ஹேக் செய்யப்பட்ட மைக்ரோசாப்ட் தளம்


மைக்ரோசாப்ட் இந்தியாவின் இணையதளம் சீன ஹேக்கர் குழுவினால் நேற்று ஹேக் செய்யப்பட்டது. மேலும் அந்த தளத்தில் உள்ள பயனாளர்களின் பட்டியல் கடவுச்சொற்களுடன் வெளியிடப்பட்டது.

சீனாவில்  இருந்து செயல்படும் ஹேக்கர் குழுமங்களில் ஒன்று Evil Shadow. இந்த குழு மைக்ரோசாப்ட் இந்தியாவின் இணைய வர்த்தக தளமான Microsoft Store தளத்தை நேற்று ஹேக் செய்தது. மேலும் அந்த தளத்தில் உள்ள பயனாளர்களின் விவரங்களையும், அவர்களின் கடவுச்சொற்களையும் வெளியிட்டது.


மேலும் அந்த தகவல்களை மைக்ரோசாப்ட் தளம் பாதுகாப்பற்ற (Unencrypted) முறையில் வைத்திருந்ததாகவும் அந்த ஹேக்கர் குழுமம் தெரிவித்துள்ளது. தற்போது அந்த தளத்தை மைக்ரோசாப்ட் தளம் திரும்பப்பெற்றுவிட்டது. ஆனால் தற்காலிகமாக சேவையை நிறுத்தியுள்ளது.


மேலும் கடவுச்சொற்களை மாற்றுவது குறித்தும், பாதுகாப்பு குறித்தும் பயனாளர்களுக்கு செய்தி அனுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் இந்தியா தளம்  Quasar Media என்னும் இந்திய நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தால் இயக்கப்படும் மற்ற தளங்களில் முக்கியமான தளங்கள்:


படங்கள் உதவி: ps.s.blog.163.com

Post a Comment

15 Comments

  1. வெச்சிட்டாங்கய்யா ஆப்பு !

    ReplyDelete
  2. ஸலாம்...

    என்னப்பா இது வில்லத்தனம்...

    ReplyDelete
  3. வயித்தக் கலக்குறீ(றா)ங்களே!! :-(((((

    ReplyDelete
  4. ஆப்படிச்சிட்டான்களே நண்பா

    ReplyDelete
  5. சீனாகாரன் நம்மல விட (இந்தியர்களைவிட) பெரிய வில்லனாத்தான் இருப்பானோ ....?

    ReplyDelete
  6. மைக்ரோசாப்ட் தளத்துக்கே ஹேக் வெட்டிடாய்ங்களா

    ReplyDelete
  7. மைக்ரோ சாஃப்டின் அடாவடிகளுக்கு சரியான மூக்குடைப்பு. கொய்யால அவனவன் ஆன்டிவைரஸ் கூவி கூவி இலவசமா தரான். இவனென்னடான்னா
    ஆயிரத்தெட்டு ஃபிட்டிங் ( ஓ.எஸ். பைரேட்டடா இல்லியான்னு செக் பண்ணுவாராம்) அஞ்சு பத்துக்கு வித்தா ஏன் பைரேட்டட் போடறாய்ங்க

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  9. இதுனால என்னன்ன ஆகும் :-)

    ReplyDelete
  10. SBI card, Visa எல்லாம் இந்த லிஸ்டில் இருக்கிறதே!
    வில்லங்கம் எதுவும் இருக்குமா?

    ReplyDelete
  11. சலாம் டெக்னிக்கல் புலி பாசித் அவர்களே,

    இணையத்தில் இருக்கும் எந்த தகவலும் 100 % பாதுகாப்பானது அல்ல. பஹிர்விர்க்கு நன்றி.

    /* இதுனால என்னன்ன ஆகும் :-) */

    சகோதரி ஆமினாவின் கவலைய பார்த்தா சகோதரியின் SBI வங்கி கணக்கில் நெறைய பணம் கிடக்குது போல இருக்கு.

    ReplyDelete
  12. Very good............ sema apppuuuuuuuuuu.......

    ReplyDelete
  13. இதுவும் கடந்து போகும் ! நன்றி நண்பரே !

    ReplyDelete