கூகுள் ப்ளஸ் தொடங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை வரிசையாக அறிமுகப்படுத்தி வருகிறது கூகுள் தளம். மேலும் தனது தளங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வருகிறது. ஏற்கனவே ஜிமெயிலில் சில கூகுள் ப்ளஸ் வசதிகளை அளித்துள்ள கூகுள் தளம், தற்போது பல பயனாளர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து மேலும் சில வசதிகளை ஜிமெயிலில் அறிமுகப்படுத்தியுள்ளது.
மெயிலில் கூகுள் ப்ளஸ் பகிர்தல்கள்:
கூகிள் ப்ளஸ் தளத்தில் உள்ளவர்கள் யாராவது நமக்கு மெயில் அனுப்பினால், அந்த மெயிலில் வலதுபுறம், கடைசியாக அவர் கூகுள் ப்ளஸ்ஸில் பகிர்ந்ததைக் காட்டும். மேலும் அவர் நமது Circle-ல் இல்லை என்றால் Add to circles என்ற பட்டனைக் காட்டும். அதனை க்ளிக் செய்து நமது Circle-ல் இணைத்துக் கொள்ளலாம்.
ஜிமெயிலில் கூகுள் சர்கிள்:
ஜிமெயிலின் இடதுபுறம் கூகிள் ப்ளஸ்ஸில் நாம் உருவாக்கிய சர்கிள்களை காட்டும். இதன் மூலம் குறிப்பிட்ட சர்க்கிளில் உள்ளவர்களின் மின்னஞ்சல்களை மட்டும் தனியாக பார்க்கலாம்.
தானாக மேம்படுத்தப்படும் தொடர்பு விவரங்கள்:
நமது சர்க்கிளில் உள்ளவர்கள் கூகுள் ப்ளஸ்ஸில் நம்முடன் பகிர்ந்துள்ள அவர்களின் இருப்பிடம், தொலைபேசி எண்கள் ஆகியவைகளை Gmail Contacts பகுதியில் பார்க்கலாம். அவர்கள் அந்த விவரங்களை மாற்றும்போதெல்லாம் இந்த பகுதியிலும் தானாக மாறிவிடும்.
ஜிமெயிலில் மேலே Gmail என்பதை க்ளிக் செய்து, Contacts என்பதை க்ளிக் செய்தால் ஜிமெயிலில் தொடர்பில் உள்ளவர்களின் பட்டியலைக் காட்டும். மேலும் சர்க்கிளில் உள்ளவர்களின் பட்டியலையும் காட்டும். அங்கு மேற்சொன்ன தகவல்களைப் பார்க்கலாம்.
மின்னஞ்சல் படங்களை பகிர்தல்:
நம்முடைய மின்னஞ்சலுக்கு யாராவது படங்களை அனுப்பினால் அதனை மின்னஞ்சலில் இருந்தே நேரடியாக கூகுள் ப்ளஸ்ஸில் பகிரலாம். முன்பு படத்திற்கு அருகே View, Download என்று இருக்கும். தற்போது அதனுடன் சேர்த்து Share என்றும் இருக்கும். அதை க்ளிக் செய்து பகிரலாம்.
கவனிக்க:
Image Credits: Google , www.venturebeat.com
6 Comments
வணக்கம் நண்பரே..
ReplyDeleteஎனக்கு தற்போது இந்த வசதி ஆக்டிவேட் ஆகிவிட்டது.நன்றி நண்பரே பயனுள்ள பகிர்விற்க்கு..
தகவல்களுக்கு நன்றிங்கோ மாப்ளே!
ReplyDeleteமிகமிகப் பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஸலாம்
ReplyDelete//கவனிக்க: இந்த வசதிகளையும் கூகுளின் எழுதப்படாத விதியின்படி ஒரு சிலருக்கு மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. மற்றவர்களுக்கும் விரைவில் வரும். எனக்கு இரண்டாவது மற்றும் கடைசி வசதிகள் மட்டும் இன்னும் வரவில்லை.//
இந்த விதி என்னக்கு வந்துவிட்டது .. இறைவன் நாடிவிட்டான் ...
Thanks for cool info
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி நண்பரே
ReplyDelete