கூகுள் தேடல் முடிவுகளில் காட்டப்படும் Rich Snippets பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம் அல்லவா? அதில் முதலும், முக்கியமானதுமான பதிவர்களாகிய உங்கள் புகைப்படத்தை கூகிள் தேடல் முடிவுகளில் பதிவின் பக்கத்தில் காட்டும் Authorship Markup பற்றி பார்ப்போம். இதன் மூலம் உங்கள் படத்தை கூகிளில் தெரியவைக்கலாம்.
கூகிளில் உங்கள் புகைப்படம் தெரிய வேண்டுமானால் உங்களுக்கு புகைப்படத்துடன் கூகிள் ப்ளஸ் சுயவிவரப்பக்கம் (Google+ Profile Page) இருத்தல் வேண்டும். அதாவது நீங்கள் கூகுள் ப்ளஸ் தளத்தை பயன்படுத்த வேண்டும். பிறகு பின்வரும் இரண்டு காரியங்களை செய்ய வேண்டும்.
பதிவின் பக்கத்தில் இருந்து உங்கள் கூகிள்+ பக்கத்திற்கு இணைப்பு கொடுக்கவேண்டும். உங்கள் கூகிள்+ பக்கத்தில் இருந்து உங்கள் பிளாக்கிற்கு இணைப்பு கொடுக்க வேண்டும்.
செய்முறை:
1. உங்கள் கூகுள் ப்ளஸ் சுயவிவரப்பக்கத்தில் (Google+ Profile) Contributor to என்ற பகுதியில் உங்கள் ப்ளாக்கின் முகவரியைக் கொடுக்க வேண்டும்.
2. அ. உங்கள் ப்ளாக்கர் சுயவிவரப் பக்கத்தை கூகிள் ப்ளஸ் சுயவிவரப் பக்கத்திற்கு மாற்ற வேண்டும். இது பற்றி கூகிள் ப்ளஸ்ஸில் இணைகிறது ப்ளாக்கர் என்ற பதிவில் பார்க்கவும்.
இதில் இரண்டாவது உள்ள முறை சில டெம்ப்ளேட்களில் வேலை செய்யாது. அதற்கு மாற்றாக,
ஆ. உங்கள் தளத்தில் இருந்து உங்கள் கூகிள்+ தளத்திற்கு பின்வருமாறு இணைப்பு கொடுக்க வேண்டும்.
<a href="https://plus.google.com/109412257237874861202?rel=author">Google+</a>
இதில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்களை நீக்கிவிட்டு உங்கள் Profile ID எண்களைக் கொடுங்கள்.
கூகுள் ப்ளஸ் தளத்தில்

இ. இணைப்பு கொடுப்பதற்கு பதிலாக Widget-ஆகவும் வைக்கலாம்.
Blogger Dashboard =>Layout பகுதிக்கு சென்று Add a Gadget என்பதை க்ளிக் செய்து Google+ Badge என்னும் (புதிய) Gadget-ஐ வைக்கவும். அதில் உங்கள் Profile ID-ஐ கொடுக்கவும்.
பிறகு உங்கள் படம் தேடுபொறியில் தெரியுமா? என்பதை http://www.google.com/webmasters/tools/richsnippets என்ற முகவரியில் சென்று உங்கள் ப்ளாக் முகவரியைக் கொடுத்து சரி பார்க்க வேண்டும். அனைத்து Rich Snippets முறையையும் நாம் இந்த முகவரியில் தான் சரி பார்க்க வேண்டும்.
![]() |
உங்கள் புகைப்படம், உங்கள் பெயர் (கூகிள் ப்ளஸ் இணைப்புடன்), எத்தனை நபர்கள் உங்களை கூகிள் ப்ளஸ்ஸில் பின்தொடர்கிறார்கள்? ஆகிய விவரங்களைக் காட்டும்.
அதில் உங்கள் பெயருக்கு மேலே கர்சரை கொண்டு சென்றால் Follow என்ற பட்டனை காட்டும். இதன் மூலம் வாசகர்கள் தேடுபொறியில் இருந்தே நம்மை பின்தொடரலாம்.
உங்களை கூகிள்+ தளத்தில் குறைந்தது 500 நபர்கள் உங்களை பின்தொடர்ந்தால் மட்டுமே அந்த எண்ணிக்கையை கூகிள் காட்டும். ஐநூறுக்கும் குறைவாக இருந்தால் பின்வருமாறு மட்டுமே காட்டும்.
கூகிள் தளத்தில் உங்கள் படம் தெரிவதற்கு சில மணி நேரங்களோ, சில நாட்களோ ஆகலாம். அதுவரை காத்திருக்கவும.
இறைவன் நாடினால், மற்ற Rich Snippets-கலைப் பற்றி விரைவில் பார்ப்போம்.
15 Comments
தகவலுக்கு நன்றி!
ReplyDeleteமிகவும் அருமையான தகவல் நன்றி சகோ.
ReplyDelete.
ReplyDelete.
அவசியம் சொடுக்கி >>>>>> பதிவர்களே, வாசகர்களே தமிழ்மணத்தில் ஒரு தில்லுமுல்லு ஆள்மாறாட்ட வைரஸ். <<<<< படியுங்கள்
.
.
நல்ல பதிவு. இதனை நீங்கள் எழுதுவீர்க்ள் என்று நீண்ட நாள் காத்திருந்தேன்.
ReplyDeleteநல்ல தகவல் வாழ்த்துக்கள் !!
ReplyDeleteநல்ல தகவல் சகோ
ReplyDeletenamdri nanba
ReplyDeleteபயனுள்ள பகிர்வு, தகவலுக்கு நன்றி நண்பா ..!
ReplyDeletethanks brother
ReplyDeleteஅருமையான பதிவு. தொடரட்டும் உங்களது சேவை தோழரே
Deleteஇப்பதிவை எனது தளத்தில் மேற்கோள் காட்ட வேண்டி உள்ளது.. அனுமதிப்பீரா?
ReplyDeleteதாராளமாக...
DeleteBasith - I did this long back and my pictures did not come in google search... I deleted them again and did as per your instructions.. lets wait for couple of days...
ReplyDeletePS: It shows up properly in Rich Snippets tool... but, not in google search. :)
Forget this Post! Just add Google+ Badge from Gadget. You are Done!
Delete:) :) :)
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி
ReplyDelete