ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-9]

Image Credit: www.extramortgages.com/

பதிவு எழுதுவதுடன் நம்முடைய வேலை முடிந்துவிடுவதில்லை. நம்முடைய பதிவிற்கு எங்கிருந்து வாசகர்கள் வருகிறார்கள்? நம்முடைய ப்ளாக்கில் எது மாதிரியான பதிவுகள் அதிகம் பார்க்கப்படுகின்றன? என்பது போன்ற புள்ளிவிவரங்களை (Statistics) அறிந்துக் கொள்வது அவசியமாகும். இது நம்முடைய ப்ளாக்கை மேம்படுத்த உதவும்.

இந்த தகவல்களை நாம் அறிந்துக் கொள்ள Stats பகுதி பயன்படுகிறது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

ப்ளாக்கர் டாஷ்போர்டில் More options பட்டனை க்ளிக் செய்து, Stats என்பதை க்ளிக் செய்யுங்கள்.



அல்லது டாஷ்போர்டில் உங்கள் பெயருக்கு கீழே பக்க பார்வைகளை (Page Views) காட்டும் இடத்தில் க்ளிக் செய்யுங்கள்.



பிறகு மேலோட்டமான புள்ளிவிவரங்களைக் (Overview Stats) காட்டும்.


இதனை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

கால(ம்)வாரியாக  புள்ளிவிவரங்கள்:


இந்த பட்டன்கள் மூலம் தற்போது, கடந்த ஒரு நாள், கடந்த வாரம், கடந்த மாதம், மொத்தமாக என்று காலவாரியான புள்ளிவிவரங்களைக் காணலாம்.

மேலோட்டமான புள்ளிவிவரங்கள்:


இன்று, நேற்று, கடந்த ஒரு மாதம், மொத்தமாக என்று பக்க பார்வைகளை (Pageviews) மேலோட்டமாக பார்க்கலாம்.

அதற்கு  கீழே உள்ள Don't track your own pageviews என்பதை கிளிக் செய்தால் பின்வரும் விண்டோ திறக்கும்.


நம்முடைய ப்ளாக்கை நாம் பார்ப்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.

நம்  பார்வைகளையும் சேர்க்க வேண்டும் என்றால் "Track my pageviews" என்பதையும், வேண்டாம் என்றால் "Don't track my pageviews" என்பதையும் தேர்வு செய்யுங்கள்.

ஒரு உலவியில் "கணக்கில் சேர்க்க வேண்டாம்" எனத் தேர்வு செய்து, மற்ற உலவிகளில் உங்கள் ப்ளாக்கை நீங்கள் பார்த்தால் அதனை கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

பதிவுகளின் புள்ளிவிவரங்கள் (Posts):


இது நம்முடைய பதிவுகள் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்ற புள்ளிவிவரங்கள் ஆகும். இதில் More என்பதை கிளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.


பதிவுகள் மட்டுமின்றி, நாம் உருவாக்கிய தனி பக்கங்களும் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளது? என்ற விவரங்களை காட்டும்.

பரிந்துரைத் தளங்களின் புள்ளிவிவரங்கள் (Traffic Sources):


எந்த தளங்களில் இருந்து நமது தளத்திற்கு வாசகர்கள் வருகிறார்கள்? என்பதை இங்கு காணலாம். இதில் More என்பதை கிளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.



இதில் மூன்று பகுதிகள் இருக்கும்.

Referring URLs - எந்த இணையப் பக்கத்திலிருந்து வந்தார்களோ? அதன் முகவரியையும், அங்கிருந்து எத்தனை பேர் வந்தார்கள்? என்பதையும் காட்டும்.

Referring Sites - எந்த தளத்தில் இருந்து வாசகர்கள் வந்தார்களோ? அந்த தளத்தின் முகவரியையும், அந்த தளத்தில் இருந்து  எத்தனை பேர் வந்தார்கள்? என்பதையும் காட்டும்.

உதாரணத்திற்கு மேலுள்ள படத்தில் ப்ளாக்கர் நண்பன் தளத்தின் மூன்று பக்கங்களில் இருந்து வாசகர்கள் வந்துள்ளார்கள். இது Referring URLs ஆகும்.

ப்ளாக்கர் நண்பன் தளத்தின் முகவரி (http://bloggernanban.blogspot.com) Referring Site ஆகும்.

Search Keywords - தேடுபொறிகளில் இருந்து எந்த வார்த்தைகளைத் தேடி நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்ற விவரங்களைக் காட்டும்.


வாசகர்களின்  விவரங்கள் (Audience):

எந்த நாடுகளிலிருந்து வாசகர்கள் நமது தளத்திற்கு வந்துள்ளார்கள்? என்பதை வரைப்படமாகக் காட்டும். இதில் More என்பதை க்ளிக் செய்தால் மொத்த விவரங்களையும் காட்டும்.



Pageviews by Countries - எந்த நாடுகளில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.

Pageviews by Browsers - எந்த இணைய உலவியில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.

Pageviews by Operating Systems - எந்த இயங்குதளத்தில் இருந்து, எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்ற விவரங்கள்.

இந்த ப்ளாக்கர்  Stats-ல் உள்ள பெரிய குறை, முதல் பத்து விவரங்களை மட்டுமே காட்டும். அதற்கு மேலான தகவல்களை பார்க்க முடியாது. முழு விவரங்களைப் பார்க்க கூகிள் அனலிடிக்ஸ் தளம் பயன்படுகிறது. அதை பற்றி ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி? என்ற பதிவில் பார்க்கவும்.

Stats-க்கு அடுத்து உள்ள "Earnings" பகுதி ஆட்சென்ஸ் (Adsense) விளம்பரத்திற்கானது. அது நமக்கு (தற்போது) தேவையில்லை என்பதால் அதற்கு அடுத்துள்ள Layout பற்றி இறைவன் நாடினால் அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

Post a Comment

18 Comments

  1. வணக்கம்.

    எனது வலைப்பூவானது.wordpreesஇணையத்தளத்தில் அமைந்துள்ளது,அதற்கு எப்படி ப்ளாக் அமைப்பது,
    பதிவிற்கு எங்கிருந்து வாசகர்கள் வருகிறார்கள்? நம்முடைய ப்ளாக்கில் எது மாதிரியான பதிவுகள் அதிகம் பார்க்கப்படுகின்றன? என்பது போன்ற புள்ளிவிவரங்களை அறிந்துக் கொள்வது எப்படி
    நன்றி,
    ரூபன்

    ReplyDelete
  2. பிளாக் எழ்துபவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்களை சொல்லி வ்ரின்ங்க. நன்றி

    ReplyDelete
  3. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  4. பயனுள்ள தகவலுக்கு நன்றி... ஓர் சந்தேகம்.. blogspot ல் இருந்து .com க்கு எப்படி மாற்றனும் என்று சொல்லவும்... நன்றி

    ReplyDelete
  5. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்.
    அருமையான ரௌ தொடரை கொடுத்து புதியவர்களை எல்லாம் உங்க பக்கம் வாரிட்டீங்க. மாஷாஅல்லாஹ்.

    http://domar.ru -->இது என்ன சகோ..? லிங்க் வேறு எங்கேயோ போகுதே..?

    ReplyDelete
  6. நண்பரே, உங்கள் பிளாக்கை உதாரணமாக என்னுடைய பதிவில் காட்டியிருக்கிறேன். தவறில்லையே? லிங்க்: http://swamysmusings.blogspot.com/2011/12/blog-post.html

    ReplyDelete
  7. //Anonymous said... 1

    வணக்கம்.

    எனது வலைப்பூவானது.wordpreesஇணையத்தளத்தில் அமைந்துள்ளது,அதற்கு எப்படி ப்ளாக் அமைப்பது,
    பதிவிற்கு எங்கிருந்து வாசகர்கள் வருகிறார்கள்? நம்முடைய ப்ளாக்கில் எது மாதிரியான பதிவுகள் அதிகம் பார்க்கப்படுகின்றன? என்பது போன்ற புள்ளிவிவரங்களை அறிந்துக் கொள்வது எப்படி
    நன்றி,
    ரூபன்//

    நண்பா! வேர்ட்ப்ரஸ் தளம் கொஞ்சம் சிக்கலானது. அதில் அதிகமான அமைவுகள் (settings) இருக்கும்.

    //அதற்கு எப்படி ப்ளாக் அமைப்பது,//

    இன்னொரு ப்ளாக் உருவாக்குவது பற்றி கேட்கிறீர்களா? ஆம் எனில்,

    wordpress.com என்ற முகவரிக்கு சென்று, அங்கு My blogs என்பதை தேர்வு செய்யுங்கள்.

    பிறகு நீங்கள் உருவாக்கிய வலைப்பதிவுகள் தெரியும். அதன் கீழே stats என்பதை க்ளிக் செய்தால் //பதிவிற்கு எங்கிருந்து வாசகர்கள் வருகிறார்கள்? நம்முடைய ப்ளாக்கில் எது மாதிரியான பதிவுகள் அதிகம் பார்க்கப்படுகின்றன? என்பது போன்ற புள்ளிவிவரங்களை // பார்க்கலாம்.

    அதே MY Blogs பக்கத்தில் கீழே Create Another Blog என்பதை க்ளிக் செய்து புதிய ப்ளாக் உருவாக்கலாம்.

    ReplyDelete
  8. //Lakshmi said... 2

    பிளாக் எழ்துபவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவல்களை சொல்லி வ்ரின்ங்க. நன்றி//

    நன்றிமா!

    ReplyDelete
  9. //Rathnavel said... 3

    நல்ல பதிவு.
    நன்றி.//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. //சிநேகிதி said... 4

    பயனுள்ள தகவலுக்கு நன்றி... //

    நன்றி சகோ.!

    //ஓர் சந்தேகம்.. blogspot ல் இருந்து .com க்கு எப்படி மாற்றனும் என்று சொல்லவும்... நன்றி//

    இறைவன் நாடினால் இதைப்பற்றி பிறகு பதிவிடுகிறேன். தற்போது நீங்கள் தெரிந்துக் கொள்ள இந்த பதிவை பாருங்கள்.

    எப்படி Custom Domain வாங்குவது ? - 2

    ReplyDelete
  11. //~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said... 5

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்.
    அருமையான ரௌ தொடரை கொடுத்து புதியவர்களை எல்லாம் உங்க பக்கம் வாரிட்டீங்க. மாஷாஅல்லாஹ்.//

    :) :) :)
    வ அலைக்கும் ஸலாம்.
    நன்றி சகோ.!


    // http://domar.ru -->இது என்ன சகோ..? லிங்க் வேறு எங்கேயோ போகுதே..?//

    அது ஸ்பாம் சகோ. அந்த முகவரிக்கு செல்ல வேண்டாம். ஏற்கனவே அதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

    ReplyDelete
  12. //DrPKandaswamyPhD said... 6

    நண்பரே, உங்கள் பிளாக்கை உதாரணமாக என்னுடைய பதிவில் காட்டியிருக்கிறேன். தவறில்லையே? லிங்க்: http://swamysmusings.blogspot.com/2011/12/blog-post.html//

    தவறேதும் இல்லை சார்! பதிவு நகைச்சுவையாகத் தான் இருந்தது.

    ReplyDelete
  13. உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  14. எனது பிளாக் காட்டும் புள்ளி விவரங்கள் தவறோ என்று தோன்றுகிறது.. அது சரியா என்று பார்க்க ஏதும் வழி உண்டா?

    ReplyDelete
  15. Iam following you sir,very useful posts.

    karthikeyan5194@gmail.com
    iam very eagar to design my blog also lile your blog ,if it have any designing softwares advise me.
    http://exportapparelmerchandising.blogspot.com
    Regards,
    Karthikeyan

    ReplyDelete
  16. அன்பு நண்பரே! ஒரு சிக்கல். கனிவு கூர்ந்து பதிலளிக்க வேண்டுகிறேன்! என் வலைப்பூவில், Don't track my pageviews-ஐத் தேர்வு செய்துதான் வைத்திருக்கிறேன். ஆனாலும், எனது பார்வைகளையும் அது கணக்கில் எடுத்துக்கொள்கிறது. தளத்தின் வருகையாளர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருப்பதைப் பார்த்துச் சந்தேகப்பட்டு, வலைப்பூவில் இருந்தபடியே ரீலோட் பொத்தான் அழுத்தினேன். உடனே, பார்வையாளர்கள் எண்ணிக்கையில் ஒன்று உயர்ந்தது. மீண்டும் மீண்டும் இதைச் செய்து பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டேன். ஏன் இப்படி நேர்கிறது? இந்த இடத்தில் இன்னொன்றையும் நான் உங்களிடம் சொல்லியாக வேண்டும், நான் முதலில் Don't track my pageviews-ஐத் தேர்வு செய்துவிட்டு அடுத்தமுறை சென்று பார்த்தபொழுது அது மீண்டும் track my pageviews-இலேயே இருந்தது. மறுபடியும் மறுபடியும் நான்கைந்து முறை Don't track my pageviews-ஐத் தேர்வு செய்த பிறகுதான் சரியானது. கடந்த சில நாட்களாக அப்படி இல்லை. சரியாக Don't track my pageviews-இலேயேதான் இருந்து வருகிறது. ஆனாலும் என் பார்வைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்கிறது. இது ஏன்? சரி செய்ய முடியுமா?

    ReplyDelete
    Replies
    1. server பிரச்சனையாக இருக்கலாம்.

      Don't track my pageviews-ஐத் தேர்வு செய்த பிறகு உங்கள் ப்ரவ்சர் அப்டேட் ஆகினால், மீண்டும் track my pageviews-க்கு மாறிவிடும்.

      Delete
  17. அப்படித்தான் தொடக்கத்தில் நானும் நினைத்தேன். ஆனால், இல்லை. Don't track my pageviews-இல் இருக்கும்பொழுதே பார்வையாளர்கள் எண்ணிக்கை காட்டும் கௌண்ட்டரில் நமது வருகைக்குக்கும் சேர்த்து எண்ணிக்கை உயர்கிறது.

    ReplyDelete