ஆன்ட்ராய்ட் என்றால் என்ன? (150-வது பதிவு)


தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.

ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.

ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள்.

இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:


சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.

ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:


1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படி Widget-களை வைத்துக் கொள்ளலாம்.

2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும்.

3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.

4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும்.  உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :)

5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்).

மேலும்  பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்க விக்கிபீடியாவில் பார்க்கவும்.

ஆன்ட்ராய்ட் பயன்பாடு:

ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.

Android Market:

ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இறைவன் நாடினால் இதைப்பற்றி தனிப பதிவில் பார்ப்போம்.

இது 150-வது பதிவு


எப்படியோ  தத்தி, தாவி நூற்றி ஐம்பது பதிவுகள் எழுதி முடித்துவிட்டேன். எல்லா புகழும் இறைவனுக்கே! எழுதிய பதிவுகளை திரும்பப் பார்த்தால் என் எழுத்து நடையில் மாற்றங்கள் வந்திருப்பதை உணர்கிறேன். இதுவரை தொடர்ந்து அன்பையும், ஆதரவையும் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி!

Post a Comment

64 Comments

  1. வாழ்த்துக்கள்... ஆன்ட்ராய்ட் பற்றி மேலும் தொடருங்கள் நன்றி.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    பயனுள்ள பதிவிற்கு ஜசாக்கல்லாஹ். android மிகவும் பயனுள்ள இயங்குதளம். நான் மிகவும் விரும்பும் ஒன்றும் கூட. அலுவலக விசயங்களை எளிதாக கையாள முடிகின்றது. நான் மிகவும் விரும்பும் ஒரு facility என்றால் அது threaded sms தான். எளிதாக பழைய மெசேஜ்களை எடுக்க முடிகின்றது. அல்ஹம்துலில்லாஹ்..

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் ஸலாம்.

      தங்கள் அனுபவத்தை பகிர்ந்ததுக்கு நன்றி சகோ.!

      Delete
  3. /* ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இறைவன் நாடினால் இதைப்பற்றி தனிப பதிவில் பார்ப்போம். */

    ஆகா, 200 வது பதிவுக்கு இப்பயே அடி போடறீங்க...நடத்துங்க.

    ReplyDelete
  4. Norton Internet Security 2012 2Years License உடன் இலவசமாக கிடைக்கிறது !

    http://tamiltechtips.blogspot.in/2012/02/norton-internet-security-2012-v19113-2.html


    Pendriveய் Ramஆக பயன்படுத்தலாம் !

    http://tamiltechtips.blogspot.in/2012/02/usb-drive-as-ram-give-your-windows-xp.html


    மெமரி Card Data Recovery Software !

    http://tamiltechtips.blogspot.in/2012/01/memory-card-data-recovery-software.html

    ReplyDelete
  5. இந்த கட்டுரைக்கு... மிகவும் நன்றி.

    Learn Windows Servers

    ReplyDelete
  6. ஆண்டிராய்ட் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். இப்ப விரிவாத் தெரிஞ்சுகக முடிஞ்சது. 150க்கும் இனி 500, 1000ன்னு நிறைய அடிச்சு நொறுக்கவும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      Delete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

    தாங்கள் மென்மேலும் நல்ல பயனுள்ள தகவல்களை பதிய வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் ஸலாம்

      நன்றி சகோ.!

      Delete
  8. 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    ஆண்டிராய்ட் பற்றி எழுத ஆரம்பித்ததற்கு நன்றி!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    பயனுள்ள தகவல்.

    150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. சலாம் சகோ.

    பல புதிய தகவல்கள். இது போன்று இன்னும் பல தகவல்களை திரட்டி 500ஐத் தொட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்ல பதிவு..என்னை போன்றவர்களுக்கு மிக பெரிய உதவியாக இருக்கும்..தங்களது பணி தொடர எனது வாழ்த்துக்களோடு பாராட்டுக்கள் சகோ..

    சீக்ரட் விண்டோ : திகிலூட்டும் மர்ம பட விமர்சனம்..

    ReplyDelete
  12. நல்ல தகவல்கள், 150-க்கு வாழ்த்துகள்...!

    ReplyDelete
  13. Assalamu alikum
    super post bro!
    1500 pathivukalaiyum thandi sella vazhthukal!

    ReplyDelete
  14. ஆண்டிராய்ட் பயன்பாடுகளின் விளக்கம் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருந்தது.150-பதிவு என்பது பெரிய விஷயம்.., உளம் கனிந்த வாழ்த்துக்கள்...., விரைவில் 200-ஐ எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  15. ஆன்ட்ராய்ட் பற்றி எனக்கு தெரியாது ..தேவையான பதிவு

    150-வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. Arumaiyan thagavalgal. Naanum oru android priyan Sago. 150 ku manamaarntha vaalthukkal.

    ReplyDelete
  17. சலாம் சகோ

    உங்களுக்கு got mobile சாரி சாரி ஆன்ட்ராய்ட் மேல அப்படி என்ன விருப்பம் :-)

    150க்கும் அதே தான்!

    மென்மேலும் பல நல்ல பதிவுகள் தர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. தேவையான பதிவு நண்பா..
    150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. ASSALAMU ALAIKKUM W.R.B.

    DEAR ABDUL BASITH,

    YOU ARE DOING A GREAT SERVICE BENEFITTING MAJORITY IN A SIMPLIFIED MANNER.

    THAT IS YOUR SPECIALITY.

    KEEP IT UP.

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  21. பயனுள்ள பதிவு நண்பா... 150க்கு வாழ்த்துகள்..!! :)

    ReplyDelete
  22. அஸ்ஸலாமு அழைக்கும்
    வரும் சில ஆண்டுகளுக்கு ஆன்ட்ராய்ட்தான் கலக்க போகிறது. மேலும் பல்வேறு தகவலை எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  23. அஸ்ஸலாமு அலைக்கும்.ஆண்ட்ராய் ஃபோனின் சிறப்பம்சங்களை ஒருமுறை அனுபவித்தவர்கள் மீண்டும் மீண்டும் புதிய புதிய அனுபவங்களைப் பெறுவர். தமிழ் தளங்களை வாசிக்க ஓபரா மற்றும் சிங்கள-தமிழ் ப்ரவ்சர் மட்டுமே உள்ளது நானறிந்த குறைபாடு.ஜிஞ்சர் ப்ரெட் மற்றும் அதற்கடுத்த பதிப்புகளில் இந்த சிரமம் நீக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். சோனி எரிக்ஸன் ஃபோன்களில் மார்ச் இறுதிவாரத்தில் புதிய பதிப்பு மேம்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.அடிக்கடி ஆண்ட்ராயிடையும் கவனிங்க :)

    ReplyDelete
  24. வாழ்த்துக்கள் அன்பரே 150 க்கு ஆன்ட்ராய்ட் பற்றி தொடருங்கள்

    ReplyDelete
  25. 150 பதிவிற்குப் பாராட்டுக்களும் மேலும் பல பயனுள்ள பதிவுகளைத் தரப் பராட்டுக்களும்.

    ReplyDelete
  26. அஸ்ஸலாமு அலைக்கும்
    பாஸித் உங்கள் தளம் பயனுள்ளாதாய் உள்ளது ,
    மேலும் தங்கள் செல் நம்பர் வேண்டும் எப்படி பெறலாம்,தயசெய்து
    sabeeramsabeera@gmail.com அனுப்ப இயலுமா/

    ReplyDelete
  27. வாழ்த்துகள் பாஸித்! மேலும் பல நல்ல பதிவுகளை நீங்கள் தரவேண்டும்...

    ReplyDelete
  28. மிகவும் பயனுள்ள பதிவு நண்பா. இன்னும் பல்லாயிரம் பதிவுகள் வெளியிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. வாழ்த்துகள் சகோ. அடுத்து 1500 பதிவுகளை நோக்கி வீறுநடை போடுங்கள்.

    ReplyDelete
  30. 150 - க்கு பாராட்டுக்கள் நண்பரே ! மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  31. மிகவும் பயனுள்ள தகவலுக்கு நன்றி,

    150 க்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  32. தகவலுக்கு நன்றி நண்பா...150-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. மேலும் சிறப்பான பதிவுகளை தந்து உங்கள் வலையுலகப்பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா....

    ReplyDelete
  33. நல்ல பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி . உங்களின் 150 பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோ . தொடர்தும் வெற்றியோடு பயணிக்கவும் .

    ReplyDelete
  34. 150க்கு வாழ்த்துக்கள்.. பக்கத்துல இன்னும் ஒரு நாலு அஞ்சு சைபர் வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  35. The message could not be posted to this Wall-இது பேஸ்புக்-ல, என்னுடைய வலைத்தள பதிவுகளை பகிரும் போது நான் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனை, இதற்க்கு தீர்வு காண இயலுமா நண்பரே...!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே! பதிவின் தலைப்பு பெரிதாக இருந்தால் ஒருவேளை அந்த பிழை வரலாம். அப்படி பகிரும் போது, தலைப்பில் க்ளிக் செய்து, அளவை குறைத்து பகிர்ந்து பாருங்கள்.

      Delete
    2. ரொம்பநாளாக இருந்த சந்தேகத்தை தீர்த்து வைத்துவிட்டீர்கள்.., நன்றி நண்பரே...!

      Delete
    3. ரொம்ப நாளாக இருந்து வந்த சந்தேகம் தீர்ந்தது நண்பா, நன்றி..!

      Delete
  36. நல்ல பதிவு... நன்றி.. 150க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. காத்துவாக்குல ஆண்ட்ராய்ட்னா என்னன்னு ஒரு ஐடியா இருந்துது. இந்தப் பதிவினால், அது மிகவும் தெளிவாகிவிட்டது. நன்றிங்க...

    ReplyDelete
  38. 150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்

    உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பயன் படுகிறது.

    ReplyDelete
  39. எல்லாப் புகழும் இறைவனுக்கே. வாழ்த்துகள் அப்துல் பஷீத்.

    ReplyDelete
  40. வணக்கம் சகோ...

    தங்களது 150 ற்கு எனது பிந்திய வாழ்த்துக்கள்....

    நானும் ஒரு அன்ரோயிட் போனை வைத்துக் கொண்டு பெரும்பாடு படுகிறேன் அதில் நான் அடைந்துள்ள பிரச்சனைக்கு தீர்வு சொல்ல முடியுமா?

    நன்றியுடன்
    சுதா

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோ.!

      என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள். எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்.

      என் மின்னஞ்சல் முகவரி: basith27[at]gmail.com

      Delete
  41. arumaiyaana vilakkam .thanks basith. . . .
    anbutan a,arif

    ReplyDelete
  42. நல்ல பகிர்வு. உபயோகமாக இருந்தது

    ReplyDelete
  43. எளிமையான விளக்கத்தில் பயனுள்ள பதிவு..!!!

    ReplyDelete
  44. sako android update seyvathu patti oru pathivu poda mudijima

    ReplyDelete
    Replies
    1. இறைவன் நாடினால், இந்த மாத இறுதிக்குள் என் மொபைலுக்கு புதிய பதிப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். அது கிடைத்ததும் அது பற்றி எழுதுகிறேன் சகோ.!

      Delete
  45. Sako recently I bought the one android 4.0 galaxy s duos s 7562 I could not download the apps at sdcard and transfer

    ReplyDelete