நேற்று இலவச ப்ளாக்ஸ்பாட் முகவரியில் பிளாக்கர் செய்த மாற்றத்தினால் பதிவர்கள் பலர் .com, .net போன்ற கஸ்டம் டொமைன் (Custom Domain) வாங்குவது பற்றி யோசித்து வருகிறார்கள். நான் ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு டொமைன் வாங்கும்போதே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வைத்திருந்தாலும் இது பற்றி பிறகு பதிவிடலாம் என்று விட்டுவிட்டேன். தற்போது பல (அல்லது சில) பதிவர்கள் கேட்டுக் கொண்டதனால் டொமைன் வாங்குவது பற்றி இங்கு பதிவிடுகிறேன்.
கூகுள் தளத்திடமிருந்தே நாம் டொமைன் வாங்கலாம். அப்படி வாங்கினால் கூடுதலாக சில வசதிகளையும் நாம் இலவசமாக(!!!!!!!!) பெறலாம். ஒருவருடத்திர்கான கட்டணம் பத்து டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ஐநூறு ரூபாய். அப்படி வாங்குவதற்கு VISA, Mastercard வசதியுடைய கிரெடிட்/டெபிட் கார்டு தேவை. மேலும் இந்த பரிவர்த்தனைக்கு Google Wallet (முன்னர் இதன் பெயர் Google Checkout) என்ற சேவையை பயன்படுத்துகிறது. இது Paypal போன்று இணையத்தில் பண பரிவர்த்தனை செய்வதற்கான வசதியாகும்.
மேலும் டொமைன் வாங்கிய பின் அதனை நிர்வகிக்க Google Apps என்னும் வசதியை நமக்கு தருகிறது. இங்கு (admin@bloggernanban.com போன்று) நம் தளத்துடன் கூடிய மின்னஞ்சல்களை உருவாக்கவும், Sub-Domain-களை உருவாக்கவும் செய்யலாம்.
டொமைன் வாங்கும் முறை:
1. Blogger Dashboard => Settings => Basic பகுதிக்கு செல்லுங்கள்.
2. அங்கு Publishing என்பதற்கு கீழே உங்கள் ப்ளாக் முகவரி இருக்கும். அதற்கு கீழே உள்ள Add a Custom Domain என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. உங்கள் ப்ளாக் பெயருடன் .com என்று வரும். அதற்கு பதிலாக .net, .org, .info, .biz ஆகிய டொமைன்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் .com என்ற முகவரியே சிறந்தது. பிறகு Check Availability என்பதனை க்ளிக் செய்யுங்கள்.
4. அதை க்ளிக் செய்தவுடன் நீங்கள் தேர்வு செய்துள்ள முகவரியை இதுவரை யாரும் வாங்கியிருக்கவில்லை என்றால் Available என்று காட்டும். இல்லையென்றால் நீங்கள் வேறு முகவரி கொடுக்க வேண்டும்.
அந்த பக்கத்தில் Continue to registration என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
5. பிறகு வரும் படிவத்தில் உங்கள் விவரங்களை கவனமாக பதிவு செய்யுங்கள்.
இந்த படிவத்தில் முதலில் இருக்கும் Privacy options என்ற இடத்தில் இருக்கும் பெட்டியில் டிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் தள முகவரி பற்றிய தகவல்களை இணையத்தில் தேடும்போது உங்கள் பெயர் மற்றும் முகவரியை மறைப்பதற்கு உதவும். மற்ற தளங்களில் டொமைன்கள் வாங்கினால் இவ்வாறு மறைப்பதற்கு தனியாக பணம் கட்ட வேண்டும்.
Fax என்பதற்கு கீழே இரண்டு தேர்வுகள் இருக்கும்.
I have read xxxxx terms of service - இதனை அவசியம் டிக் செய்தாக வேண்டும்.
Automatically renew my registrartion every year - இதனை டிக் செய்யாமல் இருப்பது நலம். இதை டிக் செய்தால் ஒவ்வொரு வருடம் முடிந்த பின்பும் நீங்கள் எந்த கார்டிலிருந்து டொமைன் வாங்கியுள்ளீர்களோ அந்த கார்டிலிருந்து தானாகவே பணம் எடுத்து உங்கள் டொமைனை புதுப்பித்துக் கொண்டிருக்கும்.
படிவத்தை பூர்த்தி செய்தபின் I accept proceed to Google Checkout என்பதை க்ளிக் செய்யுங்கள்.
6. பிறகு வரும் பக்கத்தில் தான் உங்கள் கிரெடிட்/டெபிட் கார்ட் விபரங்களைக் கொடுக்க வேண்டும்.
இதில் Card Number, Expiry Date, CVC, Name ஆகியவற்றை கார்டில் உள்ளபடியே பூர்த்தி செய்யுங்கள்.
![]() |
CVC என்பது உங்கள் கார்டின் பின்புறம் கார்ட் எண்ணிற்கு அடுத்ததாக மூன்று (American Express கார்டில் நான்கு) இலக்கத்தில் இருக்கும். |
கார்ட் விபரங்களைக் கொடுக்கும் போது கவனம் தேவை. Address Bar-ல் https:// என்று இருந்தால் மட்டும் கொடுங்கள். வெறும் http:// என்று இருந்தால் கொடுக்க வேண்டாம். அது பாதுகாப்பானது அல்ல.
படிவத்தை பூர்த்தி செய்தபின் Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.
7. பிறகு வரும் பக்கத்தில் i accept terms of service என்பதற்கு அருகில் உள்ள பெட்டியில் டிக் செய்து Place your order now என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்! சிறிது நேரம் கழித்து உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு டொமைன் உங்களுக்கு வந்துவிடும். இது குறித்து உங்களுக்கு மெயில் அனுப்பப்படும்.
பிறகு Dashboard-ல் Settings => Basic பகுதிக்கு வந்தால் பின்வருமாறு காட்டும்.
பழைய முகவரியில் இருந்து புதிய முகவரிக்கு Redirect ஆக ஓரிரு நாட்கள் ஆகலாம். ஆனாலும் நீங்கள் வாங்கிய கஸ்டம் டொமைன் முகவரி சில மணி நேரங்களில் செயல்படத் தொடங்கிவிடும்.
புதிய டொமைனுக்கு மாறினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று, நீங்கள் பதிவிட்டு சில மணி நேரம் கழித்தே நமது ப்ளாக்கை பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டில் தெரியும்.அதனை சரி செய்வதற்கு உங்கள் ப்ளாக்கை பின்தொடர்பவர்கள் ஒருமுறை Follower Gadget-ல் Unfollow செய்துவிட்டு மீண்டும் பின்தொடர வேண்டும்.
அது பற்றிய அறிவிப்பை உங்கள் பிளாக்கில் கொடுத்துவிடுங்கள்.
57 Comments
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமிக மிக பயனுள்ள தகவல்....
ஜசாக்கல்லாஹ்
வ அலைக்கும் ஸலாம்
Deleteநன்றி சகோ.!
:-)
ReplyDelete:) :) :)
Deleteநன்றி நண்பா!
Useful Post Friend
ReplyDeleteThank You Sister!
Deleteநல்ல தகவல் நண்பரே..
ReplyDeleteசமயம் வரும் போது பயன்படுத்துகிறேன்!
நன்றி நண்பரே!
Deleteஇன்ஷாஅல்லாஹ் விரைவில் முயற்சி செய்கிறேன் சகோ..,
ReplyDeleteMiga miga arumaiyana payanulla pathivu. Nanri!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteநல்ல தகவல்
ReplyDelete@all: While typing CVV, card no and other important details, kindly use ON SCREEN KEYBOARD. To get this, Go to Run - type OSK and press enter. It also provide security!
ReplyDeleteBy
Hari ( hari11888.blogspot.in )
Thank you for sharing useful tips friend!
Deleteநன்றி
ReplyDeleteநன்றி நண்பா!
Deleteபுதிதாக domain வாங்க முயற்ச்சிப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.., பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி நண்பா!
Deletelot of yhanks mohamed from somalia
ReplyDeleteThank You Friend!
Deleteவிளக்கமான தகவல் ! நன்றி நண்பரே !
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteதங்களிடம் இதை பற்றி கேட்க எண்ணி இருந்தேன், அதற்குமுன் பதிவாக போட்டு விட்டீர்கள்.
நன்றி. சகோ.
வ அலைக்கும் ஸலாம்.
Delete:) :) :)
ஸலாம் சகோ.அப்துல் பாஸித்...
ReplyDeleteபலருக்கும் உபயோகமான தகவல்கள்...
ஆனால்... எனக்கு..?
///2. சர்ச்சைக்குரியவைகளை எளிதாக நீக்கலாம்.///
---சர்ச்சைக்குள்ளாகும் விஷயங்கள் எழுதுவோருக்குத்தானே உங்களின் இந்த பதிவு..?
useful info
ReplyDeleteThanks bro !
இப்போதைக்கு ப்ளாக் இருக்கும் நிலைமையில் மிகவும் உபயோகமான தகவல்.
ReplyDeleteநன்றி நண்பரே..
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமிக மிக பயனுள்ள தகவல்....
ஜசாக்கல்லாஹ்
---உபையத்துல்லாஹ்,மாலத்தீவு.
"அன்புள்ள நண்பரே, அவர்களே உங்கள் வலைதளத்தின் அருமைகளை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி!
ReplyDeleteநல்ல பதிவு உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்
ReplyDeleteவணக்கம் தோழா நான் புதிய வலைத்தளம் ஆரம்பித்துளேன்..உழவன்எனக்கு இன்ட்லியில் பயனர் பெயர் மற்றும் மெயில் ஐடி மாற்ற வேண்டும் ..கொஞ்சம் உதவுகளேன்...
ReplyDeleteதேவையான தகவல். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல மற்றும் அவசியமான தகவல்.
ReplyDeleteபயனுள்ள தகவல் (கூகுல் திடீர்னு ஏன் எப்படி எல்லாம் யோசிக்குது)
ReplyDeleteUSEFUL TIPS.
ReplyDeleteHOW TO CREATE OR MAINTAIN THE BLOG IN TAMIL?
MSMUTHUMOHAMED@YAHOO.CO.IN
USEFULL TIPS IN TAMIL.
ReplyDeleteHOE TO MAINTAIN BLOG /
msmuthumohamed@yahoo.co.in
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteதான் கற்ற கல்வியை வையம் சிறக்க மற்றவர்களுக்கும் கொடுப்பது ஒரு பெரிய தர்மம். இறந்த பின்பும் அதன் நன்மைகள் வந்து கொண்டே இருக்கும். எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயமாக இருந்தாலும் சிலர் அதை மற்றவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், உங்களைப்போல சிலர் தானறிந்த எதையும் இவ்வுலகில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மற்றவர்களுக்கு அறியத் தருகிறார்கள். சிலர் தான் கற்ற கல்விக்கு ஒரு விலை வைத்து அதை விற்பனை செய்கிறார்கள். வசதி படைத்தவர்க்கு மட்டுமே அது போய்ச் சேர்கிறது. ஆனால், உங்கள் முயற்சி மறு உலகில் பயனளிக்கும். சிறிய பெரிய தகவல் என்பதல்ல முக்கியம்; தகவல் பரிமாற்றம் செய்யும் பக்குவம் முக்கியம்.
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
கஸ்டம் டொமைனில் மெயில் id உருவாக்குவது எப்படி (sryusuf@customdomain.com)????
ReplyDeleteஅதே போல் இரண்டு மெயில் id ( கஸ்டம் டொமைனிலிருந்து) உருவாக்க முடியுமா (admin & webmaster)????
தயவுசெய்து விளக்கவும்.
கூகுளில் credit card இருந்தால்தான் domain வாங்க முடியுமா? என்னிடம் debit card தான் உள்ளது, முயற்ச்சித்தேன் முடியவில்லை திரும்பவும் blogspotக்கு வந்துவிட்டேன், உதவுங்கள். நன்றி
ReplyDeleteVery useful info...
ReplyDeletesunarasu.blogspot.com
அஸ்ஸலாமு அளிக்கும் நண்பரே
ReplyDeleteநானும் உங்களைப்போல் இல்லாவிட்டாலும்
என்னால் முடிந்த அளவு செய்துள்ளேன்
தமிழில்
http://computerintamil.blogspot.com
இதைப்பற்றி உங்கள் பின்னூட்டங்களை தெரிவியுங்கள்
நன்றி !
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ கூகுளில் credit card இருந்தால்தான் domain வாங்க முடியுமா? என்னிடம் debit card தான் உள்ளது, debit card மூலம் domain வாங்க முடியுமா சகோ விளக்கவும்
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம்
Deletedebit Card மூலமாகவும் வாங்கலாம் சகோ. அதில் Visa, master card, american express இவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்.
நமது ப்ளாகில்
ReplyDeleteஉள்ளவைகள்
அப்படியா
இருக்குமா ? kaniyuri@gmail.com
salam debit card illaamal domain vaanguvathu eppadi?
ReplyDeleteVa alaikkum salam
DeletePlease read this
http://www.karpom.com/2011/11/how-to-buy-domain-without-using.html
பயனுள்ள பகிர்(தி)வு நண்பரே!
ReplyDeleteசில சந்தேகங்கள்:
1) நம் ப்ளாக்கருக்காக வாங்கும் டொமைனில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அதாவது நாம் வாங்கிய டொமைன் சர்வீஸ் காலாவதியாகிய பின்னர் நம்முடைய வழமையாக முகவரி அதாவது blogspot.com என்பதற்கே திரும்பிடுமா அல்லது டொமைனே இல்லை என்று சொல்லிடுமா?
நம்முடைய பழைய வலைப்பூ முகவரிக்கே சென்று விட்டால் பெரிய பாதிப்பதனை ஏற்படுத்தாது என்று நினைக்கின்றேன். அதே சமயத்தில் டொமைனே இல்லை என்று சொன்னால் நம் நண்பர்களுக்கு சிக்கல்.
2) நமக்கு டொமைன் வழங்குநர் நமக்கென சேமிக்கப்பட்ட தரவுகளை அதாவது நம் வலைத்தளத்தில் உள்ள அனைத்துப் பதிவுகள் உள்ளடக்கிய கோப்பினையோ அல்லது தரவிறக்கும் வழியையோ நமக்கு சொல்வார்களா? அல்லது அவ்வளவு தானா? இதில் கூகுள் எவ்வகை?
3) நாம் கூகிள் அல்லாத பிற டொமைன்களில் பதிவு செய்து கொண்டால் நமக்கான தகவல் அவர்களின் மூலத்தில் சேமிக்கப்படுமா?
4) நமக்கு வழங்கப்படும் admin@blogname.typeல் மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் செய்து கொள்ள முடியுமா? அவ்வாறு இயலாது எனில் நமக்கு மேற்கண்ட முகவரியில் வரும் மின்னஞ்சல்களை அறிவது எங்ஙனம்?
பதில் கிட்டிடும் என்ற நம்பிக்கையில்
நன்றி
1) நீங்கள் வாங்கிய டொமைன் காலாவதியாகிவிட்டால் "Domain Expired" என்று தான் காட்டும். ப்ளாக்கர் setting-ல் custom domain-ஐ நீக்கிவிட்டால் ப்ளாக்ஸ்பாட் முகவரியில் மட்டும் உங்கள் தளம் தெரியும்.
Delete2) டொமைன் என்பது முகவரி மட்டும் தான். உள்ளடக்கம் முழுவதும் ப்ளாக்கரில் தான் உள்ளது. முதல் பதில் இதற்கும் பொருந்தும்.
3) இதற்கு இரண்டாம் பதில் பொருந்தும்.
4) டொமைன் காலாவதியாகிவிட்டால் அதன் மின்னஞ்சல் முகவரியும் காலாவதியாகிவிடும். மின்னஞ்சல்களை படிக்க முடியாது.
தகவலிற்கு தாமதமான நன்றிகள் பற்பல.
Delete4) நமக்கு வழங்கப்படும் admin@blogname.typeல் மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் செய்து கொள்ள முடியுமா? அவ்வாறு இயலாது எனில் நமக்கு மேற்கண்ட முகவரியில் வரும் மின்னஞ்சல்களை அறிவது எங்ஙனம்?
இங்கு நான் கேட்டிருப்பது நம் இயல்பான மின்னஞ்சல் போல இதையும் மடல் அனுப்ப, மடல் பெற டொமைன் காலாவதி ஆகும் காலத்திற்கு முன்னர் வரை பயன்படுத்திக் கொள்ளலாமா என்பதே
நன்றி
4) தவறான புரிதலுக்கு மன்னிக்கவும். உங்கள் டொமைன் எயரில் மின்னஞ்சல் பரிவர்த்தனைகள் செய்துக் கொள்ள முடியும். இறைவன் நாடினால் விரைவில் அது பற்றி பதிவிடுகிறேன்.
ReplyDeleteமிக்க மகிழ்வு. விரைவில் அப்பதிவினையும் எதிர்பார்க்கின்றேன்.
ReplyDeleteநன்றி
தாங்கள் கூறியபடி அனைத்தையும் செய்துவிட்டேன் நண்பரே!ஆனால் ஆறு மணி நேரமாகியும் இன்னும் எந்த தகவலோ அல்லது மாற்றமோ கூகுளிடமிருந்து வரவில்லை நண்பரே! என் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளதென்பதை எப்படி தெரிந்துகொள்வது? உதவுங்கள் நண்பரே!
ReplyDeleteதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் நண்பரே! உங்கள் கார்டிலிருந்து பணம் எடுத்தார்களா?
Deletehttp://wallet.google.com என்ற முகவரிக்கு சென்று உங்கள் விண்ணப்பம் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
So nice
ReplyDeleteஎன்னை போன்ற புதியவர்களுக்குப் பயன்படக் கூடிய அருமையான தகவல் நண்பரே...
ReplyDelete1 year ku evalavu bro?
ReplyDelete