பதிவு எழுதினால் மட்டும் போதுமா?


பிளாக்கும் தொடங்கியாச்சு, பதிவும் எழுதியாச்சு. அடுத்து என்ன செய்ய வேண்டும்? நாம் பதிவுகள் எழுதுவதே அதனை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பதனால் தான். அதனால் அதனை அனைவரிடமும் போய் சேர்வதற்கான வழிவகைகளை செய்ய வேண்டும். எப்படி என்று இப்பகுதியில் பார்ப்போம்.

இது ப்ளாக் தொடங்குவது எப்படி? என்ற தொடரின் 24-ஆம் பகுதி ஆகும். 

நண்பர்களும், உறவினர்களும்:

நமக்கு அதிக ஆதரவு கொடுப்பவர்கள் நண்பர்களும், உறவினர்களும் தான். அதனால் முதலில் அவர்களிடம் உங்கள் பிளாக்கை பற்றி சொல்லுங்கள். அதற்காக அனைவரிடமும் சொல்ல வேண்டாம். நீங்கள் எதைப்பற்றி எழுதுகிறீர்களோ அதில் ஆர்வம் உள்ளவர்களிடமும், இணைய வசதி உள்ளவர்களிடமும் மட்டும் சொன்னால் போதுமானது. பிறகு அவர்கள் உங்கள் ப்ளாக்கைப் பற்றி பின்னூட்டங்களைக் (Feedback) கொடுப்பார்கள்.

திரட்டிகள்:

நம்முடைய பதிவுகள் அதிகமான வாசகர்களிடம் கொண்டு சேர்க்க உதுவுவது திரட்டிகள் ஆகும். ஒவ்வொரு பதிவும் எழுதியதும் மறக்காமல் உங்கள் பதிவுகளை திரட்டி தளங்களில் இணைத்திடுங்கள். திரட்டிகள் நமது தளங்களில் இணைப்பதற்காக ஓட்டுப் பட்டைகள் கொடுக்கும். அதற்காக இருக்கும் எல்லா திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளையும் இணைத்துவிடாதீர்கள். பிறகு உங்கள் தளம் திறப்பதற்கு அதிக நேரம் எடுக்கும். குறிப்பிட்ட சில ஓட்டுப்பட்டைகளை மட்டும் வைத்தால் போதும்.

திரட்டிகளைப் பற்றிய பதிவுகள்:

நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? - 1 (பதிவை  பிரபலமாக்குவது பற்றி முழுமையாக அறியவும் இந்த தொடர் உதவும்.)
 
பிளாக்கர் பிரச்சனைக்கு முழுமையான தீர்வு

சமூக  இணையதளங்கள்:

இணையத்தில் உலாவும் பெரும்பாலானவர்கள் அதிகம் இருப்பது பேஸ்புக், ட்விட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக இணையதளங்களில் தான். அதனால் அது போன்ற தளங்களில் நமது பதிவுகளைப் பகிர்வதும் சிறந்த வழியாகும். சமூக இணைய தளங்களின் பகிர்தல் பட்டைகளை (Share Buttons) மறக்காமல் இணைத்திடுங்கள். அதன் மூலம் நமது வாசகர்களும் அவர்கள் நண்பர்களிடம் பகிர்வார்கள்.

செய்யக் கூடாத மின்னஞ்சல் முறை:

இணையம் மூலம் நமக்கு நண்பர்களானவர்கள் பலரது மின்னஞ்சல் முகவரிகள் நமக்கு தெரிந்திருக்கலாம். அதற்காக நாம் பதிவிடும் போதெல்லாம் நமக்கு தெரிந்தஅனைவருக்கும் மின்னஞ்சல்கள் அனுப்புவது செய்யக் கூடாத ஒன்றாகும். அப்படி அனுப்புவதனால் வாசகர்களுக்கு சலிப்பு ஏற்படலாம். சில சமயம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை Spam பகுதியில் சேர்த்துவிடலாம். அப்படி செய்தால் நீங்கள் முக்கியமான மின்னஞ்சல் அனுப்பினாலும் அதனை அவர்கள் படிக்க முடியாமல் போகும். விருப்பமுள்ளவர்கள் மின்னஞ்சல்கள் மூலம் நமது பதிவுகளைப் பெறுவதற்கு தான் "Email Subscription" வசதி உள்ளது. அதனால் அதனை தவிர்ப்பது நலம்.

இறைவன் நாடினால் ஆங்கில தளங்களை பிரபலப்படுத்துவது பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

Post a Comment

19 Comments

  1. தொடருங்கள் அன்பரே

    ReplyDelete
  2. நல்ல தகவல்...

    நமது பதிவுகளை Email Subscription மூலம் பெறும் நண்பர்களின் பட்டியலைக் காண ஏதும் வழி உண்டா? (கூகிள் Friend Connect வசதி நிறுத்தப்பட்டதால், அஞ்சல் அனுப்ப முடியவில்லை!)

    ReplyDelete
    Replies
    1. Email Subscription-ஐ Feedburner (RSS Feed) வழியே தான் செயல்படுத்தியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்படி செய்திருந்தால் www.feedburner.com சென்று உங்கள் மின்னஞ்சல் மற்றும் கடவுசொல்லை (password) இட்டு உள் நுழைந்து, உங்களது feed title-ஐ click செய்யுங்கள். அங்கே publicize என்றொரு tab இருக்கும் அதை சொடுக்கினால் Email subscription என்றொரு service இருக்கும் அதனை கிளிக் செய்து scroll down செய்து கீழே பாருங்கள். அங்கே view subscriber details இருக்கும். அதனை சொடுக்கினால் பார்க்கலாம்.

      மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் நண்பர் Abdul Basith அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். ஓய்வு நேரத்தில் கண்டிப்பாக அவர் உங்களுக்கு உதவுவார்.

      என்ன நண்பா சரியாக பதிலளித்தேனா அல்லது சறுக்கிவிட்டேனா?

      Delete
    2. @வரலாற்று சுவடுகள்

      நன்றி நண்பா! நீங்கள் சரியாக சொன்னீர்கள்.

      :) :) :)

      Delete
    3. நன்றி நண்பர்களே!

      Delete
  3. எனது வலைப்பதிவை முகநூல் நண்பர்கள் சுவற்றில் இணைக்க முற்படும்போது செக்யூரிட்டி செக் வந்து தொல்லை செய்கிறது. இதை தடுப்பது எப்படி?தர்போழுதான் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே! தற்போது பேஸ்புக் தளம் ப்ளாக்கர் பதிவுகளை பகிரும் போது செக்யூரிட்டி செக் சேர்த்துள்ளது. இதனை தடுப்பதற்கு வழி இல்லை. சில தளங்களுக்கு இந்த செக்யூரிட்டி செக் கிடையாது.

      Delete
  4. அவசியமான பதிவுதான் நன்பரே,எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்.நன்றீ

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி நண்பா ..!

    ReplyDelete
  6. பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  7. நல்ல பதிவு ! தொடருங்கள் நண்பரே !

    ReplyDelete
  8. Good thought sir.. well wordings.

    Sowmiyainternational
    www.howtoearnonlinecash.blogspot.com

    ReplyDelete
  9. தொடரட்டும் உங்கள் பணி ...வாழ்த்துக்கள் ..நண்பரே..

    பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?

    ReplyDelete
  10. http://rajutechpark.blogspot.in/

    இது என்னுடைய வலைதளம் . .என்னுடைய வலைதளத்தில் பதிவின் தலைப்பு தெரியவில்லை. . என்ன செய்வது என்று தெரியவில்லை..கொஞ்சம் உதவுங்கள். .

    ReplyDelete
  11. என்னை போன்று புதியவருக்கு பயனுள்ள பதிவு
    நன்றி நண்பரே. தயவு செய்து என் தளத்திற்கு சென்று அதில் உள்ள நிறை குறைகளை எனக்கு பின்னோட்டம் இடவும்.
    என் தள முகவரி http://elleriexpress.blogspot.com.

    ReplyDelete
  12. பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  13. நண்பா மன்னிக்கவும் நேற்று நான் எழுதிய பதிவு ப்ளாக் பதிவு எழுதினால் மட்டும் போதுமா -பாடம் 3 உங்கள் தளத்தில் உள்ளதை கோப்பி பேஸ்ட் பண்ணினது போலவே இருக்கு ஐயம்பது சதவிதம் , ஆனால் உண்மைய சொல்ல போனால் உன்னுடைய தளத்தில் இப்ப தன் இந்த பதிவு பார்க்குறேன் நான் எழுதினதும் உன்னுடைய பதிவும் ஒரே மாதிரி இருக்கு தலைப்பு உட்பட மன்னிக்கவும் இனிமே இந்த தவறு நடக்காமல் பார்த்து கொள்கிறேன்

    ReplyDelete