இணைய வசதி இல்லாததால் பதிவு எழுத முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னால் இணைய வசதி கிடைத்த பின்னும் வேறொரு காரணத்தால் பதிவு எழுத முடியவில்லை. ப்ளாக் தொடங்குவது எப்படி? தொடரின் அடுத்த பகுதியை இறைவன் நாடினால் விரைவில் தொடர்கிறேன்.
கூகுள் ப்ளஸ் புது வசதிகள்:
Add Text on Photos:
கூகுள் ப்ளஸ் தளத்தில் நாம் பகிரும் புகைப்படங்களை நமக்கு விருப்பமான முறையில் அழகுபடுத்தும் வசதி ஏற்கனவே உள்ளது. அதை பற்றி கூகிளின் அதிரடி மாற்றங்கள் என்ற பதிவில் பார்த்தோம். தற்போது நமது புகைப்படத்தில் எழுத்துக்களை மட்டும் எளிதாக சேர்க்கும் வசதியை தந்துள்ளது.
Share பகுதியில் புகைப்படத்தை இணைத்த பின் படத்திற்கு கீழே Add text என்று வரும். அதில் க்ளிக் செய்து பிறகு வரும் பக்கத்தில் எழுத்துக்களை சேர்க்கலாம்.
ஆனால் இதில் வெள்ளை நிற எழுத்துக்களை மட்டும் தான் சேர்க்க முடியும். மேலே, கீழே, இடையில் என்று மூன்று இடங்களில் மட்டும் தான் சேர்க்க முடியும்.
Hashtag Auto-Complete:
கூகுள் ப்ளஸ் தளத்தில் செய்திகளை பகிரும் போது Hashtag (#) சேர்ப்போம் அல்லவா? தற்போது ஒரு எழுத்து டைப் செய்தாலே அது தொடர்பான சில பரிந்துரைகளை காட்டும். அதனை க்ளிக் செய்துக் கொள்ளலாம்.
ஆன்ட்ராய்ட்:
இனி ப்ளாக்கர் நண்பன் தளத்தில் ஆன்ட்ராய்ட் (Android) பற்றியும் எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன். ஆன்ட்ராய்ட் தொழில்நுட்பம் பற்றியும், பயனுள்ள ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன் மற்றும் விளையாட்டுக்கள் பற்றியும் இறைவன் நாடினால் விரைவில் எழுதுகிறேன்.
7 Comments
எழுதுங்கள் சகோ
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்
//ஆன்ட்ராய்ட் (Android) பற்றியும் எழுதலாம் என முடிவெடுத்துள்ளேன். //
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கிறோம்... நன்றி நண்பரே.
salaam bro.abdul basit,
ReplyDeletewelcome back after a gap.
awaiting for 'android series'.
your xperia is nice. mashaAllah.
wish you all the best.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஆண்ட்ராய்ட் குறித்து எழுதுங்கள்.எளிய நடையிலான உங்கள் நுட்ப பதிவுகள் அருமை. வாழ்த்துக்கள் சகோதரரே.
என் இனிய தோழரின் பதிவுகள் சிந்தனையில் நிறுத்தி, செயல்படுத்தும் பதிவுகள். இவ்வளவு எளிமையாக எழுத வைக்கும் ஆற்றல் கொடுத்த இறைவனுக்கு நன்றி. இறைவன் அருள் இருப்பதால், தொடருங்கள் தோழரே!
ReplyDeleteஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்.
http://atchaya-krishnalaya.blogspot.com
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteA warm return. May the Almighty bless you with more knowledge..
Welcome back.. :)
வஸ்ஸலாம்
பயனுள்ள பதிவு! நன்றி நண்பரே!
ReplyDelete