நம்முடைய ப்ளாக் மொழியை தேர்ந்தெடுப்பதற்கும், ப்ளாக்கின் நேர மண்டலத்தை (Time Zone) தேர்ந்தெடுப்பதற்கும் Language and Formatting பகுதி பயன்படுகிறது. இதை பற்றி இங்கு பார்ப்போம்.
Blogger Dashboard => Settings => Language and formatting பகுதிக்கு சென்றால் பின்வரும் வசதிகள் இருக்கும்.
Language:
Language - இது உங்கள் ப்ளாக்கின் மொழியை தேர்ந்தெடுப்பதற்கான வசதி ஆகும். இதில் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுங்கள். தமிழில் வைத்தால் Followers Gadget வேலை செய்யாது.
இதை ஆங்கிலத்தில் வைப்பதால் பிரச்சனை ஏதும் இல்லை. பதிவுகள், பின்னூட்டங்கள் இட்ட கிழமை, மாதம் போன்ற சில வார்த்தைகள் ஆங்கிலத்தில் இருக்கும், அவ்வளவுதான்!
தமிழில்:
ஆங்கிலத்தில்:
பிறகு புதிய பதிவு எழுதும் இடத்தில் 'அ' என்று இருக்கும். அதை க்ளிக் செய்து, பதிவெழுதும் பெட்டியில் ஆங்கிலத்தில் டைப் செய்து Space Bar தட்டினால் தமிழில் மாறிவிடும். எழுத்துப் பிழை இருந்தால் Backspace பட்டனை அழுத்தி மாற்றம் செய்யலாம்.
'அ' என்பதற்கு பக்கத்தில் உள்ள சிறிய Down Arrow-வை க்ளிக் செய்து மற்ற மொழியினை தேர்வு செய்யலாம்.
Formatting:
Time Zone - நமது ப்ளாக்கின் நேர மண்டலத்தை இங்கு தேர்வு செய்யலாம். இந்திய நேரம் என்றால் (GMT - 5.30) Indian Standard Time என்பதை தேர்வு செய்யுங்கள்.
Date Header Format - பதிவிட்ட காலத்தின் வடிவத்தை இங்கு தேர்வு செய்யலாம். இது பதிவின் தலைப்புக்கு மேலே வரும். சில டெம்ப்ளேட்களில் இது இருக்காது.
Timestamp Format - இதுவும் பதிவிட்ட காலத்தை தான் குறிக்கும். இது பதிவின் தலைப்புக்கு கீழேயோ, அல்லது பதிவிற்கு கீழேயோ வரும். இதில் நாள், கிழமை இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
சில டெம்ப்ளேட்களில் "பதிவிட்ட நாள்" தலைப்புக்கு அருகே அழகிய வடிவத்தில் இருக்கும். அப்போது timestamp இடத்தில் நேரம் மட்டும் தேர்வு செய்திருந்தால் பிழை காட்டும்.
Comment Timestamp Format - பின்னூட்டங்கள் இட்ட கால வடிவத்தை இங்கு தேர்வு செய்யலாம். இதில் நேரத்துடன் உள்ளதை தேர்வு செய்தால் நல்லது.
மாற்றங்கள் செய்த பிறகு மேலே வலதுபுறம் உள்ள Save Settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.
இறைவன் நாடினால் புதிய டாஷ்போர்டின் இறுதி அமைவான Other பகுதியை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.
இத்தொடரின் அனைத்துப் பகுதிகளும் இங்கே.
7 Comments
புதியவர்களுக்கு மிக இலகுவாக புரிந்துகொள்ளும் வகையில் விளக்கியுள்ளீர்கள் நண்பா
ReplyDeleteதொடர்ந்து எளிதாக புரிந்து கொள்ளும் வகையில்
ReplyDeleteபகிர்ந்து வருகிறீர்கள்.
பாராட்டுகள்.
வலைத்தள மொழியை ஆங்கிலத்தில் வைப்பதால் அதிக்கப்படியான பாதிப்புகள் இல்லை என்பதை இன்று தான் அறிந்துகொண்டேன்...,
ReplyDeleteதங்களது சேவைக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை..அனைத்து பதிவர்களுக்கும் உபயோகமான விஷயங்களை தந்து கலக்குறீர்கள்..வாழ்த்துக்களோடு எனது நன்றிகள்.
ReplyDeleteஹாலிவுட் திகில் : ஓர்பன் திரை விமர்சனம்..
விளக்கமான பதிவுக்கு நன்றி /
ReplyDeleteபடங்களின் வட்ட தொடு உணர்வு
என்னை போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள செய்தி ...நன்றி நண்பரே...
ReplyDeleteநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து உழவன் ...
விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !
ReplyDelete