ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-2]

blog logo


கடந்த பகுதியில் ப்ளாக் பற்றிய சிறிய அறிமுகத்தைப் பார்த்தோம். தற்போது புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்குவோம். அதற்கு முன் நமது ப்ளாக்கின் பெயர் எப்படி இருக்க வேண்டும்? என்று பார்ப்போம்.

ப்ளாக்கிற்கு பெயர் வைப்பது எப்படி?

ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது முடிந்தவரை சிறியதாகவும், நினைவில் நிற்கும்படியும் வையுங்கள். மேலும் நீங்கள் எதைப் பற்றி எழுதுகிறீர்களோ? அது தொடர்பான பெயராக இருக்கட்டும். தமிழ் ப்ளாக்கிற்கு பெயர் வைக்கும் போது அந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது  எழுத்துக்களில் குழப்பம் வராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உதாரணத்திற்கு "தினச்செய்தி" என்று பெயர் வைத்தால் அதனை ஆங்கிலத்தில் "thinachcheithi", "dinaseithi", "dhinachcheithi", "thinaseithi" இப்படி பல குழப்பங்கள் வாசகர்களுக்கு வரலாம். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது. பல வாசகர்கள் உங்கள் தளத்தை புக்மார்க் செய்திருக்கலாம். ஆனால் எல்லா நேரங்களிலும் அவர்கள் புக்மார்க் மூலம் வருவதில்லை. வேறொரு கணினிகளை பயன்படுத்தினால் நேரடியாக உங்கள் தள முகவரியைக் கொடுத்து வருவார்கள். அது போன்ற சமயங்களில் குழப்பம் ஏற்படும்.

உங்கள் ப்ளாக் முகவரியுடன் blogspot என்ற sub-domain-ம் சேர்ந்து வரும் என்று சொன்னேன் அல்லவா? அதற்கு பதிலாக .com, .net, .org போன்ற Custom domain-ல் மாறும் எண்ணம் இருந்தால் முதலில் அந்த பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்று பாருங்கள் (அவ்வாறு பார்க்க http://www.godaddy.com/ என்ற முகவரிக்கு சென்று பார்க்கவும்). ஏனெனில் நீங்கள் ஒரு பெயரில் ப்ளாக்கை நடத்தி வந்தது Custom Domain-கு மாறும் போது வேறொரு பெயரை பயன்படுத்தினால் சில வாசகர்களை இழக்க நேரிடும்.

ஆங்கிலத் தளங்களை தொடங்குவதாக இருந்தால் உங்கள் ப்ளாக் பெயரில் Keywords எனப்படும் குறிச்சொற்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் ப்ளாக் தொழில்நுட்பம் பற்றியது என்றால் ப்ளாக்கின் பெயரில் "tech", "technology", "techno", "web" போன்ற வார்த்தைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலே  சொன்னது சின்ன விஷயம் தான். மேலே சொன்னவைகள் போன்று பெயர் வைக்கவில்லை என்றாலும் உங்கள் ப்ளாக் பிரபலமானால் உங்கள் பெயரும் பிரபலமாகும். "ஆப்பிள்", "கூகிள்", "பேஸ்புக்" போன்றவைகள் முதலில் வந்த போது யாரும் இவ்வளவு பிரபலமாகும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனால் பெயர் வைப்பது என்பது சின்ன விஷயம் தான்.

சரி, இனி ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம்.

புதிய  ப்ளாக் உருவாக்குவது எப்படி?

1. முதலில் www.blogger.com என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.



2. உங்களுக்கு ஜிமெயில் அல்லது வேறொரு கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் உள்நுழையுங்கள். இல்லையென்றால் புதிதாக ஜிமெயில் ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

3. பிறகு வரும் பக்கத்தில் Display Name என்ற இடத்தில் உங்கள் பெயரை கொடுத்து, Email Notifications என்ற இடத்தில் விருப்பமிருந்தால் செக் செய்து, Accept of Terms என்ற இடத்தில் (கண்டிப்பாக) செக் செய்து Continue என்பதை க்ளிக் செய்யுங்கள்.


4. பிறகு வரும் பக்கம் தான் Dashboard எனப்படும். ப்ளாக்கரில் நாம் அனைத்து வேலைகளையும் செய்வது இங்கு தான்.


புதிதாக உள்நுழையும் போது சில டிப்ஸ்களை காட்டும். அவற்றை Close செய்துவிடுங்கள். இந்த தோற்றம் ப்ளாக்கரின் பழைய தோற்றமாகும். மேலும் பல வசதிகளுடன் கூடிய புதிய தோற்றத்தை ப்ளாக்கர் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றை பயன்படுத்த படத்தில் சுட்டிக் காட்டிருப்பது போன்று Try the updated Blogger Interface என்பதை க்ளிக் செய்யுங்கள்.

5. பிறகு உங்கள் Dashboard தோற்றம் பின்வருமாறு இருக்கும்.


Dashboard பக்கத்தில் உள்ளவைகள் ஒவ்வொன்றைப் பற்றியும் பிறகு பார்க்கலாம்.

6. புதிய ப்ளாக் ஒன்றை உருவாக்க New Blog என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

அதில்,
Title என்ற இடத்தில் ப்ளாக் பெயரை (தமிழ் ப்ளாக் என்றால் தமிழில்) கொடுங்கள்.

Address என்ற இடத்தில் உங்கள் ப்ளாக்கிற்கான முகவரியையும் கொடுங்கள். நீங்கள் கொடுக்கும் முகவரி ஏற்கனவே இருந்தால் ஏற்றுக் கொள்ளாது. வேறொன்றை முயற்சிக்கவும்.

கவனிக்க: முகவரியில் என்ன கொடுக்கிறீர்களோ? அதனையே ப்ளாக் பெயராகக் கொடுங்கள். இரண்டும் வேறுவேறாக இருந்தால்  அது வாசகர்களை குழப்பும்.

Template என்ற இடத்தில் உங்களுக்கு பிடித்தமான டெம்ப்ளேட்டை (உங்கள் ப்ளாக்கின் தோற்றம்) தேர்வு செய்யுங்கள். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இதனை மாற்றிக் கொள்ளலாம். பிறகு Create Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவு  தான்! உங்களுக்கான புதிய ப்ளாக் உருவாகிவிட்டது. அதனை பார்க்க View Blog என்பதை க்ளிக் செய்யுங்கள்.

சோதனைக்காக நான் உருவாக்கி இருக்கும் ப்ளாக்,



பெயர்: தமிழ் நுட்பங்கள்

முகவரி: http://tamilnutpangal.blogspot.com/

இறைவன் நாடினால் புதிய பதிவு எழுதுவது பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

Post a Comment

45 Comments

  1. புதியவர்களுக்கு மிக மிக பயனுள்ள பதிவு. அவர்கள் குழப்பத்தை போக்கும் அருமையான விளக்கம். படம் போட்டு பாகத்தை குறித்திருப்பதால், சுலபமாக புரிந்துகொள்ள முடியும். அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்

    ReplyDelete
  3. அருமையான விளக்கங்கள்

    ReplyDelete
  4. ப்ளாக்கிற்கு பெயர் வைப்பது குறித்த விளக்கம் அருமை..
    புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவை என் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன், நன்றி...

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வு நன்றி நண்பா .....

    ReplyDelete
  6. வணக்கம் சகோ..

    தொடர்பதிவு சிற்க்க வாழ்த்துக்கள்..

    புதியவர்களுக்கு பிராக்டிக்கல் பிரச்சினைகளுடனும்,அருமையான விளக்கக்களுடன் தொடரட்டும் நண்பரே..

    ReplyDelete
  7. புதியதான பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு வரும் சந்தேகங்களுக்கு தங்கள் பதிவு துணையாக இருக்கும்...

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் பாஸித்,

    புதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் பகுதி. தொடர என் பிரார்த்தனைகள்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    ReplyDelete
  9. புதிதாக ப்ளாக் தொடங்குபவருக்கு மற்றுமில்லாமல் அனைவருக்குமே பயன்படும் விதத்தில் தெளிவாக சொல்லி வருகிரீர்கள். நன்றி

    ReplyDelete
  10. நல்ல துவக்கம், புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு, தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. ஸலாம் சகோ,அப்துல் பாஸித்,

    //சோதனைக்காக நான் உருவாக்கி இருக்கும் ப்ளாக்//---இதுபோல ஒரு ப்ளாக் என்றால் பரவாயில்லை சகோ.அப்துல் பாஸித்.

    ஆனால், ஒருத்தரே சும்மாச்சுக்கானும் ஐம்பத்தி மூணு ப்ளாக் ஆரம்பிச்சு வச்சா, அப்புறம் புதியவர்களுக்கான "மெய்யான சோதனையாக" பிளாக் பெயரிடலுக்கு கடும் பெயர் தட்டுப்பாடு வராம இருக்குமா சொல்லுங்க..?

    கிண்டர் கார்டன் கிளாஸ் நடத்தும், டியர் காலேஜ் ப்ரோஃபசர்...
    உங்கள் பணி அருமை. தொடருங்க.

    ReplyDelete
  12. nanba blog epadi create panrathu & view panrathu nu sollitta but post panrathu epadi & comment, follow panrathu epadi nu mis pannitiyeeeeee nanba.....am waiting ur reply

    ReplyDelete
  13. nanba am waiting ur reply pls teach the third part..........am waiting..........ur replyyyy

    ReplyDelete
  14. when changing to blogspot.com to .com it is asking credit card details. I dont have a credit card what to do?

    ReplyDelete
  15. //வே.சுப்ரமணியன். said... 1

    புதியவர்களுக்கு மிக மிக பயனுள்ள பதிவு. அவர்கள் குழப்பத்தை போக்கும் அருமையான விளக்கம். படம் போட்டு பாகத்தை குறித்திருப்பதால், சுலபமாக புரிந்துகொள்ள முடியும். அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறோம்.//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  16. //சிநேகிதி said... 2

    பயனுள்ள தகவல்
    //

    நன்றி சகோ.!

    ReplyDelete
  17. //சி.பிரேம் குமார் said... 3

    அருமையான விளக்கங்கள்
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  18. //Heart Rider said... 4

    ப்ளாக்கிற்கு பெயர் வைப்பது குறித்த விளக்கம் அருமை..
    புதியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவை என் நண்பர்களுக்கு பரிந்துரைக்கிறேன், நன்றி...//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  19. //stalin wesley said... 5

    பயனுள்ள பகிர்வு நன்றி நண்பா .....//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  20. //சம்பத் குமார் said... 6

    வணக்கம் சகோ..

    தொடர்பதிவு சிற்க்க வாழ்த்துக்கள்..

    புதியவர்களுக்கு பிராக்டிக்கல் பிரச்சினைகளுடனும்,அருமையான விளக்கக்களுடன் தொடரட்டும் நண்பரே..
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. //கவிதை வீதி... // சௌந்தர் // said... 7

    புதியதான பிளாக் ஆரம்பிப்பவர்களுக்கு வரும் சந்தேகங்களுக்கு தங்கள் பதிவு துணையாக இருக்கும்...//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  22. //Aashiq Ahamed said... 8

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் பாஸித்,

    புதியவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் பகுதி. தொடர என் பிரார்த்தனைகள்..

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ//

    வ அலைக்கும் ஸலாம்.

    நன்றி சகோ.!

    ReplyDelete
  23. புதியவர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி ,அருமை நண்பரே ,நல்ல பணி

    ReplyDelete
  24. //Lakshmi said... 9

    புதிதாக ப்ளாக் தொடங்குபவருக்கு மற்றுமில்லாமல் அனைவருக்குமே பயன்படும் விதத்தில் தெளிவாக சொல்லி வருகிரீர்கள். நன்றி//

    நன்றிமா!

    ReplyDelete
  25. //Anbu Arasu said... 10

    நல்ல துவக்கம், புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு, தொடரட்டும். வாழ்த்துக்கள்.
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. //~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said... 11

    ஸலாம் சகோ,அப்துல் பாஸித்,

    //சோதனைக்காக நான் உருவாக்கி இருக்கும் ப்ளாக்//---இதுபோல ஒரு ப்ளாக் என்றால் பரவாயில்லை சகோ.அப்துல் பாஸித்.

    ஆனால், ஒருத்தரே சும்மாச்சுக்கானும் ஐம்பத்தி மூணு ப்ளாக் ஆரம்பிச்சு வச்சா, அப்புறம் புதியவர்களுக்கான "மெய்யான சோதனையாக" பிளாக் பெயரிடலுக்கு கடும் பெயர் தட்டுப்பாடு வராம இருக்குமா சொல்லுங்க..?

    கிண்டர் கார்டன் கிளாஸ் நடத்தும், டியர் காலேஜ் ப்ரோஃபசர்...
    உங்கள் பணி அருமை. தொடருங்க.
    //

    வ அலைக்கும் ஸலாம் சகோ.!

    அந்த பெயர்களில் ஏதாவது உங்களுக்கு வேண்டுமென்றால் சொல்லுங்கள் சகோ.! நல்ல விலைக்கு தருகிறேன்!!!

    :) :) :)

    ReplyDelete
  27. //riyas007 said... 12

    nanba blog epadi create panrathu & view panrathu nu sollitta but post panrathu epadi & comment, follow panrathu epadi nu mis pannitiyeeeeee nanba.....am waiting ur reply//

    //nanba am waiting ur reply pls teach the third part..........am waiting..........ur replyyyy
    //

    மன்னிக்கவும் நண்பா! தினம் ஒரு பதிவென்று எழுத நினைத்துள்ளேன். உங்களுக்கு காத்திருக்க விருப்பமில்லையெனில் basith27[at]gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.

    ReplyDelete
  28. //arul said... 14

    when changing to blogspot.com to .com it is asking credit card details. I dont have a credit card what to do?//

    Yoc can also buy domain through your debit card if that card has "visa".

    If you want more details send mail to basith27[at]gmail.com

    ReplyDelete
  29. //M.R said... 23

    புதியவர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி ,அருமை நண்பரே ,நல்ல பணி
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. பயனுள்ள பகிர்வு....

    ReplyDelete
  31. நன்றி. தாங்கள் கூறியபடியே ஆரம்பித்துள்ளேன். மிக மிக ஆர்வமாக அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  32. கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன், அதுக்குள்ள 3 பதிவு போட்டுட்டீங்களே நண்பா!!!!!!!!!!

    பொறுங்க மத்த 2யும் படிச்சுட்டு வரேன்..

    ReplyDelete
  33. முதல் கவிதை அருமை....

    நாங்க டபுள் ஆக்ட் பண்ணுவோம்ல..

    ஹி ஹி...

    ReplyDelete
  34. பயனுள்ள பகிர்வு நண்பா

    ReplyDelete
  35. http://www.godaddy.com/,, intha link la poi partha panna kekuthu ithu panam katii parpatha,,,, intha information also nice i'll see next link

    ReplyDelete
  36. //MHM Nimzath said... 30

    பயனுள்ள பகிர்வு....//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  37. //வடலிக்கூத்தன் said... 31

    நன்றி. தாங்கள் கூறியபடியே ஆரம்பித்துள்ளேன். மிக மிக ஆர்வமாக அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  38. //Jayachandran said... 32

    கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன், அதுக்குள்ள 3 பதிவு போட்டுட்டீங்களே நண்பா!!!!!!!!!!

    பொறுங்க மத்த 2யும் படிச்சுட்டு வரேன்..
    //

    பொறுமையா வாங்க நண்பா!
    :) :) :)

    ReplyDelete
  39. //தமிழ்கிழம் said... 33

    முதல் கவிதை அருமை....

    நாங்க டபுள் ஆக்ட் பண்ணுவோம்ல..

    ஹி ஹி...
    //

    :) :) :)

    நன்றி நண்பா!

    ReplyDelete
  40. //மாய உலகம் said... 34

    பயனுள்ள பகிர்வு நண்பா
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  41. //SGK said... 35

    http://www.godaddy.com/,, intha link la poi partha panna kekuthu ithu panam katii parpatha,,,, //

    நீங்கள் விரும்பும் பெயர் இருக்கிறதா? என்று மட்டும் பார்க்கவும். இறைவன் நாடினால், டொமைன் வாங்குவது பற்றி பிறகு பகிர்கிறேன்.


    //intha information also nice i'll see next link//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  42. உங்களை போல வெள்ளை கலர் டெம்ப்ளெட் கிடைக்குமா?

    ReplyDelete
  43. Very useful... நான் உங்கள் அறிவுரை பயன்படுத்தி ப்ளாக் தொடங்கினேன்.. பட் டிசன் பன்ன முடியவில்லை

    ReplyDelete