ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-14]


நமது ப்ளாக்கிற்கு வரும் வாசகர்கள் நமது பதிவுகளை பின்தொடர்வதற்கு பயன்படுவது Followers Gadget. இதன் மூலம் நாம் புதிய பதிவுகள் இட்ட உடனேயே நமது ப்ளாக்கை பின்தொடர்பவர்களின் டாஷ்போர்டிற்கு வந்துவிடும். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

இத்தொடரின்  அனைத்து பகுதிகளும் ஒரே பக்கத்தில் இங்கே.

நமது ப்ளாக்கில் Followers Gadget வைக்க:

ப்ளாக்கர் டாஷ்போர்டிற்கு சென்று Layout பகுதிக்கு சென்று Add a Gadget என்பதை கிளிக் செய்து Followers என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு Save என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு உங்கள் ப்ளாக்கில் Followers Gadget தெரியும்.



கவனிக்க: உங்கள் ப்ளாக்கின் மொழியை தமிழ் என்று வைத்தால் Followers Gadget தெரியாது. அதனை ஆங்கிலத்திற்கு மாற்றவும்.

ப்ளாக்  மொழியை மாற்ற Blogger Dashboard => Settings => Language and Formatting பகுதிக்கு சென்று Language என்ற இடத்தில் English என்பதை தேர்வு செய்யுங்கள்.

இந்த மொழிமாற்றத்தால் உங்கள் பதிவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. பதிவிட்ட தேதி, மாதம், கேட்ஜெட்கள், பின்னூட்ட பகுதி ஆகியவைகளில் உள்ள சில வார்த்தைகள் மட்டும் ஆங்கிலத்தில் வரும்.

மற்ற வலைப்பதிவுகளை பின்தொடர:

நீங்கள் பின்தொடர விரும்பும் பிளாக்கிற்கு சென்று அங்கு Followers Gadget எங்குள்ளது? என்று பார்க்கவும். அதில் Join this site என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு வரும் விண்டோவில் வலது புறம் இரண்டு விருப்பங்கள் இருக்கும்.



Follow Publicly - நாம் பின்தொடர்வது அனைவருக்கும் தெரியும்

Follow Privately - நாம் பின்தொடர்வது அந்த ப்ளாக்கை நடத்துபவர்களுக்கு கூட தெரியாது. ஆனால் அந்த ப்ளாக்கில் உள்ள பதிவுகள் நமது டாஷ்போர்டில் தெரியும்.

ஏதாவது ஒன்றை தேர்வு செய்து Follow this blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு அந்த ப்ளாக்கை நீங்கள் பின்தொடர்ந்துவிட்டீர்கள் என்று சொல்லும். அதில் Done என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! இனி உங்கள் ப்ளாக்கர் டாஷ்போர்டில் நீங்கள் பின்தொடர்ந்துள்ள தளத்தில் புதிய பதிவுகள் வந்த உடனேயே காட்டும்.


கவனிக்க: நீங்கள் பல தளங்களை பின்தொடர்ந்தாலும் சில நேரங்களில் உங்கள் டாஸ்போர்டில் "நீங்கள் எந்த பிளாக்கையும் பின்தொடரவில்லை" என்று காட்டும். அதனை பொருட்படுத்த வேண்டாம். சில மணி நேரங்களுக்கு பிறகு சரியாகிவிடும்.

நீங்கள் பின்தொடரும் ப்ளாக்கை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய:



நீங்கள் பின்தொடர்ந்துள்ள ப்ளாக்கில் Follower Gadget-ல் Sign-In என்று இருந்தால் அதை க்ளிக் செய்து உள்நுழையுங்கள். பிறகு உங்கள் புகைப்படத்தின் கீழே Option என்பதை க்ளிக் செய்து, Invite Friends என்பதை க்ளிக் செய்யுங்கள். பிறகு பின்வரும் விண்டோ வரும்.


அதில் Google என்ற இடத்தில்உங்கள் கூகுள் ப்ளஸ் நண்பர்களின் பட்டியலை காட்டும். நீங்கள் யாருக்கெல்லாம் பரிந்துரை செய்ய விரும்புகிறீர்களோ? அவர்களின் படங்களை க்ளிக் செய்து, வலது புறம் கீழே Send Invitations என்பதை க்ளிக் செய்யுங்கள்.

அல்லது Google என்பதற்கு அருகில் உள்ள Share என்பதை க்ளிக் செய்து, பேஸ்புக், ட்விட்டர் போன்ற பல்வேறு சமூக தளங்களில் பரிந்துரை செய்யலாம்.

அல்லது வலதுபுறம் உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளை கொடுத்தும் பரிந்துரை செய்யலாம்.

நாம் பின்தொடரும் தளத்திலிருந்து விலகுவது பற்றி ப்ளாக்கர் நண்பன் இனி டாட் காமில்.. என்ற  பதிவில் பார்க்கவும்.

இறைவன் நாடினால் அடுத்த பதிவில் மிகவும் முக்கியமான Template பகுதியை பற்றி பார்ப்போம்.

Post a Comment

18 Comments

  1. புதியவர்களுகு பயனுள்ள தொடர்..

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.ஆபத்துள் பாஸித்,
    தொடர் அருமை..!
    இதற்கு முன்னர் பலமுறை ஒரு 'டெஸ்ட் ப்ளாக்' மூலம் விவரித்தீர்கள்...
    இப்போது, ஃபால்லோவர் போடுவது பற்றி விளக்கும் போது...
    பிளாக்கர் நண்பன் ப்ளாக்..! பலே..பலே..!
    அது சரி, இதென்ன ரெண்டு அப்துல் பாஸித்..? 436 & 453 ..?
    'நமக்கு நாமே நண்பர்கள்'..! May be testing..? அவ்வ்வ்வ்வ்வ்வ்.....

    ReplyDelete
  3. அருமையாக 14 பாகம் முடிந்து விட்டது, மிகத்தெளிவாக புதியவர்களுக்கும், ம்ற்றவர்களுக்கும் பயனுள்ள ப்கிர்வு , வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நானும் எல்லாபகுதிகளும் படித்து வருகிரேன். நல்லா புரியும்படி சொல்லி வரீங்க. நன்றி. நம்மபக்கம் வந்து நாளாச்சே?

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  6. மாப்ள பயனுள்ள தொடர் பதிவுகள்...நான் லேட்டா வந்ததுக்கு திட்டிக்கொள்ளவும் ஹிஹி!

    ReplyDelete
  7. //தங்கம் பழனி said... 1

    புதியவர்களுகு பயனுள்ள தொடர்..//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  8. //~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said... 2

    ஸலாம் சகோ.ஆபத்துள் பாஸித்,
    தொடர் அருமை..!//

    வ அலைக்கும் ஸலாம்

    நன்றி சகோ.!

    // இதற்கு முன்னர் பலமுறை ஒரு 'டெஸ்ட் ப்ளாக்' மூலம் விவரித்தீர்கள்...
    இப்போது, ஃபால்லோவர் போடுவது பற்றி விளக்கும் போது...
    பிளாக்கர் நண்பன் ப்ளாக்..! பலே..பலே..!//

    பதிவை சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன். மற்ற வலைப்பதிவுகளை பின்தொடர்வது பற்றி விலக்கியதால் டெஸ்ட் ப்ளாக் அல்லாத மற்ற (என்) தளத்தை பின்தொடர்ந்து காட்டியுள்ளேன். மேலும் டெஸ்ட் கணக்கின் கூகுள் ப்ளஸ்ஸில் நண்பர்கள் இல்லாததால் என்னுடைய கணக்கை கொண்டு விவரித்துள்ளேன்.


    //அது சரி, இதென்ன ரெண்டு அப்துல் பாஸித்..? 436 & 453 ..?
    'நமக்கு நாமே நண்பர்கள்'..! May be testing..?//

    436- இது முன்பு நான் பின்தொடர்ந்தது. டொமைன் மாற்றிய பிறகு பின்தொடர்வதை விட்டு வெளியேறி மறுபடியும் பின்தொடர்ந்தது.

    453 - டெஸ்ட் கணக்கு மூலம் பின்தொடர்ந்து விளக்கியது. தற்போது இதை நீக்கிவிட்டேன்.

    இந்த விளக்கம் போதுமா? //அவ்வ்வ்வ்வ்வ்வ்.....//// இதை நான் சொல்லணும்...

    ReplyDelete
  9. //Jaleela Kamal said... 3

    அருமையாக 14 பாகம் முடிந்து விட்டது, மிகத்தெளிவாக புதியவர்களுக்கும், ம்ற்றவர்களுக்கும் பயனுள்ள ப்கிர்வு , வாழ்த்துக்கள்//

    நன்றி சகோ.!

    ReplyDelete
  10. //Lakshmi said... 4

    நானும் எல்லாபகுதிகளும் படித்து வருகிரேன். நல்லா புரியும்படி சொல்லி வரீங்க. நன்றி. நம்மபக்கம் வந்து நாளாச்சே?//

    நன்றிமா! சீக்கிரம் வரேன்மா! :) :) :)

    ReplyDelete
  11. //Rathnavel said... 5

    அருமையான பதிவு.
    நன்றி.//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. //விக்கியுலகம் said... 6

    மாப்ள பயனுள்ள தொடர் பதிவுகள்...நான் லேட்டா வந்ததுக்கு திட்டிக்கொள்ளவும் ஹிஹி!
    //

    நன்றி நண்பரே! இதில் திட்டுவதற்கு எதுவுமில்லையே...

    :) :) :)

    ReplyDelete
  13. A டூ Z அழகா தெளிவா சொல்லிகிட்டு வறீங்க வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  14. ஒவ்வொரு பதிவும் மொத்தம் எத்தனை பின்னூட்டங்களை பெற்றிருக்கிறது என்பதை பதிவின் தலைப்புக்கு பக்கத்தில் இடது புறம் காட்டியிருக்கிறீர்கள், அதனை எங்கள் தளத்தில் எப்படி கொண்டுவருவது என்பது பற்றி சொல்ல முடியுமா?

    ReplyDelete
  15. //

    நீங்கள் பின்தொடர விரும்பும் பிளாக்கிற்கு சென்று அங்கு Followers Gadget எங்குள்ளது? என்று பார்க்கவும். அதில் Join this site என்பதை க்ளிக் செய்யுங்கள்.


    பிறகு வரும் விண்டோவில் வலது புறம் இரண்டு விருப்பங்கள் இருக்கும்.



    Follow Publicly - நாம் பின்தொடர்வது அனைவருக்கும் தெரியும்

    Follow Privately - நாம் பின்தொடர்வது அந்த ப்ளாக்கை நடத்துபவர்களுக்கு கூட தெரியாது. ஆனால் அந்த ப்ளாக்கில் உள்ள பதிவுகள் நமது டாஷ்போர்டில் தெரியும்.

    ஏதாவது ஒன்றை தேர்வு செய்து Follow this blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.//

    நண்பா இது ஒரு பெரிய வேலை

    நாம nav bar - ல follow ன்னு ஒரு லிங்க் இருக்கும் ... அத கிளிக் பண்ணுன உடனே வேறொரு விண்டோ வரும் . அதுல follow உதா பட்டன கிளிக் follower ஆயிடுவோம் ..google friend connect -லயும் காட்டிடும் ..

    இரண்டே கிளிக் -ல follower -ஆயிடலாமே ...

    மேலும் அந்த nav bar நாம மறைச்சு தான இருக்கும் ..

    url.blogspot.com/thkl இப்படி கொடுத்தா nav வந்துடும் .

    ReplyDelete
  16. வணக்கம் சகோதரரே மொழியை ஆங்கிலத்தில் மாற்றிய
    பின்னரும் பின்தொடர்வோர் பட்டியலில் இணைந்தவர்களை
    காட்ட மறுக்கிறதே !..அதிலும் தமிழில் பின் தொடர் உள்நுழை
    என்றே வருகிறதே .இப்போது இதை எவ்வாறு சரி செய்வது ?...
    தங்களின் இந்த சேவையினால் பயன்பெறுவோர் பட்டியலில்
    முதலிடம் எனக்கே :) வாழ்த்துக்கள் உங்கள் ஆக்கம் மென்மேலும்
    உயர்சியடைய .மிக்க நன்றி இச் செவைக்களுக்கு .

    ReplyDelete
    Replies
    1. சகோ.! உங்கள் தளத்தின் மொழி தமிழில் தான் உள்ளது.

      Blogger Dashboard => Settings => Language and Formatting பகுதிக்கு சென்று Language என்ற இடத்தில் English என்பதை தேர்வு செய்யுங்கள்.

      Delete
  17. வலைத்தளம் தமிழ் ஆக்கங்களை எழுதத் தோள்கொடுத்தது
    என்றால் உங்கள் தொழினுட்பத் தகவல்களே அதைக்
    காத்து நிற்க்கக் கை கொடுக்கின்றது .எதுவுமே தெரியாத
    நாமும் கொஞ்சம் தெரியும் என்று சொல்லும் அளவிற்கு
    உங்கள் சேவை உள்ளது என்பதை மீண்டும் மீண்டும்
    பெருமையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் .
    மிக்க நன்றி சகோ தகவல்களுக்கு .!!!.....

    ReplyDelete