ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-13]


கடந்த பகுதியில் Layout பக்கத்தில் உள்ளவற்றில் சிலவற்றை பார்த்தோம். தற்போது அதே பக்கத்தில் உள்ள Gadget-களை பற்றி பார்ப்போம். கேட்ஜட் என்பது நமது ப்ளாக்கில் வைக்கப்படும் சின்ன சின்ன பயன்பாடுகள் ஆகும். இது விட்ஜெட் (Widget) என்றும் அழைக்கப்படும்.

இத்தொடரின்  அனைத்து பகுதிகளும் ஒரே பக்கத்தில் இங்கே.

நமது  ப்ளாக்கில் கேட்ஜெட்களை எப்படி இணைப்பது? என்று பார்ப்போம்.



Layout பகுதியில் Add a Gadget என்று எங்கெல்லாம் இருக்கிறதோ? அங்கெல்லாம் கேட்ஜட்களை சேர்க்க முடியும். ப்ளாக்கர் தளம் நமக்கென்று சில கேட்ஜட்களை வைத்திருக்கிறது. அவற்றை பயன்படுத்தலாம் அல்லது வெளித்தளங்களில் இருந்தும் கேட்ஜட்களை பயன்படுத்தலாம்.

Add a Gadget என்பதை க்ளிக் செய்தால் பின்வருமாறு வரும். அதில் நமக்கு விருப்பமானவற்றை க்ளிக் செய்து இணைத்துக் கொள்ளலாம்.


பல கேட்ஜட்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமானவைகள் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.


Follow by Email - இந்த கேட்ஜெட்டை வைத்தால் நமது வாசகர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வார்கள். பிறகு நாம் புதிய பதிவிடும் போதெல்லாம் அவர்களின் மின்னஞ்சலுக்கு சென்றுவிடும்.

Popular Posts - நமது ப்ளாக்கில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள் எவை? என்பதை இந்த கேட்ஜட் காட்டும். இதில் ஐந்து பதிவுகள் மட்டும் வைத்தால் போதுமானது.

Blog's Status - இது நமது ப்ளாக் பக்கங்கள் பார்க்கப்பட்ட எண்ணிக்கையை காட்டும்.

Pages - இது நாம் உருவாக்கிய தனி பக்கங்களைக் காட்டும்.

Search box - நமது ப்ளாக்கில் தேடுவதற்கான தேடுபொறி.

Html/javascript - Html/Javascript நிரல்களை பயன்படுத்த இந்த கேட்ஜட் பயன்படுகிறது. இது மிகவும் முக்கியமான கேட்ஜட் ஆகும். நாம் வெளித்தளங்களில் இருந்து சில கேட்ஜட்களை வைக்கவும்  இது பயன்படுகிறது.

Link list - மற்ற தளங்களுக்கு இணைப்பு கொடுக்க இது பயன்படுகிறது.

Blog list - இதுவும் Link List போன்று மற்ற தளங்களுக்கு இணைப்பு கொடுப்பது தான். ஆனால் இதில் மற்ற தளங்களின் சமீபத்திய பதிவையும் காட்டும்.

Labels - நமது பதிவுகளில் பயன்படுத்தியுள்ள குறிச்சொற்களைக் காட்டும். அதிகமான குறிச்சொற்கள் இருந்தால் ஒரு சிலவற்றை மட்டும் தெரியும்படி வைக்கலாம். 

Profile - இது நமது ப்ளாக்கர் சுயவிவர பக்கத்தைக் காட்டும்.

Blog Archieves - இதுவரை நாம் எழுதியுள்ள அனைத்து பதிவுகளையும் காட்டும். 

Follower Gadgets - இதன் மூலம் வாசகர்கள் நமது ப்ளாக்கை பின்தொடர்வார்கள். பிறகு நாம் பதிவிடும் போது அவர்களின் டாஷ்போர்ட் பகுதிக்கு நம்முடைய பதிவி வந்துவிடும்.


கேட்ஜெட்களை சேர்த்தபின் அவைகளை நமது விருப்பப்படி இடம் மாற்றலாம்.



கேட்ஜெட்டை க்ளிக் செய்துக் கொண்டே நகர்த்தினால் அது நகரும். பிறகு நமக்கு விருப்பமான இடத்தில் அதனை வைக்கலாம்.

கேட்ஜட்டை மாற்றம் செய்யவோ, நீக்கவோ விரும்பினால் அதில் Edit என்பதை க்ளிக் செய்து செய்யலாம்.

நீங்கள் மற்ற தளங்களில் இருந்து டெம்ப்ளேட்டை பயன்படுத்தினால், அதில் சில கேட்ஜட்களை நீக்க முடியாது. இறைவன் நாடினால் அதை பற்றி பிறகு வேறொரு (தொடர்???)பதிவில் பார்க்கலாம்.

இறைவன்  நாடினால் அடுத்த பகுதியில் Follower Gadget பற்றி விரிவாக பார்ப்போம்.

Image Credit: www.spiceupyourblog.com

Post a Comment

14 Comments

  1. வணக்கம் நண்பரே..

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. தெளிவான விளக்கங்கள் நன்றி

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. salam bhai pls visit my blog
    shammeem.blogspot.com

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல் நன்றி

    ReplyDelete
  6. please write about linked within widget

    www.astrologicalscience.blogspot.com

    ReplyDelete
  7. மாப்ள தொடர்கிறேன் நன்றி

    ReplyDelete
  8. ASSALAMU ALAIKUM,
    மச்சான்,என்னுடைய ப்ளாக்க எப்போ நான் ஓபன் பண்ணினாலும், AN ERROR OCCURED TOPIC வருது Your request took too long to complete. This is typically just a temporary error due to high network traffic or heavy usage of Blogger என்று கீழே இருக்கு ...என்னால் ப்லோகேர் DASHBORD ஓபன் பன்னமுடிகின்றது..என்னுடைய ப்ளாக் மட்டும் ஓபன் ஆகவில்லை.. உங்களுடைய தொழில் நுட்ப உதவி தேவைபடுகின்றது.

    ReplyDelete
  9. மிகதெளிவான விளக்கம்

    ReplyDelete
  10. நேற்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  11. Follow by Email - இந்த கேட்ஜெட்டை வைத்தால் நமது வாசகர்கள் அவர்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்வார்கள். பிறகு நாம் புதிய பதிவிடும் போதெல்லாம் அவர்களின் மின்னஞ்சலுக்கு சென்றுவிடும்.
    இதை எப்படி இயக்குவது?

    ReplyDelete