ப்ளாக்கை பிரபலப்படுத்த "பரிசுப்போட்டி"


நமது ப்ளாக்கை பிரபலப்படுத்துவதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? என்ற தொடர் பதிவுகளில் பார்த்தோம். அவைகள் நாம் எந்த செலவும் இன்றி நமது பிளாக்கை பிரபலப்படுத்துவதற்கான வழிகள் ஆகும்.

தற்போது நாம் பார்க்கவிருப்பது வாசகர்களுக்கு பரிசுப்போட்டி வைத்து நமது பிளாக்கை பிரபலப்படுத்தும் வழி. இதற்கு ஆங்கிலத்தில் Giveaways என்று பெயர். இதனை பல பிரபல ஆங்கிலத்தலங்கள் செய்கின்றன. இவ்வாறு நாம் போட்டி வைப்பதற்கு www.rafflecopter.com தளம் நமக்கு உதவுகிறது.


அந்த தளத்திற்கு சென்று கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.


உள்நுழைந்தப் பின் Go! Make It Do! என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.


NICKNAME THIS GIVEAWAY என்ற இடத்தில் உங்கள் போட்டிக்கு பெயர் ஒன்றைக் கொடுங்கள்.

WHAT ARE THE PRIZES? என்ற இடத்தில் Default-ஆக உள்ளதை நீக்கிவிட்டு, ADD A PRIZE என்பதை க்ளிக் செய்து நீங்கள் தரப்போகும் பரிசைக் குறிப்பிடுங்கள். எத்தனை பரிசுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.


How Can People Enter? என்ற இடத்தில் போட்டியில் பங்கேற்க வாசகர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதனை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் எத்தனை மதிப்பெண்கள்? என்றும் கொடுக்க வேண்டும்.

போட்டியில் உள்ள தேர்வுகள்:
 • Answer a Question - ஏதாவது கேள்வி கேட்கலாம்.
 • Facebook Like - உங்கள் தல பேஸ்புக் பக்கத்தை Like பண்ண சொல்லலாம்.
 •  Twitter Follow - உங்கள் ட்விட்டர் கணக்கை பின்தொதரச் சொல்லலாம்.
 • Tweet - போட்டி பற்றி அவர்களை ட்வீட் செய்ய சொல்லலாம்.

போட்டி தொடங்கும் மற்றும் முடியும் நாளைக் கொடுத்தி, பின் போட்டிக்கான விதிமுறைகளை கொடுக்கவும். பிறகு GET THE WIDGET என்பதை க்ளிக் செய்யுங்கள்.


இடது புறம் உள்ளவற்றில் Blogger என்பதை க்ளிக் செய்து அங்குள்ள Code-ஐ காப்பி செய்து உங்கள் ப்ளாக்கில் பதிவிலோ அல்லது Sidebar-ல் வைக்கவும்.

இதனை சோதனை செய்வதற்காக,

ப்ளாக்கர் நண்பன் பரிசுப்போட்டி:


a Rafflecopter giveaway வெற்றி பெறுபவர்களின் ப்ளாக்கின் விளம்பரத்தை ப்ளாக்கர் நண்பன் தளத்தில் ஒரு மாதம் SIDEBAR-ல் வைக்கப்படும். போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள். :) :) :)

Post a Comment

12 Comments

 1. நல்ல யோசனையாக இருக்கே!!
  செயல்படுத்த முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 2. அருமையான யோசனை

  ReplyDelete
 3. ஆஹா நல்ல ஐடியாவா இருக்கே ?

  ReplyDelete
 4. //போட்டி தொடர்பாக நடுவர் (வேற யாருமில்லை, நான் தான். ஹிஹிஹி) எடுக்கும் முடிவே இறுதியானது. //

  ஏதோ கொஞ்சம் பார்த்து போட்டுக்குடுங்க எசமான்.போட்டியில நானும் இருக்கேன்

  ஹி ஹி ஹி

  நல்ல விஷயமாகத்தான் இருக்கிறது நண்பரே

  ReplyDelete
 5. சிறந்த பதிவு.

  பரிசு கொடுக்க கொஞ்சம் பணமும் சேர்த்து கொடுத்தீங்கண்ணா இன்னும் சந்தோஷப்படுவோம்.:-)

  ReplyDelete
 6. எங்களுக்கு சொல்லி தந்துவிட்டு போட்டியும் வைத்து இருக்கீங்க.....ம்ம்ம்....பரவாயில்லை நானும் (@Airnews1st)இதில் பங்கு கொள்கிறேன்......

  //போட்டி தொடர்பாக நடுவர் (வேற யாருமில்லை, நான் தான். ஹிஹிஹி) எடுக்கும் முடிவே இறுதியானது//


  பார்த்து நல்ல முடிவா எடுங்க...

  ReplyDelete
 7. சூப்பர் தகவல்...நண்பா...

  ReplyDelete
 8. அற்புதமான தகவல். உங்கள் யோசனைகள் எல்லாமே பிரமாதம்.

  ReplyDelete
 9. Thanks Bro

  Nan unga Method A Follow Panna Poren

  enakku Support Pannunga
  http://vivekisravel.blogspot.com

  ReplyDelete