கணினியின் வளர்ச்சி பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் கணினி வந்துவிட்டது. இதனால் கணினி பற்றித் தெரிந்துக் கொள்வதற்கான ஆர்வமும் பெருகியுள்ளது. புதியவர்களுக்காக சில கம்ப்யூட்டர் டிப்ஸ்களை இங்கு பகிர்கிறேன்.
1. திரையில் உள்ளவற்றை பெரிதுப்படுத்திப் பார்க்க Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு + பட்டனை அழுத்துங்கள். சிறிதுப்படுத்த Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு - பட்டனை அழுத்துங்கள். அல்லது Cntrl பட்டனை அழுத்திக் கொண்டு மவுசில் உள்ள சக்கரத்தை முன்பக்கம், பின்பக்கம் நகர்த்தி செய்யலாம்.
2. ஏதாவது ஒரு வார்த்தையை Select செய்வதற்கு அதன் மேல் டபுள் க்ளிக் செய்தால் Select ஆகிவிடும். ஒரு பாராவையே Select செய்வதற்கு அதில் தொடர்ச்சியாக மூன்று க்ளிக் செய்தால் அந்த பாரா (Paragraph) Select ஆகிவிடும்.
3. இணையத்தளங்களை பார்க்கும் போது பக்கத்தின் மேலே செல்வதற்கு Page Up பட்டனையும், கீழே செல்வதற்கு Page Down பட்டனையும் பயன்படுத்தலாம். அல்லது கீழே செல்வதற்கு Space Bar பட்டனையும், மேலே செல்வதற்கு "Shift + Space Bar" பட்டன்களையும் பயன்படுத்தலாம்.
4. ஒன்றிற்கும் மேற்பட்ட திரைகளை திறந்து வைத்திருக்கும் போது, ஒரு திரையில் இருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு "Alt + Tab" பட்டங்களை அழுத்தவும்.
5. நீங்கள் கோப்புகளை Delete செய்தாலும் அது Recycle Bin பகுதியில் இருக்கும் வரை அழியாது. அங்கு சென்று Empty Recycle Bin என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
6. நீங்கள் அழிக்க நினைக்கும் கோப்புகளை Recycle Bin பகுதிக்கு செல்லாமல் முற்றிலுமாக அழிக்க நினைத்தால் "Shift + Delete" பட்டங்களை அழுத்தவும்.
7. இணையத்தளங்களின் முகவரிகளைக் கொடுக்கும் போது முழு முகவரியையும் கொடுக்கத் தேவையில்லை. .com என்று முடியும் தளங்களின் பெயரை டைப் செய்து "Cntrl + Enter" பட்டன்களை அழுத்தினால் போதும். மேலும் .net என்று முடியும் தளங்களின் பெயரை டைப் செய்து "Shift + Enter" பட்டன்களை அழுத்தினால் போதும்.
8. முக்கியமான சில குறுக்கு விசைகள்:
Cntrl + A - அனைத்தையும் Select செய்வதற்கு
Cntrl + C - Copy செய்வதற்கு
Cntrl + X - Cut செய்வதற்கு
Cntrl + V - Paste செய்வதற்கு
9. ஏதாவது சுட்டிகளை(Links) வேறொரு புதிய Window அல்லது Tab-ல் பார்க்க அதன் மேல Righ click செய்து "Open link in new tab" அல்லது "Open link in new window" என்பதை க்ளிக் செய்யலாம்.
10. கணினி திரையில் தெரிபவற்றை ஸ்க்ரீன்ஷாட் (ScreenShot) எடுப்பதற்கு உங்கள் கீபோர்டில் PrtSc (Print Screen) என்பதை க்ளிக் செய்யுங்கள். உடனே கணினியில் திரையில் உள்ளவைகள் Copy ஆகிவிடும்.
பிறகு MS Paint-ஐ திறந்து Cntrl+V அழுத்தி Paste செய்யுங்கள். திரையில் தெரிந்தவை படமாக வந்துவிடும். அதில் மாற்றங்கள் செய்ய விரும்பினால் மாற்றங்கள் செய்து, பின் Save கொடுங்கள்.
கணினி அடிப்படைகளை ஆங்கிலத்தில் எளிதாக தெரிந்துக் கொள்வதற்கு: http://tech.tln.lib.mi.us/tutor/welcome.htm
20 Comments
வணக்கம் சகோ..
ReplyDeleteபுதிய தளத்திற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteநல்லதொரு தகவலகள்...
ReplyDeleteபுதியவர்களுக்கு கண்டிப்பாக உதவும்...
புதியவர்களுக்கு பயனுள்ளவை.
ReplyDeleteபுதிய தளத்துக்கு வாழ்த்துகள்.
பல பயனுள்ள தகவல்கள். புதியவர்களுக்கு ரொம்பவும் உபயோகமாக இருக்கும்.
ReplyDeleteபுதியவர்களுக்கு கண்டிப்பாக பயன்படும் ...தொடருங்கள் பாசித்...
ReplyDeletenalla thakaval
ReplyDeleteArumai Sir. Anroid enakku romba pidikkum. Athukku oru thalama? Romba santhosam Sir. Vaalthukkal.
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா..புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்..நண்பா..
ReplyDeleteசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
வாழ்த்துக்கள் சகோ..,
ReplyDeleteபுதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteவணக்கம் நண்பரே வலைச்சரத்தில் தங்களின் பதிவினைப் பற்றிய ஓர் அறிமுகம் செய்து வைத்துள்ளேன்.நேரமிருக்கும்போது வாசிக்க வரவும்.
ReplyDeleteப்ளாக்கர் டிப்ஸ் 2012
Hi basith happy to know the release of your new blog about Android.congrats. i am on the Q to learn about it.wish you all the best basith.
ReplyDeleteவணக்கம் சகோ..
ReplyDeleteபுதிய தளத்திற்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பயனுள்ள அடிப்படை தகவல்கள்...நன்றி
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்.
ReplyDeleteமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !
ReplyDeleteGave me good information, thankS. God grant u good wage n More knowledge, Jafar
ReplyDeletevery good news fr, all the best your life.
ReplyDelete