ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-3]



கடந்த  பகுதியில் புதிய ப்ளாக் உருவாக்குவது பற்றி பார்த்தோம் அல்லவா? தற்போது புதிய பதிவு எழுதுவது பற்றியும், அதில் உள்ள வசதிகள் பற்றியும் விரிவாக பார்ப்போம்.

[படங்களை பெரிதாகக் காண படத்தின் மேல் சொடுக்கவும்.]

ப்ளாக்கர் Dashboard பக்கத்தில் நீங்கள் உருவாக்கிய ப்ளாக் பின்வருமாறு காட்சி அளிக்கும்.


அதில்  Start Blogging என்பதனை க்ளிக் செய்தால் புதிய பதிவு எழுதுவதற்கான பக்கம் பின்வருமாறு வரும்.


அந்த பக்கத்தில் மேலே உள்ள சிறிய பெட்டியில் பதிவிற்கான தலைப்பு கொடுக்க வேண்டும்.

அதற்கு கீழே உள்ள பெரிய பெட்டியில் நீங்கள் எழுத நினைக்கும் பதிவை எழுத வேண்டும்.

பதிவின் தலைப்புக்கு பக்கத்தில்    என்று நான்கு பட்டன்கள் இருக்கும்.

Publish -  நீங்கள் பதிவை எழுதி முடித்தப் பின் அதனை பிரசுரிப்பதற்கு இதனை சொடுக்கவும்.

Save - நீங்கள் பதிவை எழுதி, பிறகு பிரசுரிக்கலாம் என்று நினைத்தாலோ, அல்லது பாதி பதிவை எழுதி மீதியை பிறகு எழுதலாம் என நினைத்தாலோ Save என்பதை சொடுக்கவும். அவ்வாறு சேமித்த பதிவுகள் Drafts எனப்படும்.

கவனிக்க:  ப்ளாக்கரில் பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போது தானியங்கியாக நாம் எழுத எழுத சேமித்துக் கொள்ளும்.

Preview -  நாம் எழுதும் பதிவை பிரசுரிப்பதற்கு முன்னால் அது பிரசுரித்தப் பின் எப்படி வரும் என்பதை முன்னோட்டம் பார்க்க இதனை சொடுக்கவும். இதன் மூலம் நம் பதிவில் எழுத்துப் பிழைகளோ அல்லது வேறு பிழைகளோ இருந்தால் சரி செய்துக் கொள்ளலாம்.

Close - பதிவெழுதும் பகுதியில் இருந்து வெளியேற இதனை சொடுக்கவும்.

பதிவின் தலைப்புக்கு கீழ் பின்வருமாறு இருக்கும்.


இவைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப்  பார்ப்போம்.


  - Compose என்பது நாம் எழுதும் பதிவு, இணைத்திருக்கும் படங்கள் எல்லாம்  ப்ளாக்கில் எப்படி இருக்குமோ (கிட்டத்தட்ட) அதே போல காட்சி அளிக்கும். HTML என்பது நாம் எழுதும் பதிவு, இணைத்திருக்கும் படங்கள் ஆகியவற்றை HTML நிரல்களாக காட்டும். எப்போதும் Compose Mode-ல் வைத்து எழுதுங்கள்.  உங்களுக்கு HTML தெரிந்திருந்தால் நிரலில் மாற்றம் செய்யலாம்.

- இது Undo/Redo ஆகும். பதிவெழுதும் போது மாற்றம் செய்தால் முந்தைய மாற்றத்திற்கு செல்லவும், பிந்தைய மாற்றத்திற்கு செல்லவும் பயன்படுகிறது.

- இவைகள் எழுத்துக்களை அழகுப்படுத்த உதவுகிறது. நாம் மாற்ற வேண்டிய வார்த்தைகளை தேர்வு செய்து இதனை சொடுக்க வேண்டும்.

  - இவைகள் மற்ற இணையப்பக்கங்களுக்கு இணைப்பு (Links) கொடுக்க, படங்கள், வீடியோக்கள் இணைக்க, முகப்பு பக்கத்தில் சிலவற்றை மட்டும் தெரியவைக்க (Jump Break) பயன்படுகிறது.

பதிவில் படத்தை இணைத்தப்பின் அதன் அளவை மாற்ற படத்தின் மேல் க்ளிக் செய்யுங்கள்.



அவ்வாறு க்ளிக் செய்தபின் அதில் Small, medium, Large, X-Large, Original Size இவற்றில் ஒன்றை தேர்வு செய்து அளவை மாற்றலாம். மேலும் Left, Center, Right இவற்றில் ஒன்றை தேர்வு செய்து இடது, நடு, வலது புறத்தில் படத்தை தெரிய வைக்கலாம்.

பதிவில் வீடியோக்களை இணைப்பது பற்றி விரிவாகக் காண ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி? என்ற  பதிவை பார்க்கவும்.

Jump Break பற்றி அறிய வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி? என்ற  பதிவை பார்க்கவும்.

- இவைகள் (இடது, வலம், நடு என்று) எழுத்துக்களை அல்லது படங்களை  Align செய்ய, பட்டியலிட, மேற்கோள் காட்ட, எழுத்துக்களில் நாம் செய்த மாற்றங்களை நீக்க, எழுத்துப்பிழைகளை பார்க்க பயன்படுகின்றன.

- இவை தமிழில் உள்பட பல மொழிகளில் தட்டச்சு செய்யவும் (Amma என்று டைப் செய்தால் அம்மா என்று வரும்), பதிவை வலதுப் பக்கத்திலிருந்து இடது பக்கமாகவோ, இடத்துப் பக்கத்திலிருந்து வலது பக்கமாகவோ தெரியவைக்கவும் பயன்படுகிறது.

இனி அதே பக்கத்தில் வலதுபுறம் உள்ள Post Settings பற்றி பார்ப்போம்.

Labels - நாம் எழுதும் பதிவிற்கு தொடர்புடைய குறிச்சொற்களை இங்கு எழுத வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் அம்மாவைப் பற்றி கவிதை எழுதினால் "அம்மா", "கவிதை", "பாசம்" என்பது போன்று குறிச்சொற்களை கொடுக்கலாம்.


Schedule - நீங்கள் எழுதும் பதிவை எப்பொழுது பிரசுரிக்க வேண்டும் என்பதை இங்கு தேர்வு செய்யலாம். Default-ஆக இது Automatic என்று இருக்கும். நீங்கள் எப்பொழுது Publish பட்டனை க்ளிக் செய்கிறீர்களோ, அப்பொழுது பிரசுரமாகும்.  இல்லையென்றால் Set Date and Time என்பதை க்ளிக் செய்து எப்பொழுது பிரசுரமாக வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு பதிவை மறுநாள் காலை பிரசுரமாக தேர்வு செய்தீர்கள் என்றால் மறுநாள் காலை குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் ஆன்லைனில் இல்லையென்றாலும் தானாக பிரசுரமாகும். மேலும் ஏற்கனவே பதியப்பட்ட பதிவுகளை இன்று பதிந்தது போலவும் மாற்றலாம்.


Location - இது உங்கள் இருப்பிடத்தைக் காட்டுவதற்காக பயன்படுகிறது. இதனை தவிர்ப்பது நலம்.


Options - இந்த பகுதியில் கீழுள்ள வசதிகள் உள்ளன.

Reader Comments - நீங்கள் எழுதும் அந்த பதிவில் வாசகர்கள் பின்னூட்டம் (Comment) இடலாமா? வேண்டாமா? என்பதை தேர்வு செய்யலாம். (இது மற்ற பதிவுகளை பாதிக்காது. எழுதும் அந்த பதிவிற்கு மட்டுமானது)

Compose Mode - Compose Mode-ல் வைத்து பதிவு எழுதும் போது HTML Code இணைத்தால், அது Code-ஆகவே தெரிவதற்கு "Show HTML literally" என்பதனையும், Code-ற்கு பதிலாக அதன் வெளியீடு தெரிவதற்கு "Interpret typed HTML" என்பதனையும் தேர்வு செய்யவும்.

Line Breaks - இது தேவையில்லை விட்டுவிடுங்கள். ( இரண்டும் முயற்சித்தேன். ஒன்றாகத் தான் உள்ளது)

பதிவு எழுதியப் பின் Publish என்பதை கொடுக்க வேண்டியது தான். கொடுத்தபின் அனைத்து பதிவுகளும் இருக்கும் Posts பக்கத்திற்கு வரும். அங்கு மேலே உள்ள View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கை பார்க்கலாம்.

என் மாதிரி தளத்தின் முதல் பதிவு:


உலவியின் மேலே முகவரி பெட்டியில் http://tamilnutpangal.blogspot.com/ என்று இருக்கும். அது உங்கள் ப்ளாக் முகவரி. பதிவின் தலைப்பை க்ளிக் செய்து பிறகு முகவரியை பார்த்தால் http://tamilnutpangal.blogspot.com/2011/11/blog-post.html என்று இருக்கும். இது அந்த குறிப்பிட்ட பதிவின் முகவரி. ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி முகவரிகள் இருக்கும்.
 
இறைவன் நாடினால் மற்றவற்றை அடுத்தடுத்தப் பகுதிகளில் காண்போம்.

Post a Comment

37 Comments

  1. தகவலுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  2. அருமையான விளக்கங்கள் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்

    ReplyDelete
  3. மிக அருமையான விளக்கம்
    புதிய்வர்களுக்கு ரொம்ப தெளிவா இருக்கம் நான் ஆரம்பிக்க்ும் போது யாராவது இப்படி சொல்லி கொடுத்த் இருந்தா நல்ல இருந்திருக்கும்

    ReplyDelete
  4. வணக்கம் நண்பரே..

    பயனுள்ள தகவலுக்கு நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  5. விளக்கங்கள் புரியும் படி தெளிவாக சொல்லி இருக்கீங்க நன்றி

    ReplyDelete
  6. அட இவ்வளவு சீக்கிரமா அடுத்த தொடர் பதிவு வெளியாகியுள்ளது...???....

    தொடருங்கள் சகோ...புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்.

    ReplyDelete
  7. thiratti.com il pathivai eppadi inathirgal nanbare

    ReplyDelete
  8. நல்ல அழகான விளக்கத்துடன் உள்ளது தகவல் .பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  9. மிகவும் அருமையான விளக்கம்.. புதியவர்களுக்கு பயனுள்ள பதிவு

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    அற்புதமான விள்க்கங்கள்!
    அருமையான தமிழில்!!

    ReplyDelete
  11. நல்ல விரிவான விளக்கத்துடன் பகிர்துள்ளீர்கள். புதியவர்களுக்கு மிக பயனுள்ளதகவல் . பகிர்வுக்கு நன்றி சகோ /

    ReplyDelete
  12. புதிதாக வலைப்பூ தொடங்க வேண்டும் என ஆர்வம் உள்ள நண்பர்களுக்கு பயனுள்ள வகையில் தெளிவாக புரியும்படி அருமையாக எழுதி வருகிறீர்கள் நண்பா தொடருங்கள்....

    எனது நண்பர்கள் சிலர் வலைப்பூ ஆரம்பிப்பது பற்றி கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் வேலைப்பளுவின் காரணமாக அவர்களுக்கு உதவ முடியாமல் இருக்கிறேன். இனி பிரச்சினையில்லை உங்களின் இந்த தொடரை பரிந்துரை செய்கிறேன் நன்றி நண்பா!

    ReplyDelete
  13. இவை எல்லாவற்றையும் நானாக கற்றுக்கொல்வதற்கே வெகு நாட்கள் ஆனது. ஆனால், இதை புதியவர்களுக்கு எளிமைப்படுத்துயுள்ளீர்கள். அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறோம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. 1. என பிளாக்கில் இடும் புதிய பதிவுகளை என்னுடய google + ல் எனது பதிவுகளை தெரிவுபடுத்துவது எப்படி?
    2.என பிளாக்கில் நான் செய்யும் post ல் pdf file add செய்வது எப்படி?

    ReplyDelete
  15. அன்பு நண்பருக்கு வணக்கம்! உங்களின் தளத்தை பார்த்துத் தான் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். என் தளத்தை பார்த்து (dindiguldhanabalan.blogspot.com) இன்னும் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா? என்பதை கூறவும். தங்களுடைய இந்த முயற்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. நாம பதிவு எழுதும் பக்கத்தில் கீழே பப்லிஷ், ஸேவ், ப்ரிவ்யூ எல்லாம் இருக்கு. க்ளோஸ் ஆப்ஷன் இல்லியே? ஏன்?

    ReplyDelete
  17. //"என் ராஜபாட்டை"- ராஜா said... 1

    தகவலுக்கு நன்றி நண்பா
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  18. //சி.பிரேம் குமார் said... 3

    அருமையான விளக்கங்கள் புதியவர்களுக்கு மிகவும் பயன்படும்
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  19. //Prabu Krishna said... 4

    Nice bro.//

    Thank You Bro.!

    ReplyDelete
  20. //Jaleela Kamal said... 5

    மிக அருமையான விளக்கம்
    புதிய்வர்களுக்கு ரொம்ப தெளிவா இருக்கம் நான் ஆரம்பிக்க்ும் போது யாராவது இப்படி சொல்லி கொடுத்த் இருந்தா நல்ல இருந்திருக்கும்
    //

    நன்றி சகோ.!

    ReplyDelete
  21. //சம்பத் குமார் said... 6

    வணக்கம் நண்பரே..

    பயனுள்ள தகவலுக்கு நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. //Lakshmi said... 7

    விளக்கங்கள் புரியும் படி தெளிவாக சொல்லி இருக்கீங்க நன்றி
    //

    நன்றிமா!

    //நாம பதிவு எழுதும் பக்கத்தில் கீழே பப்லிஷ், ஸேவ், ப்ரிவ்யூ எல்லாம் இருக்கு. க்ளோஸ் ஆப்ஷன் இல்லியே? ஏன்?
    //

    நீங்கள் பழைய டாஸ்போர்ட் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். மேலே உள்ளது புதிய டாஷ்போர்டில் உள்ளது.

    ReplyDelete
  23. நண்பா எனக்கு ஒரு ஐயம், நாம் இந்த வலைப்பூவை வேறு ஒருவருக்கு டிசைன் செய்து,டொமைன் வாங்கி கொடுத்து பணம் ஈட்ட இயலுமா?

    அவ்வாறு இயலும் என்றால் எவ்வளவு பணம்(in INR) வாங்கலாம்?

    [மொறைக்காதீங்க நண்பர்களே சும்மா தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன்]

    ReplyDelete
  24. மிகவும் பயனுள்ள பதிவாக இருந்தது... நன்றி..

    ReplyDelete
  25. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பா... கவிதையும் அருமை நண்பா

    ReplyDelete
  26. Blog Tips (Read More Code)
    http://thiruarun.blogspot.com/2011/11/blog-tips-read-more-code.html

    ReplyDelete
  27. உபயோகமான பதிவு

    ReplyDelete
  28. Nanba, just a week back I started a blog blindly and I was not knowing how to proceed further. Your lessons that too in Tamil are very easy to follow for a lay man like me. Thank you very much.

    ReplyDelete
  29. GOOGLE ADSENCE VANGA YEVALAVU NAL WAIT PANANUM

    ReplyDelete
    Replies
    1. Blogspot முகவரியாக இருந்தால் குறைந்தது ஆறு மாதம் ஆகும். ஆனால் என் ஆங்கில தளத்திற்கு .com டொமைன் வைத்து சமர்ப்பித்தேன். ஓரிரு மாதங்களுக்குள் கிடைத்துவிட்டது.

      பதிவுகள் சிலவும், வாசகர்கள் வருகையும் ஓரளவு இருக்க வேண்டும்.

      Delete
  30. சகோ நாம் பதிவை எழுதும் போது சொற்கள் சரியான அமைவிலும்
    அதன் பின் preweu வைப்ப பார்க்கும்போது சொற்கள் மேலும் கீழுமாக
    தோற்றம் அளிக்கின்றதே .ஒரு பெரிய ஆக்கம் எழுதும்போது
    இவைகளை சரி செய்ய பெரும் சிரமமாக உள்ளது .உதாரணதிற்கு
    எனது கடைசி ஆக்கத்தில் தோழி மஞ்சுபாசினி அவர்கள் இட்டிருக்கும்
    கருத்தினைப் பாருங்கள் இதுபோன்று என் வலைதளத்தின் இடைவெளிக்கு
    ஏற்ப ஆக்கம் எழுதுவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?....(இந்தத்
    தகவலும் பலருக்கும் தேவைப்படும் என்றே நான் கருதுகின்றேன் ).

    ReplyDelete
    Replies
    1. சகோ.! அவ்வாறு மாறுபடுவதற்கு, பதிவெழுதும் பக்கத்தின் அகல அளவும், பதிவின் அகல அளவும் வேறாக இருப்பது தான் காரணம்.

      நீங்கள் பதிவெழுதும் போது Alignment பகுதியில் (இவைகள் (இடது, வலம், நடு என்று) எழுத்துக்களை அல்லது படங்களை Align செய்ய, பட்டியலிட, மேற்கோள் காட்ட, எழுத்துக்களில் நாம் செய்த மாற்றங்களை நீக்க, எழுத்துப்பிழைகளை பார்க்க பயன்படுகின்றன.) சரி செய்யுங்கள்.

      Delete


  31. நான் உங்களின் பிளாக்கர் நண்பன் பார்த்து தான் ப்ளாக் ஆரம்பித்துள்ளேன்

    மிக்க நன்றி

    ReplyDelete
  32. Enter your comment...பதிவு அருமை

    ReplyDelete