ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-1]

ப்ளாக்கர் நண்பன் தளத்தில் இதுவரை ப்ளாக் தொடங்கிய பிறகு செய்ய வேண்டியவைகளைப் பற்றித் தான் எழுதி வந்தேன். இணையத்தில் புதிதாக வரும் நண்பர்களுக்கு பயன்படும் வகையில் ப்ளாக் தொடங்குவது பற்றி முடிந்தவரை முழுமையாக எழுதலாம் என எண்ணியுள்ளேன். இது முற்றிலும் புதியவர்களுக்கான பதிவு என்பதால் அதிகம் பேர் அறிந்திருக்கும் தகவல்களாகத் தான் இருக்கும்.

ப்ளாக் என்றால் என்ன?

Weblog என்பதன் சுருக்கமே Blog ஆகும். தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு என்று அழைக்கப்படும். ப்ளாக் என்பது  ஒருவகையான இணையத்தளம், அல்லது இணையத்தளத்தில் ஒரு பகுதியாகும். செய்திகளை பகிரும் முறையில் இவை இரண்டும் வேறுபடுகின்றன.

 • இணையத்தளங்களில் செய்திகள் எப்பொழுதாவது தான் புதுப்பிக்கப்படும். ஆனால் ப்ளாக்கில் செய்திகள் அடிக்கடி புதுப்பிக்கப்படும். (உங்கள் ப்ளாக் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அது இணையத்தளம் ஆகிவிடாது!!! )
 •  ப்ளாக்கின் சிறப்பம்சங்களில் ஒன்று வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதி. (பெரும்பாலான) இணையத்தளங்களில் அந்த வசதி இல்லை. நம் கருத்துக்களை சொல்ல வேண்டுமானால் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றைத் தான் பயன்படுத்த வேண்டும்.
 •  இணையத்தளம் தொடங்குவதற்கு PHP, MySQL, Python போன்ற கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் ப்ளாக் தொடங்குவதற்கு கணினி அடிப்படைகள் தெரிந்தாலே போதும்.

ப்ளாக் பற்றி ப்ளாக்கர் தளம் பின்வருமாறு கூறுகிறது.

A blog is a personal diary. A daily pulpit. A collaborative space. A political soapbox. A breaking-news outlet. A collection of links. Your own private thoughts. Memos to the world.

Your blog is whatever you want it to be. There are millions of them, in all shapes and sizes, and there are no real rules.

In simple terms, a blog is a website, where you write stuff on an ongoing basis. New stuff shows up at the top, so your visitors can read what's new. Then they comment on it or link to it or email you. Or not.
ஏன் ப்ளாக் தொடங்க வேண்டும்?

உண்மையை சொன்னால் இதற்கு சரியான வரைமுறைகள் எதுவும் இல்லை. எதற்கு வேண்டுமானாலும் ப்ளாக் தொடங்கலாம். உங்கள் கருத்துக்களையோ, அனுபவங்களையோ, உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றியோ, நீங்கள் ரசித்தவைகளைப் பற்றியோ மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதற்காக ப்ளாக் தொடங்கலாம். இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்காகவும் கூட ப்ளாக் தொடங்கலாம்.  அது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது.

குறிப்பு: பணம் சம்பாதிப்பதற்காக ப்ளாக் தொடங்க நினைத்தால் உங்கள் ப்ளாக்கை ஆங்கிலத்தில் தொடங்குங்கள். ஆங்கிலத் தளங்களைப் பிரபலப்படுத்துவது பற்றியும் இத்தொடரில் எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன்.

எப்படி தொடங்குவது?

இலவசமாக ப்ளாக் தொடங்குவதற்கு பல இணையத்தளங்கள் உள்ளன. அவற்றில் முன்னணியில் இருக்கும் இரண்டு, ப்ளாக்கர் மற்றும் வேர்ட்பிரஸ் ஆகியவை. நாம் இத்தொடரில் பார்க்கவிருப்பது ப்ளாக்கர் தளம் பற்றி தான். ஏனெனில் இலவச வேர்ட்பிரஸ் தளத்தைக் கொண்டு நாம் சம்பாதிக்க முடியாது. மேலும் அதில் உருவாக்கப்படும் தளத்தின் வடிவமைப்பில் நமக்கு விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாது. ஆனால் அதற்கென்று சில சிறப்பம்சங்கள் உள்ளது. அது நமக்கு தேவையில்லை.

ப்ளாக்கர்:

ப்ளாக்கர் (Blogger) தளம் கூகிள் நிறுவனத்தின் தளமாகும். உங்களுக்கு ஜிமெயில், யூட்யூப் போன்ற கூகிள் கணக்கு இருந்தால் அதன் மூலம் ப்ளாக்கர் தளத்தைப் பயன்படுத்தலாம். அல்லது புதிதாக கூகிள் கணக்கு ஒன்றை தொடங்கிப் பயன்படுத்தலாம். நீங்கள் தொடங்கும்  ப்ளாக்கின் முகவரியில் நீங்கள் கொடுத்தப் பெயருடன் .blogspot என்றும் சேர்ந்து இருக்கும். இதற்கு Subdomain என்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் blogname என்று கொடுத்திருந்தால் உங்கள் முகவரி blogname.blogspot.com என்று இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பணம் கட்டி உங்களுக்கு பிடித்த பெயரை முகவரியாக வைக்கலாம். அதை பற்றி பிறகு பார்ப்போம்.

தயாராகிவிட்டீர்களா?

ப்ளாக் தொடங்க தயாராகிவிட்டீர்களா?ஆம் என்றால் உங்கள் ப்ளாக்கிற்கு பெயர் வைக்க பல்வேறு தலைப்புகளை முடிவு செய்து வையுங்கள். ஏனெனில் நீங்கள் நினைக்கும் பெயரை ஏற்கனவே யாராவது வைத்திருக்கக்கூடும். நீங்கள் எதைப்பற்றி எழுதப் போகிறீர்களோ அது தொடர்பான வார்த்தைகளாக அந்த பெயர் இருக்கட்டும்.

இறைவன் நாடினால், அடுத்த பகுதியில் புதிய ப்ளாக் ஒன்றை தொடங்கிவிடுவோம். அதுவரை காத்திருக்க விருப்பமில்லை என்றால் www.blogger.com என்ற முகவரிக்கு சென்று முயற்சித்துப் பாருங்கள். மிகவும் எளிதாக ப்ளாக் உருவாக்கிவிடலாம்.

Post a Comment

71 Comments

 1. நல்லதொரு தொடர் நண்பரே..

  என்னைப்போற கத்துக்குட்டிகளுக்க்கு மிகவும் உதவியாய இருக்கும்..

  மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்..

  சம்பத்குமார்

  ReplyDelete
 2. பயனுள்ள பகிர்வு நன்றி

  ReplyDelete
 3. //நீங்கள் தொடங்கும் ப்ளாக்கின் முகவரியில் நீங்கள் கொடுத்தப் பெயருடன் .blogspot என்றும் சேர்ந்து இருக்கும். இதற்கு Subdomain என்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் blogname என்று கொடுத்திருந்தால் உங்கள் முகவரி blogname.blogspot.com என்று இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பணம் கட்டி உங்களுக்கு பிடித்த பெயரை முகவரியாக வைக்கலாம்.//

  .blogspot இற்கு பதிலாக .tk என்ற domain இலவசமாகவகே கிடைக்கிறது...

  Blogspot ஐ இனி விரும்பிய பெயருக்கு இலவசமாக மாற்றலாம் வாங்க!

  ReplyDelete
 4. மிகவும் பயனுள்ள் பகிர்வு

  ReplyDelete
 5. அப்துல் பஷித் என்னுடைய தளத்தில் கூட ஒரு சிலர் இது பற்றி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் நானும் ஒன்று இது பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது பொறுமையாக எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

  ReplyDelete
 6. புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளது நன்றி நண்பா

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  நல்லதொரு முயற்சி.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. பதிவர்கள் எல்லாருக்குமே பயனுள்ள ஒரு பதிவு தொடங்கி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. பயனுள்ள பகிர்வு

  ReplyDelete
 10. நங்களும் வருவோமல !

  ReplyDelete
 11. புதியவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தொடரை எழுத தொடங்கியுள்ளீர்கள், எனக்கு தேர்வு நடப்பதால் பதிவு பக்கம் வருவதில்லை அதான் கொஞ்ச நாளா ஆப்ஸெண்ட்..

  நன்றி...

  ReplyDelete
 12. நம்ம பாட்டுக்கு ஏதோ திறந்தம் எழுதம் என்று இருந்தோம் இப்பத் தான் சில அறியாத விடயங்களை அறிய முடிகிறது நன்றி சகோ...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

  ReplyDelete
 13. நண்பா இந்த அளவிற்க்கு பொறுமை இல்லாததால் தான் தங்கள் தளத்தை முழுமையாக புரட்டி எனது வலைப்பூக்களை சில நாட்களுக்குள் மேம்படுத்திவிட்டேன்....

  நன்றி நண்பா...

  ReplyDelete
 14. நான் பயனடைந்ததைப்போல இன்னும் பலரா! உங்கள் சேவை தொடரட்டும். நன்றி நண்பரே!

  ReplyDelete
 15. உங்கள் பதிவு எப்போதும் பயனுள்ளதாகதான் இருக்கும் பிரதர்

  ReplyDelete
 16. பயனுள்ள பகிர்வு நன்றி

  ReplyDelete
 17. Thanks bro. waiting for all secrets.

  ReplyDelete
 18. //தேவைகளற்றவனின் அடிமை said... 1

  useful info brother//

  Thank You Brother!

  ReplyDelete
 19. //சம்பத் குமார் said... 2

  நல்லதொரு தொடர் நண்பரே..

  என்னைப்போற கத்துக்குட்டிகளுக்க்கு மிகவும் உதவியாய இருக்கும்..

  மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன்..

  சம்பத்குமார்//

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 20. //stalin wesley said... 3

  பயனுள்ள பகிர்வு நன்றி
  //

  நன்றி நண்பா!

  ReplyDelete
 21. //MHM Nimzath said... 4

  //நீங்கள் தொடங்கும் ப்ளாக்கின் முகவரியில் நீங்கள் கொடுத்தப் பெயருடன் .blogspot என்றும் சேர்ந்து இருக்கும். இதற்கு Subdomain என்று பெயர். உதாரணத்திற்கு நீங்கள் blogname என்று கொடுத்திருந்தால் உங்கள் முகவரி blogname.blogspot.com என்று இருக்கும். பெரிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பணம் கட்டி உங்களுக்கு பிடித்த பெயரை முகவரியாக வைக்கலாம்.//

  .blogspot இற்கு பதிலாக .tk என்ற domain இலவசமாகவகே கிடைக்கிறது...//

  தகவலுக்கு நன்றி நண்பா! ஆனால் அது போன்ற டொமைன்களை நம்ப முடியாது. சமீபத்தில் கூகிள் தளம் co.cc டொமைன்களை தனது தேடல் முடிவுகளில் இருந்து நீக்கியதை அறிவீர்கள். .tk டொமைன்களிலும் அதிகம் ஸ்பாம் தளங்கள் இருப்பதால் எப்பொழுது வேண்டுமானாலும் அதனை கூகிள் தடை செய்யலாம்.

  ReplyDelete
 22. //Jaleela Kamal said... 5

  மிகவும் பயனுள்ள் பகிர்வு//

  நன்றி சகோதரி!

  ReplyDelete
 23. //கிரி said... 6

  அப்துல் பஷித் என்னுடைய தளத்தில் கூட ஒரு சிலர் இது பற்றி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அதனால் நானும் ஒன்று இது பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.. நேரம் கிடைக்கும் போது பொறுமையாக எழுதிக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.//

  அவசியம் எழுதுங்கள் நண்பரே!

  ReplyDelete
 24. //"என் ராஜபாட்டை"- ராஜா said... 7

  புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ளது நன்றி நண்பா//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 25. //மு.ஜபருல்லாஹ் said... 9

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
  நல்லதொரு முயற்சி.வாழ்த்துக்கள்!
  //

  வ அலைக்கும் ஸலாம் வரஹ்..

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 26. //Lakshmi said... 10

  பதிவர்கள் எல்லாருக்குமே பயனுள்ள ஒரு பதிவு தொடங்கி இருக்கீங்க.வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்கு நன்றிமா!

  ReplyDelete
 27. புதிய பதிவர்களுக்கு ஏற்ற அருமையான பதிவு!

  ReplyDelete
 28. //சிநேகிதி said... 11

  பயனுள்ள பகிர்வு//

  நன்றி சகோ.!

  ReplyDelete
 29. //மழைதூறல் said... 12

  நங்களும் வருவோமல !//

  :) :) :)

  நன்றி நண்பா!

  ReplyDelete
 30. //Heart Rider said... 13

  புதியவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தொடரை எழுத தொடங்கியுள்ளீர்கள், எனக்கு தேர்வு நடப்பதால் பதிவு பக்கம் வருவதில்லை அதான் கொஞ்ச நாளா ஆப்ஸெண்ட்..

  நன்றி...//

  நன்றி நண்பா! இதைவிட தேர்வு தான் முக்கியம். அதில் அதிக கவனம் செலுத்துங்கள்.

  ReplyDelete
 31. //♔ம.தி.சுதா♔ said... 14

  நம்ம பாட்டுக்கு ஏதோ திறந்தம் எழுதம் என்று இருந்தோம் இப்பத் தான் சில அறியாத விடயங்களை அறிய முடிகிறது நன்றி சகோ...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா//

  நன்றி சகோ.!

  ReplyDelete
 32. //தமிழ்கிழம் said... 15

  நண்பா இந்த அளவிற்க்கு பொறுமை இல்லாததால் தான் தங்கள் தளத்தை முழுமையாக புரட்டி எனது வலைப்பூக்களை சில நாட்களுக்குள் மேம்படுத்திவிட்டேன்....

  நன்றி நண்பா...//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 33. //வே.சுப்ரமணியன். said... 16

  நான் பயனடைந்ததைப்போல இன்னும் பலரா! உங்கள் சேவை தொடரட்டும். நன்றி நண்பரே!//

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 34. //thariq ahamed said... 17

  உங்கள் பதிவு எப்போதும் பயனுள்ளதாகதான் இருக்கும் பிரதர்//

  நன்றி சகோ.!

  ReplyDelete
 35. //விக்கியுலகம் said... 18

  பயனுள்ள பகிர்வு நன்றி//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 36. //Prabu Krishna said... 19

  Thanks bro. waiting for all secrets.
  //

  Welcome Brother! Not Secrets, All are basics.

  :) :) :)

  ReplyDelete
 37. //thalir said... 29

  புதிய பதிவர்களுக்கு ஏற்ற அருமையான பதிவு!//

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 38. //ஸ்ரீராம். said... 30

  உபயோகமான பதிவு.//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 39. பயனுள்ள பகிர்வு நண்பா...

  ReplyDelete
 40. i all ready created blog but,i don't know use of its ,thanks for ur use full information friend,, i'll goto read next link

  ReplyDelete
 41. மிகவும் பயனுள்ள் பகிர்வு

  ReplyDelete
 42. பயனுள்ள பகிர்வு நன்றி

  ReplyDelete
 43. நல்ல முயற்சி நன்பரே... பதிவுலக புதியவர்களுக்கு இது நிச்சயம் உதவியாக இருக்கும்,

  //உங்கள் ப்ளாக் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் அது இணையத்தளம் ஆகிவிடாது!!! //

  I like this ,nice...

  ReplyDelete
 44. நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 45. greetings to you. Could you guide me to start video blog? my mail-id is vpsagar2000@gmail.com

  thanks
  prem

  ReplyDelete
 46. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 47. the page http://atat.ro says Would you like some iGoogle widgets?

  தயவு செய்து இதுக்கு ஒரு வழி சொல்லுங்களேன்

  என் ப்ளாக்ஸ்போட்டில் அதன் அட்டகாசம் தாங்க முடியலையே சாமி.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. நண்பரே! நீங்கள் வைத்திருக்கும் Success qoores, Convert to pdf ஆகிய இரண்டில் Gadget-களில் ஒன்றினால் தான் அந்த பிரச்சனை. அவைகளை நீக்கிவிடுங்கள்.

   Delete
  2. அது Success Quotes!

   Delete
 48. மிக்க மகிழ்ச்சி சகோ..!

  ReplyDelete
 49. கணனிநீ வைத்திருக்க காணவந்தேன் என்றேன்;
  கணனி எதற்கு? 'காணஎன்னை' என்றாள்;
  இணையதளம் வேண்டும் இணைப்புத்தா என்றான்; (அவள்)
  இணைப்பு வளைத்தரவோ? என்றாள்!

  வளைப்பூ அடைய வழிச்சொல்வாய் என்றான்;
  தலைப்பூ அசையஅவள், தாவுகூ குள்உள்...
  கலைப்பூ அன்னஅங்கே காண்'பிளாக்கர் நண்பன்'
  வளைப்பூ வழிக்காட்டும்... என்றாள்!

  Web site names/
  Web site addresses:

  1) Wills in Kavithai Chittu
  http://willsindiaswillswords.blogspot.in

  2) Willswords Tamil Twinkles
  http://willsindiastamil.blogspot.com

  3) Willswords English Twinkles
  http://willswordsindiatwinkles.blogspot.in

  ReplyDelete
 50. ஏப்பா தம்பி அப்துல் பாசித் இரெண்டாம் பகுதிக்கு லிங்க் இங்க கொடுத்த என்ன ... தொடருகிறேன் பகுதி இரண்டுக்கு.

  ReplyDelete
 51. பல நாட்களுக்கு முன்பே இதைப் பற்றித் தெரியுமென்றாலும், இன்றுதான் இந்தத் தொடரைப் படிக்கத் தொடங்கியுள்ளேன். ஏற்கெனவே வலைப்பூவைத் தொடங்கி விட்டேன். ஆனால், இன்னும் எழுதத் தொடங்கவில்லை, எழுத நிறைய இருப்பினும். இதை முழுவதுமாகப் படித்து வலைப்பூ பற்றிய அறிவை முழுமையாக வளர்த்துக் கொண்டு களத்தில் இறங்கலாமென்று இருக்கிறேன். நீங்கள்தான் என் வழிகாட்டி. மிக்க நன்றி!

  ReplyDelete
 52. Really helpful for beginners. thanks for sharing...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வழி காட்டுதல்படி வலைப்பூ தொடக்கி எழுத ஆரம்பித்திருக்கிறேன்.உதவிக்கு மிக்க நன்றி.

   Delete
  2. வான்நிலாApril 18, 2013 at 10:54 AM

   உங்கள் வழிகாட்டுதலின்படி வலைப்பூ தொடக்கி எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.மிக்க நன்றி.

   Delete
 53. பணம் சம்பாதிப்பதற்காக வலைப்பூ தொடங்க நினைத்தால் ஆங்கிலத்தில் தொடங்கும்படி நீங்கள் அறிவுறுத்தியுள்ளீர்கள். நீங்கள் மட்டுமில்லை பலரும், தமிழ் வலைப்பூக்களுக்கு கூகுள் தன் ஆட்சென்ஸ் சேவையை வழங்குவதில்லை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் இங்கே, உங்களுடைய இந்த வலைப்பூவிலேயே நான் சிலமுறை விளம்பரங்களைப் பார்த்திருக்கிறேன். வேறு சில தமிழ் வலைப்பூக்களிலும் பார்த்திருக்கிறேன். அது எப்படி? விளக்குவீர்களா?

  ReplyDelete
  Replies
  1. (முன்பு) நான் உள்பட பலர் ஆங்கில தளங்களுக்கு ஆட்சென்ஸ் பெற்று, அதன் மூலம் தமிழ் தளங்களில் விளம்பரம் வைக்கின்றனர்.

   Delete
 54. ஓ அப்படியா! வெகு நாட்களாக இது பற்றிக் குழம்பிக் கொண்டிருந்தேன். தெளிவுபடுத்தினீர்கள். தகவலுக்கு நன்றி!

  ReplyDelete
 55. மிக்க நன்றி ஐயா. தெரியாத விசயத்தை திருப்த்தியாக தெரிந்துகொண்டேன்.

  ReplyDelete