்கள் பார்த்ததாக உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கு செய்தி அனுப்பிவிடும்.

இதனை  தவிர்ப்பது எப்படி?

இவற்றிலிருந்து தவிர்க்க வேண்டுமெனில் இது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தவறுதலாக க்ளிக் செய்தாலும் Dailymotion, Yahoo போன்ற Third-Party Applications-களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே நீங்கள் க்ளிக் செய்து அனுமதி கொடுத்துவிட்டீர்கள் என்றால் அந்த அப்ளிகேசன்களை உங்கள் கணக்கிலிருந்து நீக்கிவிடுங்கள்.

அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

உங்கள் பேஸ்புக் கணக்கில் Account settings என்பதை க்ளிக் செய்து, இடது புறம் உள்ள Apps என்பதை க்ளிக் செய்தால், நீங்கள் பயன்படுத்திவரும் அனைத்து அப்ளிகேசன்களையும் காட்டும்.


மேலே உள்ள Dailymotion, Yahoo என்பதற்கு பக்கத்தில் உள்ள X குறியீடை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள். இது போன்ற அனைத்து அப்ளிகேசன்களையும் நீக்கிவிடுவது சிறந்தது.

என் பரிந்துரை: எக்காரணம் கொண்டும் Third Party Application-களை பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

சிறு வேண்டுகோள்: இது பேஸ்புக்கில் தற்போது பரவிவரும் முக்கிய பிரச்சனை என்பதால் தாங்கள் பேஸ்புக்கில் இதனை பகிர்ந்தால் பலர் இதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள்.

Post a Comment

36 Comments

 1. thanks for the valuable information

  ReplyDelete
 2. MY DEAR ABDUL BASITH,

  GREAT VITAL INFORMATION REVEALED.

  THIS SOCIAL SERVICE FROM YOU IS MUCH APPRECIATED.

  KEEP IT UP.

  REGARDS.
  VANJOOR

  ReplyDelete
 3. நல்ல தகவல் சகோ.

  ஆனால் Daily Motion தளத்தை பொறுத்த வரை இது கட்டாயம் நம்மவர்கள் பார்த்த/கிளிக் செய்த பிரச்சினையால் நிகழ்ந்ததாக தான் இருக்கும்.

  தப்பு செய்தாலும் சரியா செய்யணும் போல ;-)

  ReplyDelete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  எனக்கு இது போன்ற கசப்பான அனுபவம் நிக்ழ்ந்திருக்கிறது, ஆனால் அது நிக்ழ்ந்தது ஒரு கயவனால், அவன் என்னுடைய பாஸ்வோர்டை ஹேக் செய்து பிறகு இது போன்ற வீடியோக்களை சேர்த்துள்ளான்.

  சேர்த்த விஷயத்தை எண்னுடைய நண்பர் லண்டனில் இருந்து டெலிபோனில் சொன்ன போது தான் அதை அழித்து விட்டு பேஸ்புக் சகோக்களிடமும் விஷயத்தை எடுத்து சொல்லி எச்சரிக்கையாய் இருக்க சொன்னேன்.

  தற்போது பேஸ்புக் ஹேக்கிங்கும் அதிகமாக செய்யப்படுகிறது. பாஸ்வேர்டை கடினமாக வைத்து அக்கௌண்டை பாதுகாத்து கொள்ளவும்.

  ReplyDelete
 5. கண்டிப்பாய் எல்லோருக்கும் பயண்படும்.

  ReplyDelete
 6. நன்றி அண்ணா...

  ReplyDelete
 7. Very good information Bro.. Thanks.

  ReplyDelete
 8. Thank you for the information

  ReplyDelete
 9. லேசா கண்ணசந்தாலும் ..நம்ம மானம் பேஸ்புக்குல ஏறி கடல் கடந்து கண்டங்கள் தாண்டி ரிப்பேர் ஆகிவிடும்ங்றத எச்சரிக்கையோடு உணர்த்திய நண்பருக்கு நன்றி ..!

  ReplyDelete
 10. மிக அருமையான பகிர்வு

  ReplyDelete
 11. Thanks friend . I share my fb account !!!

  ReplyDelete
 12. தகவலுக்கு நன்றி!. உடனடியாக தேவையில்லாத பல அப்ளிகேஷன்களை நீக்கி விட்டேன். நீங்கள் குறிப்பிட்டது உட்பட. சுந்தர்வேல்

  ReplyDelete
 13. விழிப்புணர்வு பதிவு அன்பரே நன்றி

  ReplyDelete
 14. நல்ல தகவல்..நன்றி நண்பா...

  ReplyDelete
 15. பயனுள்ள செய்தி.நன்றி நண்பரே.

  ReplyDelete
 16. நல்ல பதிவு நண்பரே

  ReplyDelete
 17. namakku facebook la a/c illai jally.

  ReplyDelete
 18. நம்மை முட்டாள் ஆக்கும் கூகுள் !

  Read This Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/profit-sharing-phenomenon.html

  ReplyDelete
 19. எச்சரிக்கைக்கு நன்றி.

  ReplyDelete
 20. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். நன்றி.

  ReplyDelete
 21. my friends are facing this problem thank sir!

  ReplyDelete
 22. மிகவும் பயனுள்ள தகவல். நானும் சில அனுமதிகளைக் கொடுத்துள்ளேன் அதை நீக்க வேண்டும். தங்களின் சேவை மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. VERY VERY USEFUL POST FOR FACE BOOK INNOCENTS.

  ReplyDelete
 24. அல்லாஹ அருல்புரிவானகவும்,

  தகவழ்களுக்கு,நன்றி,

  ReplyDelete
 25. மிக்க நன்றி சகோ.. நானே இது என்னான்னு தெரியாம கிளிக் செய்துட்டேன் பின்பு பயந்துதான் டீக்கடையில் இதைபற்றி சொன்னேன்.. உங்கள் இதந்த பதிவில் சொல்லியுள்ளபடி செய்துவிட்டேன் சகோ. மிக்க நன்றிமா... சில விசயங்களை தெரியாமல் கேட்டால் தெரிந்தவர்கள் உடனே பதிலளித்தால் பிறருக்கு மிகுந்த நலமாகும். சிலர்கல் அப்படிசெய்வதேயில்லை.. மிக்க நன்றி சகோ..

  ReplyDelete
 26. நல்லது. அலெர்ட்டா இருந்துக்கறேன்!!

  ReplyDelete
 27. பதிவுகள் நன்றாக உள்ளது .வி.குமரகுருபரன் திருவாளப்புத்தூர்

  ReplyDelete