ப்ளாக்கரில் பிக்னிக் வசதி

பிக்னிக் (Picnik) என்பது புகைப்படங்களை அழகுப்படுத்துவதற்கும், திருத்துவதற்கும் பயன்படும் இணையத்தளமாகும். 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இணையத்தளத்தை கூகிள் நிறுவனம் கடந்த வருடம் (2010) வாங்கியது. புதிய ப்ளாக்கர் தோற்றத்தில் பதிவில் நாம் சேர்க்கும் புகைப்படங்களை பிக்னிக் மூலம் திருத்தம் செய்யும் வசதியை அளித்துள்ளது ப்ளாக்கர் தளம்.

முதலில் பதிவு எழுதும் போது புகைப்படம் ஒன்றை இணைத்துக் கொள்ளுங்கள்.


பிறகு அந்த படத்தை க்ளிக் செய்தால் பல தேர்வுகள் வரும். அதில் Edit Image என்பதை சொடுக்கவும்.



புதிய சாளரம் (Window) ஒன்று உருவாகும். அதில் உங்கள் படத்தை திருத்தம் செய்யவும், அழகுப்படுத்தவும் நிறைய வசதிகள் இருக்கும். அவற்றில் சில இலவசமாகவும், சில பணம் கட்டி பயன்படுத்தும்படியும் இருக்கும். நம் வழக்கப்படி இலவச வசதிகளையே பயன்படுத்துவோம்.



முழு வசதியையும் விளக்க முடியாது என்பதால் எனக்கு பிடித்த சில இலவச வசதிகளை மட்டும் இங்கு பகிர்கிறேன்.

Vampire Eyes:


ரத்தக் காட்டேரிகளின் (பயப்படாதீங்க..!) கண்கள். புகைப்படத்தில் உள்ள கண்களை ரத்தக் காட்டேரிகளின் கண்கள் போல மாற்றலாம். இவ்வசதி Featured என்னும் Tab-ல் இருக்கும். நான்கு வித கண்களில் ஒன்றை தேர்வு செய்து, படத்தில் உள்ள கண்களில் சொடுக்கினால் மாறிவிடும்.

Mask:


அதே Featured என்னும் Tab-ல் Mask என்பதை சொடுக்கி நமக்கு விருப்பமான முகமூடிகளை படத்தில் சேர்க்கலாம்.

Halloween Stickers:


அதே Featured என்னும் Tab-ல் Halloween Stickers என்பதை சொடுக்கினால், விதவிதமான ஹால்லோவீன் படங்கள் சின்னசின்னதாக இருக்கும். நமக்கு பிடித்தமானதை இணைத்துக் கொள்ளலாம்.

Pencil Draw:


Effect என்னும் Tab-ல் Pencil Draw என்பதை சொடுக்கினால், நமது புகைப்படம் பென்சிலால் வரைந்தது போல மாறிவிடும்.

Before & After


"எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்" என்பது போல முன்னும், பின்னும் உள்ள வித்தியாசங்களை படங்களில் காட்டுவதற்கு இந்த வசதி பயன்படுகிறது. இதனை பயன்படுத்த Frame என்னும் Tab-ல் Before & After என்பதை சொடுக்கவும்.

எல்லா மாற்றங்களும் செய்த பிறகு Save என்பதை க்ளிக் செய்யுங்கள்.



ப்ளாக்கர் பதிவில் இல்லாமல் வேறு பயன்பாட்டிற்காகஇந்த வசதியை பெற வேண்டுமெனில் www.picnik.com என்ற முகவரிக்கு சென்று பயன்படுத்தலாம். கணக்கு துவக்க வேண்டிய அவசியமில்லை.

Picnik Logo Credit: http://facebooklayouts.com/
Mr. Bean Image Credit: http://www.mrbean.co.uk/

Post a Comment

41 Comments

  1. பயனுள்ள விஷயத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பா...

    ReplyDelete
  2. நான் கூட தலைப்பைப்பார்த்து மிரண்டுவிட்டேன் நண்பா.... ஒரு வேளை கதைக்கான தலைப்பாக இருக்குமோவென.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  3. நம் வழக்கப்படி இலவச வசதிகளையே பயன்படுத்துவோம். //

    ஹா ஹா நாம யாரு.... ;-)))))))))

    ReplyDelete
  4. நல்லாயிருக்கு நண்பா... பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மாப்ள தொழில் நுட்பம் எம்புட்டு வளருதுய்யா...விஷயம் அறிய வைத்த பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அப்பவே நெனச்சேன்............

    தகவலுகு நன்றி சகோ...

    ReplyDelete
  7. தேவையான குறிப்புகள் அருமை..

    ReplyDelete
  8. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  9. சூப்பரா இருக்கு சகோ ...

    ReplyDelete
  10. அருமையான வசதி, இனி நானும் பயன்படுத்திப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. பயனுள்ள பதிவு....

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல் நண்பரே

    ReplyDelete
  13. EDIT IMAGE என்ற OPTION வர வில்லையே அன்பரே படத்தை இணைக்கும் போது ..

    ReplyDelete
  14. நல்லா இருக்கு பிரதர்

    ReplyDelete
  15. நல்ல பதிவு.

    ReplyDelete
  16. Me too! not come :( How to get it?

    By
    H@r!

    ReplyDelete
  17. //Heart Rider said... 1

    பயனுள்ள விஷயத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி நண்பா...
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  18. //மாய உலகம் said... 2

    நான் கூட தலைப்பைப்பார்த்து மிரண்டுவிட்டேன் நண்பா.... ஒரு வேளை கதைக்கான தலைப்பாக இருக்குமோவென.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    //

    //நம் வழக்கப்படி இலவச வசதிகளையே பயன்படுத்துவோம். //

    ஹா ஹா நாம யாரு.... ;-)))))))))
    //

    :) :) :)

    //நல்லாயிருக்கு நண்பா... பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  19. //விக்கியுலகம் said... 5

    மாப்ள தொழில் நுட்பம் எம்புட்டு வளருதுய்யா...விஷயம் அறிய வைத்த பகிர்வுக்கு நன்றி!//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  20. //ஆமினா said... 6

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    அப்பவே நெனச்சேன்............

    தகவலுகு நன்றி சகோ...
    //

    வ அலைக்கும் ஸலாம்.

    :) :) :)

    நன்றி சகோ.!

    ReplyDelete
  21. //முனைவர்.இரா.குணசீலன் said... 7

    தேவையான குறிப்புகள் அருமை//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  22. //koodal bala said... 8

    நல்லா இருக்கே !//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  23. //"என் ராஜபாட்டை"- ராஜா said... 9

    பயனுள்ள பதிவு//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  24. //stalin said... 11

    சூப்பரா இருக்கு சகோ ...//

    நன்றி சகோ.!

    ReplyDelete
  25. //anbu said... 12

    அருமையான வசதி, இனி நானும் பயன்படுத்திப் பார்க்கிறேன்.
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. //MHM Nimzath said... 13

    பயனுள்ள பதிவு....
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  27. //வைரை சதிஷ் said... 14

    very very useful post
    //

    Thank You Friend!

    ReplyDelete
  28. //M.R said... 15

    பயனுள்ள தகவல் நண்பரே
    //

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. //சி.பிரேம் குமார் said... 16

    EDIT IMAGE என்ற OPTION வர வில்லையே அன்பரே படத்தை இணைக்கும் போது ..//

    நண்பா! நீங்கள் draft.blogger.com முகவரியை தானே பயன்படுத்துகிறீர்கள்?

    Add image மூலம் படத்தை இணைத்துவிடுங்கள். post editor-ல் படம் வந்த பிறகு அதனை க்ளிக் செய்தால் edit image வரும்.

    ReplyDelete
  30. //Premkumar Masilamani said... 17

    :)//

    :) :) :)

    நன்றி நண்பா!

    ReplyDelete
  31. //தாரிக் said... 18

    நல்லா இருக்கு பிரதர்
    //

    நன்றி பிரதர்!

    ReplyDelete
  32. //Prabu Krishna said... 19

    Nice bro.//

    Thank You Brother!

    ReplyDelete
  33. //Abu Nadeem said... 20

    Good Post
    //

    Thank You friend!

    ReplyDelete
  34. //atchaya said... 21

    நல்ல பதிவு.//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  35. //Hari said... 22

    Me too! not come :( How to get it?

    By
    H@r!//

    நண்பா! நீங்கள் draft.blogger.com முகவரியை தானே பயன்படுத்துகிறீர்கள்?

    Add image மூலம் படத்தை இணைத்துவிடுங்கள். post editor-ல் படம் வந்த பிறகு அதனை க்ளிக் செய்தால் edit image வரும்.

    ReplyDelete
  36. தெரிந்த தகவல்தான், என்றாலும் தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள்.. பாராட்டுகள் நண்பரே..!

    ReplyDelete