"தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


நமது வலைப்பதிவுகள் பிரபலமாவதற்கு திரட்டிகள் முக்கிய காரணியாக செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. தமிழில் பல திரட்டிகள் இருந்தாலும் அவைகளில் ஒரு சில திரட்டிகள் மட்டும் தான் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான், தமிழ்மணம் திரட்டி.

சமீபத்தில் தமிழ்மணம் பற்றி தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா... என்ற  பதிவு டெர்ரர் கும்மி தளத்தில் வந்தது. அதில் தமிழ்மணம் திரட்டியின் சமீப நிலைகளை நகைச்சுவையாக அல்லது நக்கலாக எழுதப்பட்டிருந்தது. அதில் பின்னூட்டமிட்ட பெயரிலி என்கிற இரமணிதரன் என்கிற தமிழ்மணத்தின் நிர்வாகி ஒருவர் அப்பதிவிற்கு ஆட்சேபனை செய்தார். அவர் ஆட்சேபனை செய்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தான் கண்டனத்துக்குரியது. சக பதிவர்கள் பலர் மீது அவர் பயன்படுத்திய கீழ்த்தரமான, கேவலமான வார்த்தைகள் இங்கு மேற்கோள்காட்டுவதற்காக கூட பிரசுரிக்க முடியாதவைகள். அந்த பதிவிற்கு சென்று நீங்களே அறிந்துக் கொள்ளுங்கள்.

மேலும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லிக்கொள்ளும் "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக" என்னும் முகமனை கேலி செய்யும் விதமாக "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..." என்றுகொச்சைப்படுத்தியுள்ளார்.

பதிவுலகில்  என் நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ள பதிவுகள் எத்தனையோ உள்ளன. அங்கெல்லாம் சென்று என் கருத்தை பதிவு செய்வதில்லை. ஆனால் திரட்டி என்பது நமது வலைப்பதிவில் ஒரு அங்கமாகத் திகழ்கிறது. நான் மதிப்பு வைத்திருந்த ஒரு திரட்டியின் நிர்வாகி இவ்வாறு தரம் தாழ்ந்திருப்பதாலேயே என் கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

எனது கோரிக்கை இது தான்,

பதிவுலக சகோதரர்களையும், இஸ்லாமிய முகமனையும் கேவலப்படுத்திய பெயரிலி மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இது பற்றி தமிழ்மணம் விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை இத்தளத்தில் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இருக்காது.

ஓரிரு நாட்களில் பதில் வரவில்லையெனில், தமிழ்மணத்தை முற்றிலுமாக புறக்கணிப்போம்.

தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்குவது எப்படி?

கடந்த இரண்டு நாட்களில் சில சகோதரர்கள் தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்கும் போது பிழை வருகிறது என்று சொன்னார்கள். தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்குவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லுங்கள்.

2. அங்கு வலது புறம் மேலே Backup/Restore என்னும் பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை பேக்கப் எடுத்துக் கொள்ளுங்கள்.

3. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்னும் பட்டனை க்ளிக் செய்து, Expand Widget Templates என்பதை க்ளிக் செய்யவும்.

4. பிறகு பின்வரும் நிரலை கண்டுபிடிக்கவும்.


 
<!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->
<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
</script>


<b:if cond='data:blog.pageType == "item"'>
<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp + "&posturl=" + data:post.url + "&cmt=" + data:post.numComments + "&blogurl=" + data:blog.homepageUrl + "&photo=" + data:photo.url' language='javascript' type='text/javascript'>
</script>
</b:if>

<!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->

பிறகு மேலுள்ள நிரலை Select செய்து Delete செய்யவும்.

** இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்தார்களோ என்னவோ? வாசகர்களுக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று நிரலில் முதல் வரியில்
<!-- tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET -->
என்றும், இறுதி வரியில்
<!-- tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET --> என்றும் கொடுத்துள்ளார்கள். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நிரல்களைத் தான் நீக்க வேண்டும்.

அவ்வளவு தான்...!

கவனிக்க: தமிழ்மணம் திரட்டி தானியங்கி முறையில் செயல்படுகிறது. ஓட்டுப்பட்டையினை நீக்கினாலும் நமது பதிவுகள் தமிழ்மணத்தில் வரும். தமிழ்மணத்திலிருந்து சரியான பதில் வராத பட்சத்தில் அவர்களுக்கு விலகல் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

டிஸ்கி: இப்பதிவின் தலைப்பை  "தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்குவது எப்படி?" என்று தான் வைக்க இருந்தேன். ஆனால் இந்த டெம்ப்ளேட்டில் நீளமான தலைப்பு வைத்தால் அது சரியாகத் தெரிவதில்லை. அதனை சுருக்கி இவ்வாறு வைத்தேன்.

Update:

இது குறித்து "பெயரிலியின் சொந்த கருத்துக்களுக்கு தமிழ்மணம் பொறுப்பாகாது" என்று தமிழ்மணம் விளக்கம் அளித்துள்ளது.

Post a Comment

46 Comments

  1. nice post (astrologicalscience.blogspot.com)

    ReplyDelete
  2. எப்படியோ இந்த தமிழ்மணத்தை விரட்ட வேண்டும்

    ReplyDelete
  3. உங்கள் உணர்வுகளை மதித்து நானும் அவர்களிடம் இருந்து விளக்கம் வரும் வரை தமிழ்மணத்தை விலக்கி வைக்கிறேன் சகோ.

    ReplyDelete
  4. எல்லா தமிழர் வலைப்பூக்களுக்கும் பயனுள்ள பதிவு...

    ReplyDelete
  5. மாப்ள ரைட்டு!

    ReplyDelete
  6. தமிழ்மணம் ஒரு நல்ல நடுநிலை வகுக்கும் திரட்டி அல்ல. அது இஸ்லாத்திற்கும் மற்ற மொழி பேசுபவர்களுக்கும் விரோதமான குறுகிய நோக்கம் கொண்டது. அது வியாபாரம் நோக்கம் கொண்டு பணம் சேர்க்கும் கொள்கையில் செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது.இலங்கை மக்களுக்கு மட்டும் அதன் ஆதரவு கிடைக்க முயலும் . இஸ்லாத்தினை பற்றிய செய்திகள் வந்தால் பணம் கட்டி சேரும்படி சொல்லக்கூடிய குறுகிய மனம் கொண்டது

    ReplyDelete
  7. மத உணர்வுகளைப் புண்படுத்துவது மிகவும் கீழான செயல்.

    ReplyDelete
  8. அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு அதனை புண்படுத்துவது மிகவும் கீழ்தரமான செயல். அது யாராக இருந்தாலும் சரி. அந்த செயலை செய்த தமிழ்மணத்தை முற்றிலுமாக புறக்கணிப்போம்.

    சிகப்பு கடல்
    www.iyakkangal.blogspot.com

    ReplyDelete
  9. //முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது சொல்லிக்கொள்ளும் "சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக" என்னும் முகமனை கேலி செய்யும் விதமாக "...சாந்தியும் அவ அக்கா சமாதானியும் உங்களுடன்கூடியே..சே! பதிவுத்தோஷம்.. கூடவேயிருப்பார்கள்..." என்றுகொச்சைப்படுத்தியுள்ளார்.//

    ஓரு திரட்டி வைத்து நடத்துபவருக்குரிய அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல், நாகரீகமற்ற கருத்துக்களை வெளியிட்ட தமிழ்மணம் நிர்வாகியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

    கண்டித்து இன்று காலை முதல் தமிழ்மணத்தில் இருந்தே விலகிவிட்டேன்

    நன்றி தகவலுக்கு
    நட்புடன்
    சம்பத்குமார்

    அவர்களின் ஆணவம் அடங்கட்டும்.பதிவர்களில் சில நூறு பேர் விலகிவிட்டால்தான் உண்மை தெரியும்.

    தமிழ்பதிவர்களே கண்டனக்குரல்கள் எழுப்புவோம்

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    நம் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!!!

    தமிழ் மனங்களின் இந்த எதிர்ப்பை தமிழ்மணம் இந்தளவிற்கு எதிர் பார்த்திருக்காதென்ற நினைக்கிறேன்., இப்பொழுது தமிழ் மனங்களை குறித்து தமிழ்மணம் தெளிவாய் அறிந்திருக்கும் ஆக இனியும் தம் போக்கை தமிழ்மணம் மாற்றிக் கொள்ளாவிட்டால் தம் logo வை "ங்" லிருந்து "ஙே" க்கு தான் மாற்றிக்கொள்ள வேண்டும்.

    -இறை நாடினால் இனியும் சந்திப்போம்
    http://iraiadimai.blogspot.com/2011/10/blog-post_16.html

    ReplyDelete
  11. சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக எதற்க்கு அவர்களை வணக்கம் சொல்ல சொல்லுங்க.இஸ்லாம் பரப்ப தமிழ் மணம் உதவி செய்ய வேண்டுமா?

    ReplyDelete
  12. http://unmaipesuvom.blogspot.com/2011/10/blog-post.html
    http://www.itsjamaal.com/2011/10/my-dear-blog-friends.html

    ReplyDelete
  13. அப்துல் ... நான் முகமதியன் அல்ல... ஆனால் நடந்த நிகழ்வு கண்டனத்துக்கு உரியது... நானும் தமிழ்மணத்தை புறக்கணிக்கிறேன் ... இன்று இரவு பட்டையை நீக்கி விடுகிறேன் ...

    ReplyDelete
  14. சகோ. Anonymous,

    புரிதலுக்காக!

    நாங்கள் மனிதர்களை வணங்கமாட்டோம்(தங்கள் உயிரை பணயம் எங்களை பெற்றெடுத்த, வளர்த்த தாய் தந்தை உட்பட).

    ReplyDelete
  15. தமிழ் மனத்திலிருந்து விலகியதற்கு வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  16. 1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


    2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


    3.
    தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


    4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

    5.
    தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


    6.
    தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


    7.
    தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..


    8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


    9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


    10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


    11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


    12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


    13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


    14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


    15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


    16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


    17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2


    அட..அட...அட... ஷைத்தானுக்கு கூட வெறும் 7 கல்லுதான் அடிப்பாங்க.... தமிழ் மணத்துக்கு எத்தனை கல்லுப்பா.....
    இன்னும் எத்தனை கல்லு எந்தப் பக்கம் இருந்தெல்லாம் வரப் போகுதோ!!!!

    ReplyDelete
  17. http://kjailani.blogspot.com/2011/10/blog-post.html


    தமிழ்மணமே இந்த வாரத்துக்குள் மண்ணீப்பு கேள்..!!!

    ReplyDelete
  18. கலக்கல் முடிவு.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. தமிழ்மணம் திரட்டி. பற்றி பதிவர்கள்....
    http://seasonsnidur.blogspot.com/2011/10/blog-post_17.html
    "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?
    Abdul Basith at ப்ளாக்கர் நண்பன்
    நமது வலைப்பதிவுகள் பிரபலமாவதற்கு திரட்டிகள் முக்கிய காரணியாக செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. தமிழில் பல திரட்டிகள் இருந்தாலும் அவைகளில் ஒரு சில திரட்டிகள் மட்டும் தான் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான், தமிழ்மணம் திரட்டி. மேலும் படிக்க.."தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?.
    விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
    தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
    சீ தமிழ் மனமே ............................
    தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

    ReplyDelete
  20. தமிழ்மணம் மன்னிப்பு கேட்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  21. உங்கள் மீது மாரியாத்தாளின் ஆசியும் அருளும் நிலவுவதாக!

    சிறப்பான பணி செய்து வரும் உங்களை மாரியாத்தா காப்பாற்ற வேண்டுகிறேன்

    ஜெய் மாகாளி!

    ReplyDelete
  22. Anonymous said...........
    சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது நிலவட்டுமாக எதற்க்கு அவர்களை வணக்கம் சொல்ல சொல்லுங்க.இஸ்லாம் பரப்ப தமிழ் மணம் உதவி செய்ய வேண்டுமா?
    ///வேணாங்க!உங்க உறவுக்காரர் தான் "அந்தப்" பெயரிலியோ?

    ReplyDelete
  23. எனக்கு இந்த பிரச்சனையின் முழுவிவரமும் தெரியவில்லை ஆனால் பதிவர்களையும்,இஸ்லாமிய சகோதரர்களின் மத பண்பாட்டையும் கொச்சைப்படுத்திய தமிழ்மணம் நிர்வாகியின் போக்கு கண்டிக்கத்தக்கது...

    நானும் ஓட்டுப்பட்டையை தற்காலிகமாக நீக்கியிருக்கிறேன்

    ReplyDelete
  24. நீங்கள் இஸ்லாமியரா? "இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று தானே கூறுவார்கள் "சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று யாரும் முகமன் செய்வதில்லையே! ஏன் இஸ்லாத்தை அசுத்தப்படுத்துகிரீர்கள்?

    ReplyDelete
  25. தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம்.
    பதிவுலகில் மதவாத சக்தி தவறாகப் பயன்படுகிறதா?

    ReplyDelete
  26. மிக்க நன்றிங்க,நீக்கத்தெரியாமல் அல்லாடிகிட்டு இருந்தேன்,பகிர்வுக்கு நன்றி,இப்ப ஓட்டுப்பட்டையை நீக்கிட்டேன்..

    ReplyDelete
  27. கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றி!

    @Smart

    //நீங்கள் இஸ்லாமியரா? "இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று தானே கூறுவார்கள் "சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று யாரும் முகமன் செய்வதில்லையே! ஏன் இஸ்லாத்தை அசுத்தப்படுத்துகிரீர்கள்?//

    தாங்கள் தவறாக புரிந்து வைத்துள்ளீர்கள். பொதுவாக முஸ்லிம்கள் முகமன் கூறும் போது அஸ்ஸலாமு அலைக்கும் (தங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக)என்றும் கூறுவார்கள், மேலும் "இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக." என்று பொருள்படும்படி "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்" என்றும் கூறுவார்கள்.

    //தமிழ்மணத்தை எதிர்க்கிறோம் என்கிற காரணத்திற்காக பொய்யான விஷயங்களை பரப்பாதீர்கள் என்பதே எமது தரப்புவாதம். //

    இதில் நான் என்ன பொய் கூறினேன் என்று விளக்குவீர்களா?

    ReplyDelete
  28. @ Abdul Basith

    அப்படி என்றால் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கிண்டல் செய்தால் தானே நீங்கள் மதரீதியான தாக்கு என்று சொல்லமுடியும்
    அவர் கூறிய சாந்தியும் சமாதானமும் சமஸ்கிருத வார்த்தை உண்மையில் இந்துக்கள் தான் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  29. I do agree with Smart point

    ReplyDelete
  30. மற்றவர் மதங்களை அவமரியாதை செய்பவர்கள் சுய அறிவு இல்லாத மிருகங்கள்.
    எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..

    ReplyDelete
  31. //இதில் நான் என்ன பொய் கூறினேன் என்று விளக்குவீர்களா?//
    அந்த நிர்வாகி இஸ்லாமிய மதத்தை தாக்கி எழுதியதாக கூறுவது தான் பொய் என்கிறேன்.
    அவர் பொதுவாக கிண்டல் செய்தவொன்றை மதரீதியான தாக்குதலாக எப்படி எடுக்கமுடியும்?

    ReplyDelete
  32. " தமிழ்மணம் " நண்பா இன்னும் கொஞ்ச நாள் -ல கூகுள் இந்த வார்த்தையை போட்ட " 0 " வரும் போல .....


    நானும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் சகோ ....

    ReplyDelete
  33. தமிழ் 'நாற்றத்துக்கு' நானும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்..!

    ReplyDelete
  34. நானும் நீக்கிவிட்டேன் பிரதர். யாரையும் தீன்டாமல் வாழும் நமக்கு எவ்வளவு பிரச்னைகள்.

    ReplyDelete
  35. @jiff0777

    நண்பா! basith27[at]gmail.com என்ற மின்னஞ்சலில் என்னை தொடர்புக் கொள்ளவும்.

    ReplyDelete
  36. @smart

    தமிழ்மணம் விளக்கத்திற்கு பிறகு இது பற்றி பேச விருப்பமில்லை. மன்னிக்கவும்!

    ReplyDelete
  37. @stalin @தமிழ்மணி @தாரிக்

    தங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  38. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

    என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

    தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!

    மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

    ReplyDelete
  39. naanum thamil manathai kalainthu vitten

    ReplyDelete
  40. பிளாக்கரில் அதிக மெம்பர்களை சேர்ப்பது எவ்வாறு என்று கூறவும்!!!!!

    ReplyDelete