எப்படி சமைப்பது? கூகிளில் தேடலாம்!

Bowl of Cookies 04.26.09 [116]

உங்களுக்கு விதவிதமாக சமைப்பதற்கு விருப்பமா? எப்படி சமைப்பது என்று தெரியவில்லையா? கவலையை விடுங்கள். உங்களுக்காக கூகிள் தேடுபொறி உதவுகிறது. கூகிள் தேடலில் உடனடி பதில்கள் என்ற பதிவில் கூகிள் தேடலில் உள்ள சில சிறப்பம்சங்களை பார்த்தோம். அதில் இன்னொரு சிறப்பம்சம், Get Recipes என்னும் வசதி.


இவ்வசதி மூலம், கூகிளில் சமையல் பற்றி ஏதாவது தேடினால் சமையல் குறிப்புகளை காட்டும். மேலும் பக்கப்பட்டியில் (Sidebar) மூன்று தேர்வுகளை காட்டும்.


Ingredients - நாம் தேடும் சமையல் குறிப்பில் ஏதாவது சில பொருட்கள் வேண்டாம் என நினைத்தாலோ, அல்லது வேண்டும் என நினைத்தாலோ, அதனை இங்கு தேர்வு செய்யலாம்.

Cook Time -  நாம் தேடும் சமையல் குறிப்பு எத்தனை மணி நேரத்தில் செய்யக் கூடியவையாக இருக்க வேண்டும்? என்று இங்கு தேர்வு செய்யலாம்.


Calories - நாம் தேடும் சமையல் குறிப்பில் கலோரியின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? என்பதை இங்கு தேர்வு செய்யலாம்.


சாக்லேட்டுடன் கூடிய, நூறு கலோரிகளுக்குள்ளான, வெண்ணெய் குக்கிகளை (Butter Cookies) ஒரு மணிநேரத்தில் சமைப்பது எப்படி? என்று தேடினால் பின்வருமாறு காட்டும்.


இதில் வருத்தமான செய்தி என்னவென்றால், ஆங்கிலத்தில் மட்டும் தான் இதனை தேட முடியும்.

யூட்யூப் மாற்றங்கள்:

யூட்யூப் தளத்தில் புதிய மாற்றங்கள் வந்துள்ளது.

Video End-Screen:யூட்யூபில் படம் பார்த்து முடித்தபின் அது தொடர்புடைய படங்களை காட்டும் அல்லவா? அதனை புதிய முறையில் மாற்றியுள்ளது.


Youtube Chart:
யூட்யூபில் அதிகம் பார்க்கப்பட்ட, பிரபலமான படங்களை மட்டும் http://www.youtube.com/charts/ என்ற பக்கத்தில் காணலாம். மேலும் மற்ற இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள யூட்யூப் வீடியோக்களில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களையும் Popular videos around the Web என்ற பகுதியில் பார்க்கலாம்.

முழுமையான மாற்றங்களை காண: http://youtube-global.blogspot.com/2011/10/youtube-release-notes-updated-video-end.html


 இன்ட்லி மாற்றம்:இன்ட்லி தளம் மாற்றம் அடைந்துள்ளதை அனைவரும் அறிவர். தற்போது பதிவுகளை பரிந்துரை செய்யும் வசதியை தந்துள்ளது. இன்ட்லி ஓட்டுப்பட்டையில் சொடுக்கினால் இன்ட்லி தளத்திற்கு செல்லும். அங்கு அந்த பதிவின் கீழே பரிந்துரை என்பதை சொடுக்கி நீங்கள் பரிந்துரைக்க முடியும்.

Post a Comment

12 Comments

 1. நண்பா இன்ட்லி பரிந்துரை என்ற இடத்தில் ரத்து என்று வருகிறது.... ஹி ஹி

  ReplyDelete
 2. எப்படி சமைப்பது? என்ற டைட்டிலை பார்த்தவுடன் என்னது நண்பர் சமையல் தளம் ஆரம்பித்துவிட்டாரா என்று ஓடோடி வந்து பார்த்தேன்... சூப்பர் நண்பா... நல்ல பதிவு.. பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா

  ReplyDelete
 3. பரவாயில்லையே !

  ReplyDelete
 4. @ மாய உலகம்,

  //நண்பா இன்ட்லி பரிந்துரை என்ற இடத்தில் ரத்து என்று வருகிறது.... ஹி ஹி//

  "அச்சச்சோ...அழுத்திடீங்களா நண்பா.. வேணாம் நண்பா... அதை அழுத்திடாதீங்க நண்பா...???"

  ...என்று, சகோ.அப்துல் பாஸித் துபாயில் கதறுவது அண்டார்டிக்காவில் கேட்கும்போல... :-)

  ஹா....ஹா....ஹா....

  ReplyDelete
 5. மாற்றம் என்ற ஒன்றே உலகில் மாறாதது...

  ReplyDelete
 6. நல்ல தகவல் நண்பரே ,நன்றி

  ReplyDelete
 7. சலாம் சகோ

  அருமையான தகவல்

  நன்றிகள்

  ReplyDelete
 8. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 9. கால தாமதத்திற்கு மண்ணிக்கவும்

  நல்ல தகவல் நண்பா

  ReplyDelete
 10. //stalin said... 1

  super friend//

  Thank You Friend!

  ReplyDelete
 11. //மாய உலகம் said... 2

  நண்பா இன்ட்லி பரிந்துரை என்ற இடத்தில் ரத்து என்று வருகிறது.... ஹி ஹி//

  :) :) :)

  க்ளிக் செய்தாலே பரிந்துரை செய்துவிடுகிறது நண்பா!

  ReplyDelete