எச்சரிக்கை: ஏமாற்றும் எரிதங்கள்


இணையத்தை பயன்படுத்துபவர்களுக்கு அதிக தொல்லைகள் தருபவற்றில் ஒன்று, Spam எனப்படும் எரிதங்கள். மின்னஞ்சல்கள், இணைய தளங்கள் என்று பல வழிகளில் இவைகள் நமக்கு தொல்லை தருகின்றன. இப்பதிவில் நமது தளத்திற்கு வரும் எரிதங்கள் பற்றி பகிர்கிறேன்.

இன்று வலைப்பதிவு ஒன்றின் (ப்ளாக்கர் நண்பன் அல்ல)  விவரங்களை பார்த்தேன். அதில் இரண்டு தளங்களிலிருந்து அதிகமான நபர்கள் வந்திருப்பதாக காட்டியது. ஒரு தளத்தில் இருந்து 85 நபர்களும், இன்னொரு தளத்திலிருந்து 73 நபர்களும் வந்திருப்பதாக காட்டியது.


இந்த இரண்டு பரிந்துரை தளங்களும் எரித தளங்களாகும் (Spam Referrals). நமது தளத்திற்கு யாரும் வராமலேயே இவ்வாறு நம்மை ஏமாற்றுகின்றன. Statcounter, Sitemeter, Histats போன்ற வருகையாளர்களை கண்காணிக்கும் தளங்களில்  இது போன்ற எரித பரிந்துரைகளை கணக்கில் காட்டாது. இதே தளத்தின் வருகையாளர்களாக Statcounter-ல் பதிவானவை. ஏன் என்பதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்,

ஒரு பள்ளி இருக்கிறது. அதில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய இரண்டு முறைகள் இருக்கின்றது. ஒன்று, மின்னணு அட்டை முறை. இன்னொன்று ஆசிரியர் ஒவ்வொரு மாணவரையும் பார்த்து பதிவேட்டில் குறிக்கும் முறை. முதல் முறையில், ஒரு மாணவர் அந்த வகுப்பறைக்கு செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வெளியில் இருக்கும் மின்னணு முறையில் அட்டையை காட்டிவிட்டு சென்று விடலாம். அவரின் வருகை பதிவு செய்யப்படும். ஆனால் இரண்டாம் முறையில், நாம் வகுப்புக்கு சென்றால் மட்டுமே நமது வருகை பதிவு செய்யப்படும்.

அது போல, நமது தளத்திற்கு வருபவர்களை கண்காணிக்க ப்ளாக்கர் தளம் மேற்படியாக எந்த நிரலையும் பயன்படுத்துவதில்லை. அதனுடைய சர்வருக்கு (Server) வரும் தகவலைக் கொண்டு கணக்கிடுகிறது. எரிதங்கள் நம் தளத்திற்கு வராமல் ப்ளாக்கர் சர்வருக்கு தகவலை அனுப்புவதால் அவைகள் பரிந்துரை செய்ததாக பதிவாகிறது. ஆனால் Statcounter, Sitemeter, Histats போன்றவைகள் நமது வருகையாளர்களை கண்காணிக்க ஜாவா போன்ற நிரல்களை பயன்படுத்துகின்றன. அதனால் நமது தளத்திற்கு பயனாளர்கள் வந்தால் மட்டுமே அவர்களின் வருகை பதிவாகிறது.

கூகிள் ஏன் இதனை தடுக்கவில்லை?

அப்படி  இல்லை. எரிதங்களுக்கு எதிராக கூகிள் தளம் பல்வேறு முறைகளை கையாள்கிறது. மேலும் இவற்றுக்கு எதிராக கடுமையாக செயல்படுகிறது. பொதுவாக எரிதல்காரர்கள் (Spammers) எரிதங்களை அனுப்புவதற்கு ஒரே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில்லை. மாறாக ஒவ்வொரு முறையும் புதுப்புது நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். கூகிள் தளமும் தொடர்ந்து அவைகள் ஒவ்வொன்றாக தடுத்து வருகிறது.


ஏன் எரிதங்களை அனுப்புகின்றனர்?

எரிதங்களை அனுப்புவதற்கு முக்கிய காரணம் பணம். அது போன்ற தளங்களில் விளம்பரங்கள் அதிகமாக இருக்கும். பணம் சம்பாதிப்பதற்காகத் தான் அவர்கள் எரிதங்களை அனுப்புகின்றனர். ஆனால் சில எறிதல் தளங்கள் நமது கணினியில் மால்வேர்களை நிறுவிவிடும்.

இதனால் என்ன பாதிப்பு?

இதனால் நமக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை. மால்வேர் உள்ள தளங்களினால் மட்டுமே பெரிய அளவில் பாதிப்பு வரும். மேலும் நம்மில் சிலர் "Top Referer" gadget வைத்திருப்போம். அவ்வாறு வைத்திருந்தால், நம்முடைய தளத்தில் அந்த எரித தளங்களின் சுட்டி வரும். எரித தளங்களுக்கு இணைப்பு தரும் தளங்களையும் எரித தளங்களாக கூகிள் கருதுகிறது. இதனால் உங்கள் தளம் கூகிளால் நீக்கப்படலாம்.

என்ன செய்வது?

இது போன்ற சுட்டிகளுக்கு நாம் செல்லாமல் இருப்பதே நலம். காரணம் அது போன்ற சுட்டிகளுக்கு நாம் செல்லாமல் இருந்தால், அவர்களுக்கு பணம் கிடைக்காது. பிறகு நமக்கு எரிதங்களை அனுப்புவதை ஓரளவு நிறுத்திவிடுவார்கள்.

Image Credit: Wikipedia

Post a Comment

25 Comments

 1. இது(எரித பரிந்துரைகள்) எப்படி பிளாக்கர் status க்குள் வருகிறது ...

  ReplyDelete
 2. //இது போன்ற சுட்டிகளுக்கு நாம் செல்லாமல் இருப்பதே நலம். காரணம் அது போன்ற சுட்டிகளுக்கு நாம் செல்லாமல் இருந்தால், அவர்களுக்கு பணம் கிடைக்காது. பிறகு நமக்கு எரிதங்களை அனுப்புவதை ஓரளவு நிறுத்திவிடுவார்கள்.//

  நல்லதோர் ஆலோசனை.....தகவலுக்கு நன்றி!

  Adobe Photoshop CS3 (Portable) இலவசமாக Download செய்ய

  ReplyDelete
 3. நல்ல எச்சரிக்கை நண்பரே ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .

  ReplyDelete
 4. புரியும்படியான விளக்கங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா..

  தொடருங்கள்.. தொடர்கிறோம்

  ReplyDelete
 5. ஒன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது,எரிதல்காரர்கள்னா (Spammers)......

  ReplyDelete
 6. நண்பா அப்ப pu.gg-யும் spam-ஆ?

  ReplyDelete
 7. நல்லதொரு தகவல் சகோ .....
  என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
  உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

  ReplyDelete
 8. நல்ல தகவல். நன்றி நண்பரே!

  ReplyDelete
 9. நன்றி நல்லதொரு தகவல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. Thanks abdul

  WISH YOU HAPPY DEEPAVALI

  ReplyDelete
 11. //stalin said... 1

  இது(எரித பரிந்துரைகள்) எப்படி பிளாக்கர் status க்குள் வருகிறது ...//

  ப்ளாக்கர் என்றில்லை நண்பா! அனைத்து தளங்களுக்கும் இது போன்ற எரிதங்களை அனுப்புகின்றனர். அதற்கு ஒருவித நுட்பத்தை பயன்படுத்துகின்றனர். அது பற்றி எனக்கு தெரியவில்லை.

  ReplyDelete
 12. //Prabu Krishna said... 2

  Thanks For The Info Bro.//

  You are welcome friend!

  ReplyDelete
 13. //MHM Nimzath said... 3

  //இது போன்ற சுட்டிகளுக்கு நாம் செல்லாமல் இருப்பதே நலம். காரணம் அது போன்ற சுட்டிகளுக்கு நாம் செல்லாமல் இருந்தால், அவர்களுக்கு பணம் கிடைக்காது. பிறகு நமக்கு எரிதங்களை அனுப்புவதை ஓரளவு நிறுத்திவிடுவார்கள்.//

  நல்லதோர் ஆலோசனை.....தகவலுக்கு நன்றி!//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 14. //koodal bala said... 4

  Good information//

  Thank you friend!

  ReplyDelete
 15. //M.R said... 5

  நல்ல எச்சரிக்கை நண்பரே ,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி .//

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. //சம்பத்குமார் said... 6

  புரியும்படியான விளக்கங்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பா..

  தொடருங்கள்.. தொடர்கிறோம்//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 17. ஏமாற்றும் எரிதங்கள் பற்றி தெரிந்துகொண்டேன் நண்பரே! நன்றி...

  ReplyDelete
 18. நல்ல தகவல்கள் நண்பா

  ReplyDelete
 19. /உங்கள் நண்பன் said... 19

  Nice sharings... Thank you,,,//

  Welcome Friend!

  ReplyDelete
 20. //மாய உலகம் said... 20

  ஏமாற்றும் எரிதங்கள் பற்றி தெரிந்துகொண்டேன் நண்பரே! நன்றி...//

  நன்றி நண்பா!

  ReplyDelete
 21. //வைரை சதிஷ் said... 21

  நல்ல தகவல்கள் நண்பா//


  நன்றி நண்பா!

  ReplyDelete
 22. thanks i am newly start blog .my blog also show that type of sites.what can i do if any way to stop them please give me my mail is info@ravinsingh.in

  ReplyDelete