ஜிமெயில் வசதி மற்றும் கூகுள் Web history


 நாம் இணையத்தில் உலவும் போது சில தளங்களில் மின்னஞ்சல் (Email) முகவரிகளைக் க்ளிக் செய்தால் மின்னஞ்சல் அனுப்பும்படி இருக்கும். அந்த முகவரிக்கு மின்னஞ்சல் செய்ய அதனை க்ளிக் செய்தால் Default-ஆக Microsoft Outlook திறந்து அதிலிருந்து அனுப்பும்படி இருக்கும். தற்போது அது போன்ற சுட்டிகளை க்ளிக் செய்து நேரடியாக ஜிமெயிலில் இருந்தே மெயில் அனுப்பும் வசதியை Google Chrome தந்துள்ளது.

கூகுள் க்ரோமில் ஜிமெயில் தளத்தை திறந்ததும் "Allow Gmail to open all email links?" என்று கேட்கும்.


அதில் Use Gmail என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவுதான். இனி மின்னஞ்சல் முகவரி சுட்டிகளை க்ளிக் செய்தால் நேரடியாக ஜிமெயில் வரும். அதிலிருந்து மெயில் அனுப்பலாம்.

மின்னஞ்சல் சுட்டிகளை உருவாக்குவது எப்படி?

மின்னஞ்சல் சுட்டிகளை உருவாக்க கீழுள்ள நிரலை பயன்படுத்துங்கள்.

<a href="mailto:basith27@gmail">மெயில் அனுப்ப இங்கே க்ளிக் செய்யுங்கள்.</a>

அப்படிக் கொடுத்தால் பின்வருமாறு வரும்.

மெயில் அனுப்ப இங்கே க்ளிக் செய்யுங்கள்.

அதனை  க்ளிக் செய்தால் நேரடியாக Gmail Compose பக்கம் மின்னஞ்சல் முகவரியுடன் திறக்கும்.


கூகுள் வெப் ஹிஸ்டரி (Google Web History)


Image Credit: Gizmodo.com
கூகுள் தளம் வரும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் செய்யவிருக்கும் மாற்றத்தைப் பற்றி தனியுரிமைக் கொள்கையை மாற்றும் கூகுள் என்ற பதிவில் பார்த்தோம் அல்லவா? இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் இருக்கும் நிலையில் நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று இருக்கிறது. அது உங்களைப் பற்றி கூகுள் சேகரித்திருக்கும் Web History தகவல்களை நீக்குவது.

நீங்கள் இதுவரை கூகிளில் உள்நுழைந்திருக்கும் போது தேடிய தகவல்கள் எல்லாம் Web History என்ற பக்கத்தில் கூகிள் சேகரித்து வைத்திருக்கும். கூகிளில் நீங்கள் தேடிய வார்த்தைகள், தேடல் முடிவுகளில் நீங்கள் க்ளிக் செய்து பார்த்த தளங்கள் ஆகியவற்றின் தகவல்கள் அங்கு இருக்கும். மேலும் நீங்கள் Google Toolbar-ஐ நிறுவியிருந்தால் நீங்கள் இதுவரை சென்று பார்த்த அனைத்து தளங்களின் விவரங்களும் இருக்கும். அதனை நீக்குவதற்கு நாளையே (29/02/2012) கடைசி தினமாகும்.

இது பற்றி விரிவாக நண்பர் கிரி அவர்களின் பதிவைப் பார்க்கவும்.

Youtube Web History-ஐ நீக்க:

1. முதலில் http://www.youtube.com/my_history என்ற யூட்யூப் முகவரிக்கு செல்லுங்கள்.2. அங்கு Clear All Viewing History என்பதை க்ளிக் செய்யுங்கள். இன்னொரு முறையும் க்ளிக் செய்ய வேண்டும்.

3. பிறகு இடதுபுறம் உள்ள Search History என்பதை க்ளிக் செய்து முன்பு போல இதனையும் நீக்கிவிடுங்கள்.

கவனிக்க: கூகிள் மாற்றத்தினால் பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை. நம்முடைய தகவல்களைக் கொண்டு அது தொடர்பான விளம்பரங்களையும், தேடல் முடிவுகளையும் கொடுப்பார்கள்.

Post a Comment

10 Comments

 1. சூப்பர் தகவல் நண்பா.. என்னுடைய தளத்தில் மெயில் லிங்க்கை இணைச்சுட்டேன்.., பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 2. பயனுள்ள தகவல்கள்.

  ReplyDelete
 3. நன்றி மாப்ளே!

  ReplyDelete
 4. நல்லதொரு தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 5. நன்றி பகிர்வுக்கு சகோ .

  ReplyDelete
 6. நல்ல தகவல் நன்றி நண்பா.....

  ReplyDelete
 7. மிக்க நன்றி பகிர்வுக்கு.

  ReplyDelete