உங்களுக்கு குழந்தைகளை பிடிக்குமா?


தலைப்பை பார்த்ததும் "என்ன கேள்வி இது? யாருக்கு தான் குழந்தைகளை பிடிக்காது?" என்கிறீர்களா? உண்மை தான். நமக்கு எத்தனை கவலைகள் இருந்தாலும் குழந்தைகளின் சிரிப்பு அவைகளை மறக்கடிக்கச் செய்துவிடும். அப்படி உங்கள் கவலைகளை (சில நிமிடங்களாவது) மறக்கச் செய்யும் புகைப்படங்களை இங்கே பகிர்கிறேன்.

படத்தின் மீது க்ளிக் செய்து ஒவ்வொன்றாக பாருங்கள்.திருமண புகைப்படக்காரரான ஜேசன் லீ (Jason Lee) என்பவர் தனது இரண்டு பெண் குழந்தைகளான Kristin, Kayla  ஆகியோரை வைத்து எடுத்த புகைப்படங்கள் தான் இவைகள். 2006-ஆம் ஆண்டிலிருந்து தனது குழந்தைகளை வைத்து வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து வருகிறார். போடோஷாப் வேலைகள் அதிகம் கொண்ட இந்த புகைப்படங்கள் மிகப் பிரமாதமாக உள்ளது. பார்த்ததும் மனதைக் கொள்ளைக் கொண்ட இந்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் தோன்றியது.

மேலும் ரசிக்க: http://kristinandkayla.blogspot.com/

டிஸ்கி: போடோஷாப் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதால் இதுவும் ஒரு "தொழில்நுட்ப பதிவு" ஆகும். :) :) :)

Post a Comment

30 Comments

 1. அட்டகாசம் செய்யும் 'அட்டகாசமான' குழந்தைகள்..!

  ReplyDelete
 2. உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா...? http://www.hotlinksin.com/ திரட்டியில் உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

  ReplyDelete
 3. அப்போ இணையத்தைப் பயன்படுத்திதானே எல்லோரும் பதிவு எழுதறோம். அதனால எழுதறதெல்லாம் தொழில்நுட்ப்ப் பதிவுன்னே வச்சிக்கலாம் அப்படித்தானே..ஹா..ஹா...!!!
  (அப்துல் பாசித்தையே கலாச்சுட்டோம்ல...)


  உண்மையிலேயே புகைப்படங்கள் அனைத்தும் பார்த்து ரசித்து, சிரிக்கும் வகையில் அமைந்திருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி திரு அப்துல் பாசித் அவர்களே..!!!

  ReplyDelete
  Replies
  1. //அப்போ இணையத்தைப் பயன்படுத்திதானே எல்லோரும் பதிவு எழுதறோம். அதனால எழுதறதெல்லாம் தொழில்நுட்ப்ப் பதிவுன்னே வச்சிக்கலாம் அப்படித்தானே..ஹா..ஹா...!!!//

   இல்லையே, பதிவின் கருப்பொருள் (அது கருப்பா இருக்காது) தொழில்நுட்பத்தை பத்தி இருக்கணும். ஹிஹிஹிஹி....

   //உண்மையிலேயே புகைப்படங்கள் அனைத்தும் பார்த்து ரசித்து, சிரிக்கும் வகையில் அமைந்திருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி திரு அப்துல் பாசித் அவர்களே..!!!//

   நன்றி நண்பா!

   Delete
 4. தம்பி பாசித்..இது உங்களுக்கே ஓவரா தெரியல..இது தொழில்நுட்பப் பதிவா????
  போற போக்கு சரி இல்ல..அவ்ளோ தான் சொல்வேன்...
  இருந்தாலும் தமிழ்மணத்தில வோட்டு போட்டாச்சு..
  என்ன இருந்தாலும் தம்பிய விட்டு கொடுக்க முடியுமா????

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹிஹி... நன்றிங்ணா!

   Delete
 5. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க!

  ReplyDelete
 6. அருமை அருமை
  எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத புகைப்படங்கள்
  பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 7. //போடோஷாப் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதால் இதுவும் ஒரு "தொழில்நுட்ப பதிவு" ஆகும். :) :) :)
  //ஹா ஹா கலக்கல் படங்களும் தான்

  ReplyDelete
 8. படங்கலை என் பேரன் பேத்திகளுக்குக் காட்டினேன்.
  கை கொட்டிக் குதூகளித்தார்கள்.
  நன்றி பாசித்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி நண்பரே!

   Delete
 9. //போடோஷாப் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதால் இதுவும் ஒரு "தொழில்நுட்ப பதிவு" ஆகும். :) :) :)//

  - ஆஹா...நம்பிட்டோம்...நம்பிட்டோம்....இது தொழில்நுட்ப பதிவுதான்...ஹி...ஹி....

  மற்றபடி படங்கள் அனைத்தும் ரசித்தேன். அருமை.

  ReplyDelete
  Replies
  1. :) :) :)

   நன்றி நண்பரே!

   Delete
 10. நன்றி நன்பர் பாசித்.

  ReplyDelete
 11. நல்லா தான் இருக்கு நன்பா

  ReplyDelete
 12. செம கலக்சன்,சூப்பர்.

  ReplyDelete
 13. அட்டகாசமான குழந்தை படங்கள் பார்த்து ரசித்தேன்...நண்பா

  ReplyDelete
 14. superb photos thanks for sharing this at the right time

  ReplyDelete
 15. //போடோஷாப் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என்பதால் இதுவும் ஒரு "தொழில்நுட்ப பதிவு" ஆகும். :) :) :)//

  ஏங்க... நீங்க தொழில்நுட்பம் அல்லாத பதிவைப் போட்டால் மட்டும் படிக்காமல் விட்டுவிடுவோமா?

  ReplyDelete
 16. ரசிக்கத்தக்க படங்கள் அருமை!

  ReplyDelete
 17. Super! :)

  PS: லாப்டாப் மூலம் போடுவதால் இதுவும் ஒரு தொழில்நுட்ப பின்னூட்டமாகும்! ;)

  ReplyDelete