கூகிளின் புதிய வசதி: Google Play

கூகிள் தளம் தனது ஆன்ட்ராய்ட் மார்க்கெட், கூகிள் மியூசிக், கூகிள் ஈ-புக்ஸ் ஆகிய வசதிகளை ஒன்றிணைத்து கூகிள் ப்ளே (Google Play) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை கணினிகள் மற்றும் ஆன்ட்ராய்ட் மொபைல், டேப்லட்களில் பயன்படுத்தலாம். இந்த வசதி Cloud Computing தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.


கூகிள் ப்ளே தளத்தின் முகவரி: https://play.google.com இதில் உள்ள வசதிகள்,

Movies: 


இணையத்தில் புதிய திரைப்படங்களை பணம் கட்டி பார்க்கும் வசதி. இந்த வசதி US, UK, Canada, Japan ஆகிய நாடுகளில் மட்டும் தான்.

Music:


இசை ஆல்பங்கள் மற்றும் பாடல்களை பணம் கட்டி கேட்கும் வசதி. பதிவிறக்கம் செய்த பாடல்களை இணையம் இல்லாமலும் மொபைல், டேப்லட்களில் கேட்கலாம். இந்த வசதி அமெரிக்காவில் மட்டும் தான்.

Books:


சுமார் நாற்பது லட்சம் மின்னணு புத்தகங்களை இலவசமாகவும், பணம் கட்டியும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த வசதி US, UK, Canada, Australia ஆகிய நாடுகளில் மட்டும் தான்.

Apps and Games:


ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டுக்களை பதிவிறக்கம் செய்வதற்கான ஆன்ட்ராய்ட் மார்கெட் வசதியையும் தற்போது கூகிள் ப்ளே-வில் மாற்றியுள்ளது. ஆன்ட்ராய்ட் சாதனங்களில் விரைவில் Android Market என்பதற்கு பதிலாக Google Play என்று பெயர் மாற்றப்படும். இந்த வசதி அனைத்து நாடுகளிலும் இருந்தாலும் பணம் கட்டி வாங்கும் வசதி இந்தியா, அமேரிக்கா, உள்ளிட்ட சில நாடுகளில் மட்டும் தான்.

அறிமுக சலுகையாக வரும் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் குறைந்த விலையில் படங்கள், பாடல்கள், மின்னணு புத்தகங்கள், அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை தருகிறது. சலுகைகளைப் பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.

மேலும் விபரங்களுக்கு:  Introducing Google Play | Android Developers Blog

Post a Comment

9 Comments

 1. நன்றிங்க மாப்ள!

  ReplyDelete
 2. பயனுள்ள வகிர்வு
  மிக்க மிக்க நன்றி
  அனைத்து திரட்டிகளிலும் ஓட்டு போட்டு இருக்கிறேன் கவனிக்கவும் ஹா ஹா
  (ச்சும்மா ஒரு வெளம்பரம் தம்ப்பா)

  ReplyDelete
 3. நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 4. nalla pakirvu nandri

  ReplyDelete
 5. பகிர்வுக்கு நன்றி நண்பா ..!

  ReplyDelete
 6. நமக்கு ஆண்ட்ராய்ட் apps மட்டும்தான்.. :(

  ReplyDelete
 7. நன்றி தலைவரே

  ReplyDelete
 8. நல்ல தகவல்கள் சார் ! நன்றி !

  ReplyDelete
 9. பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி என்றும் உங்கள் அன்பை தேடி அன்புதில்

  ReplyDelete