அனைவருக்கும் பேஸ்புக் டைம்லைன்


சமீபத்தில் ஃபேஸ்புக் தளம் சுயவிவர பக்கத்தின் (Profile Page) தோற்றத்தை மாற்றி டைம்லைன் (Timeline) என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதிகமானோர் அதனை பெற்றிருப்பீர்கள். தற்போது அவ்வசதியை அனைவருக்கும் அமல்படுத்தியுள்ளது. அதனை பற்றி கொஞ்சமாக இங்கு பார்ப்போம்.

புதிய பேஸ்புக் டைம்லைன் பெற:

பேஸ்புக்கில் உள்நுழைந்தவுடன் உங்களுக்கு பேஸ்புக் டைம்லைன் பற்றிய அறிவிப்பு வரும். அப்படி வரவில்லையெனில் www.facebook.com/about/timeline என்ற முகவரிக்கு செல்லவும்.


அங்கு Get Timeline என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும்.


இந்த புதிய தோற்றம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுவிடும். தற்போது இந்த தோற்றத்தை மற்றவர்கள் பார்க்க Publish Now என்பதை க்ளிக் செய்யுங்கள். அது க்ளிக் செய்யும் வரை மற்றவர்களுக்கு உங்கள் பழைய ப்ரொபைல் பக்கம் தான் தெரியும்.

இந்த  புதிய டைம்லைனில் உள்ள சில வசதிகளை மட்டும் பார்ப்போம்.

Cover Photo:

பேஸ்புக் டைம்லைன் (அல்லது ப்ரொபைல்) பக்கத்தில் மேலே பெரிய படத்தை இணைக்கும் வசதி உள்ளது. இது Cover எனப்படும். Add a Cover என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு விருப்பமான படத்தை இணைக்கலாம்.

கவர் பட இணைத்தபின் உள்ள தோற்றம்.


Hide from Timeline:



Timeline பகுதியில் தெரிபவற்றில் ஏதாவதை அந்த பக்கத்தில் தெரியக் கூடாது என்று நினைத்தால், அதன மேலே மவுஸை கொண்டு போனால் வலதுபுறம் பென்சில் ஐகான் இருக்கும். அதனை க்ளிக் செய்து, Hide from Timeline என்பதை க்ளிக் செய்தால், அது டைம்லைன் பகுதியில் தெரியாது.

Activity Log:


பேஸ்புக்கில் நம்முடைய செயல்பாடுகளை இந்த Activity Log பகுதியில் காணலாம். இங்கு உள்ளது நமக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது.

மற்ற வசதிகளை நீங்கள் பயன்படுத்தி பார்க்கவும்.

கவனிக்க:

சமூக வலையமைப்பு தளங்களால் நன்மைகள் ஓரளவு இருந்தாலும், இங்கு நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் இது போன்ற தளங்களில் தங்களின் புகைப்படங்கள், சுயவிவரங்களை பகிரும் விசயத்தில் கவனம் தேவை.




Post a Comment

12 Comments

  1. அதை பத்தி ஒன்னுமே தெரியாது, நமக்கு கவலை யில்லை

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  3. செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்தகொள்ளும் சகோவிற்குப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்....
    நன்றி சகோ!

    ReplyDelete
  4. அட அட இனி எல்லார் Profile பக்கமும் TImeline ஆக மாறி அழகா இருக்கும்.

    ReplyDelete
  5. விஷயம் புரிய வைத்ததர்க்கு நன்றி மாப்ள!

    ReplyDelete
  6. தகவலிற்கு நன்றி நண்பா

    ReplyDelete
  7. அருமையான தகவலுக்கு நன்றி நண்பரே!
    என் வலையில்:
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  8. very nice post

    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  9. மிகவும் பயனுள்ள பகிர்வு நண்பா... பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. அதுவும் கவனிக்க டிப்ஸ் அவசியமானது... நன்றி நண்பா.

    ReplyDelete
  11. நன்றி நன்பரே, நானும் இணைத்துவிட்டேன்.

    ReplyDelete
  12. நண்பருக்கு நன்றி...

    பல நாட்கள் இதை செயல்படுத்த வழி தேடிக்கொண்டிருந்தேன்..

    தமிழார்வன்.

    ReplyDelete