ப்ளாக்கில் ஒவ்வொரு பதிவாக பகிரும் போதும் முகப்பு பக்கத்தில் மாறிக் கொண்டே வரும். About Me, Contact Me போன்று எப்பொழுதும் நிலையாக இருக்கும் பக்கங்களை (Static Pages) உருவாக்குவது பற்றி இப்பகுதியில் காண்போம்.
இத்தொடரின் அனைத்துப் பகுதிகளையும் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.
1. ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options பட்டனில் Pages என்பதை க்ளிக் செய்யுங்கள்.
2. அங்கு New Page என்பதை க்ளிக் செய்தால் இரண்டு விருப்பங்கள்(Options) வரும்.
1. Blank Page - இதனை க்ளிக் செய்தால் பதிவு எழுதுவது போன்ற பக்கம் வரும்.
2. Web Address - இதனை க்ளிக் செய்தால் பக்கத்திற்கு பதிலாக சுட்டி இணைக்கலாம். ( இதனை பற்றி விரிவாக ப்ளாக்கரில் மறைந்திருந்த புதிய வசதி என்ற பதிவில் பார்க்கவும்.)
இந்த இரண்டில் தனி பக்கங்களை உருவாக்க Blank Page என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. பிறகு பதிவு எழுதுவது போன்ற பக்கம் வரும்.
அந்த பக்கத்தில் மேலே உள்ள சிறிய பெட்டியில் பக்கத்திற்கான தலைப்பு கொடுக்க வேண்டும்.
அதற்கு கீழே உள்ள பெரிய பெட்டியில் நீங்கள் எழுத நினைப்பதை எழுத வேண்டும்.
அங்கு வலது புறம் Options என்பதை க்ளிக் செய்தால் அங்கு மூன்றுவித தேர்வுகள் வரும். அதில் Reader Comments என்பதில்,நீங்கள் உருவாக்கும் பக்கத்தில் வாசகர்கள் பின்னூட்டம் இடலாமா? வேண்டாமா? என்பதை தேர்வு செய்யலாம். மற்ற இரண்டு தேர்வுகள் தேவையில்லை.
எழுதி முடித்தப்பின் Publish என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
4. பிறகு வரும் பக்கத்தில் "Show pages as" என்ற இடத்தில் க்ளிக் செய்தால் அங்கு மூன்று விருப்பங்கள் வரும். அதில் நாம் உருவாக்கிய பக்கங்கள், சுட்டிகளை ப்ளாக்கில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்? என்பதை முடிவு செய்யலாம்.
1. Top Tabs - Header Bar-ல் வைக்க
2. Side Links - Side Bar-ல் வைக்க
3. Dont Show - பக்கங்களை எங்கும் தெரியாமல் இருக்க.
(இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யுங்கள்.)
5. பிறகு மேலே, Save Arrangements என்பதை க்ளிக் செய்யவும்.
நாம் உருவாக்கிய பக்கங்கள் ப்ளாக்கின் மேலே Header Bar-ல் தெரியுமாறு வைத்தால் பின்வருமாறு இருக்கும்.
இறைவன் நாடினால் மற்றவைகளை அடுத்தடுத்தப் பகுதிகளில் பார்ப்போம்.
Image Credit: http://cpd.nottinghamhighblogs.net/
16 Comments
informative
ReplyDeleteதங்களின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
ReplyDeleteஎனது தளத்தை ஒரு முறை பார்த்து கருத்திட்டால் நன்றாக இருக்கும்.
உங்கள் பதிவுகளைக் கண்டபிறகே பிளாக் தொடங்கும் ஆசை வந்தது.
மானசீக நண்பர் நீங்கள் தான்!
விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது அடுத்த பதிவு எப்பொழுது?
ReplyDeleteமாப்ள கலக்கலா சொல்லிட்டு வர்றீங்க தொடருங்கள் நன்றி!
ReplyDeleteபயன் படுத்துகிறேண், நன்றி நண்பா!!!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு
ReplyDeleteதகவலுக்கு நன்றி நண்பா ..
ReplyDeleteதொடரட்டும் தங்கள் பயணம்..
ReplyDeleteதொடர்கிறோம்..
வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்
பயனுள்ள தகவல்.
ReplyDeleteஎனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம், தயவு செய்து தீர்த்து வையுங்களேன்.
Google Friend connect இல் நான் யாரையாவது பின் தொடரும் போது, அவர்கள் தன வலை பக்கத்தில் உள்ள எனது ஐகானை சொடுக்கினால் எனது வலை தளம் தெரிவதில்லை. ஆனால் நான் தொடரும் தளங்களெல்லாம் தெரிகின்றன. இதே பிரச்சினை என்னை தொடரும் நண்பர்கள் சிலருக்கும் உள்ளது. அவர்களின் வலை தளம் எதுவென தெரியாததால் என்னால் அவர்களை தொடர முடியவில்லை.
இதை தீர்த்து வைப்பீர்களா?!
தொடரட்டும் உங்கள் புனித பயணம்.....
ReplyDeleteTOP TABS & SIDE LINK இரண்டையும் ஒரே நேரத்தில் (ACTIVE) பயன் படுத்த முடியுமா ? முடியா விட்டால் TOP TABS இல் ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி] அனைத்தையும் Link கொடுக்காமல் ஒரே பதிவாக பகுதி பகுதியாய் பதிவிட முடியுமா ???
ஹலோ பாஸ் ,
ReplyDeleteப்ளாகர் 6 -ல் பதிவு எழுதுவது தலைப்புவைப்பது பற்றி விலக்கி யுள்ளது புரிந்தது நன்றி
பதிவுகளை அதை சார்ந்த தலைப்புகுள் எப்படி வைப்பது என்று சொல்லுங்களேன்
உதரணமாக காதல் என்ற தலைப்பில் உள்ள எல்லா பதிவுகளையும் ஒன்றுக்குள் வைக்கிறார்கள்
நீங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் லேபில்(Label) கொடுக்க வேண்டும். அது தான் குறிச்சொல், உதாரணத்திற்கு காதல். பிறகு அந்த லேபில் லிங்கை க்ளிக் செய்தால், அந்த லேபில் உள்ள எல்லா பதிவுகளும் தெரியும்.
Deleteபல நாள் முயற்சிக்கு பின் பக்கங்களை இணைத்து விட்டேன்.அதற்கு தங்களின் இந்த பதிவு பேருதவியாக இருந்தது
ReplyDeleteநண்பரே எனக்கு Show pages என்ற சொல்லும் வரவில்லை
ReplyDeletenew pagel web adress என்ற சொல்லும் வரவில்லை எனக்கு நீங்கள் சற்று உதவ வேண்டும் நன்பரே
நனபா எனக்கு சிறிய சந்தேகம் கேக்கலாமா
ReplyDeletearumai nanbare..
ReplyDelete