கூகிள் ப்ளஸ்ஸில் புது வசதி: Google+ Pages


பேஸ்புக் தளத்திற்கு மாற்றாக களமிறங்கியுள்ள கூகிள் ப்ளஸ் தளம் புதுப்புது வசதிகளாக அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது Facebook Fan Pages-க்கு மாற்றாக Google+ Pages என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் Facebook Fan Page போன்று கூகிள் ப்ளஸ்சிலும் தனிப்பக்கம் உருவாக்கலாம்.

நமது தளத்திற்கு கூகிள் ப்ளஸ் பக்கம் உருவாக்குவது எப்படி? என்று பார்ப்போம்.

1. முதலில் https://plus.google.com/pages/create
என்ற முகவரிக்கு செல்லுங்கள்.


2. அங்கு இடது புறம் Product or Brand என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. Page Name என்ற இடத்தில் உங்கள் தளத்தின் பெயரையும்,

4. Website என்ற இடத்தில் உங்கள் தள முகவரியையும் கொடுங்கள்.

5. select a category என்ற இடத்தில் Website என்பதை தேர்வு செய்யுங்கள்.

6. அதற்கு கீழே யாரெல்லாம் உங்கள் பக்கத்தை பார்க்கலாம்? என்பதற்கு Any Google+ Users என்பதை தேர்வு செய்யுங்கள். அல்லது உங்கள் தளத்திற்கு ஏற்ற மற்றவற்றை தேர்வு  செய்யுங்கள்.

7. அதற்கு கீழே உள்ள இரண்டு பெட்டியிலும் டிக் செய்யுங்கள்.

8. பிறகு Create என்பதை க்ளிக் செய்யுங்கள்.



9. பிறகு வரும் பக்கத்தில் Tagline என்ற இடத்தில் ஏதாவது கொடுக்கலாம். அல்லது வெறுமனே விட்டுவிடலாம். Profile படம் ஏதாவது சேர்த்து Continue என்பதை சொடுக்கவும்.



10. பிறகு வரும் பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய பக்கத்தை கூகிள் ப்ளஸ் தளத்தில் பகிரலாம். பிறகு பகிரலாம் என நினைத்தால் Finish என்பதை சொடுக்கவும்.


11. அடுத்து Get Started என்னும் பக்கம் வரும். கூகிள் ப்ளஸ் பக்கத்தின் அடிப்படைகளை இங்கு காணலாம்.

Connect Your Website - பேஸ்புக் லைக் பாக்ஸ் போன்று கூகிள்+ பக்கத்தின் Badge வைக்க Get a Badge என்பதை க்ளிக் செய்தால் உங்களுக்கான Code இருக்கும். அதனை உங்கள் தளத்தில் வைக்கலாம். தற்போது ஐகான் வைக்கும் வசதி மட்டும் தான் உள்ளது. பேஸ்புக் லைக் பாக்ஸ் போன்ற வசதிக்கான Code விரைவில் வரும் என்று கூறியுள்ளது. அது வந்த பின் இது பற்றி பார்ப்போம்.

Tell the world - இந்த இடத்தில் உங்கள் பக்கத்தின் முகவரி இருக்கும். மற்றவர்களுக்கு சொல்லலாம்.

நீங்கள் பக்கத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது மேலே பின்வருமாறு இருக்கும்.


அதில் Ok  என்பதை சொடுக்கவும். பேஸ்புக் ரசிகர் பக்கத்தில் User Mode & Page Mode என்று பார்த்தோம் அல்லவா? அதே தான் இது. நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம்.


இடது புறம் உங்கள் பக்கத்தின் பெயருக்கு கீழே Drop Down Icon இருக்கும். அதை சொடுக்கி மாறிக் கொள்ளலாம்.

உங்கள் கூகிள்+ பக்கத்தின் முகப்பு பக்கம் பின்வருமாறு இருக்கும்.



Edit Profile என்பதை சொடுக்கி உங்கள் பக்கத்தின் தகவல்களை மாற்றிக் கொள்ளலாம். Share Your Page என்பதை சொடுக்கி உங்கள் பக்கத்தை பகிர்ந்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமிருந்தால் ப்ளாக்கர் நண்பன் கூகிள்+ பக்கத்தில் இணையவும்.

முகவரி: https://plus.google.com/106500982876401475287

Post a Comment

17 Comments

  1. நல்ல தகவல் .. நன்றி

    ReplyDelete
  2. நன்றி நண்பரே.. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. பயனுள்ள விசயம் நண்பா... பகிர்வுக்கு மிக்க நன்றி.!

    ReplyDelete
  4. அருமையான தகவல் தந்ததற்கு மிக்க நன்றிங்க..........

    ReplyDelete
  5. இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உலகளாவிய அனைத்து முஸ்லீம் சமுதாய‌த்திலும் தொடர்ந்த தொடரும் உண்மை நிகழ்வுகளை சித்தரிக்கும் ஆழமான அழகிய முழு திரைகதையும் அடங்கிய விடியோ

    கீழுள்ள சுட்டியை சொடுக்கி காணுங்கள்.


    **** ஆதாமின்டே மகன் அபு *****



    .

    ReplyDelete
  6. பயனுள்ள தகவலுக்கு நன்றி நண்பரே

    நானும் முயற்சித்துப் பார்க்கின்றேன்

    நன்றி
    சம்பத்குமார்

    ReplyDelete
  7. தெளிவான விளக்கம் நன்றி

    ReplyDelete
  8. நல்ல தகவல் நணபரே ,நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  9. தகவலுக்கு நன்றி நண்பரே! நானும் இதை முயற்சி செய்து பார்க்கப்போகிறேன். நன்றி!

    ReplyDelete
  10. அருமையான தகவல் தந்தமைக்கு நன்றிங்க...பதிவுலக நண்பர்கள் அனைவர்க்கும் பயன்படகூடிய தகவல்கள் தருவதற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  11. ஸலாம் சகோ.பாஸித்,

    ஏற்கனவே நமக்கான facebook & g+ கணக்குகள் எல்லாம் வெகுஜோராக இருந்தாலும், அதுவும் பத்தாமல், அந்த facebook page மற்றும் இந்த g+ page இவற்றை வேறு வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம்.

    சரி...page create பண்றதெல்லாம் ஒருபக்கம் ஓரமாய் இருக்கட்டும்.

    என் மில்ல்ல்ல்ல்ல்ல்லியன் திர்ஹாம் கேள்வி என்னவென்றால்...

    ஏற்கனவே நமக்கான facebook & g+ கணக்குகள் ஆயிரம் நண்பர்களுடன் இருக்கும் நிலையில், இப்படி புதிய pages உருவாக்குவதால் நமக்கு என்ன பயன்..? என்ன தேவை..? கணக்கு&பக்கம் ஆகிய இவை இரண்டுக்கும் அப்படி என்ன வித்தியாசம்..?

    இது பற்றி விளக்கமாக ஒரு பதிவு போடவும் சகோ.

    ReplyDelete
  12. மிக்க நன்றி தோழரே!
    https://plus.google.com/ 113130038529487058612

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி... நண்பா...

    ReplyDelete
  14. inaithu vitten nanba pagiruvirkku nanri..........
    thangalukku viruppam irunthaal neengalum inaiyalam
    Hifriends Network Google plus Page

    ReplyDelete
  15. நன்றி நண்பரே, உங்களோடு ப்ளாக்கர் பக்கத்தில் உலா வந்த நான், இனி கூகுள் ப்ளஸ்லும் வலம் வருவேன்.

    ReplyDelete