ஆப்பிள் ஐபோன் 4S மற்றும் ப்ளாக்கர் மாற்றம்


உலகமெங்கும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஐபோனின் ஐந்தாம் பதிப்பான Apple iPhone 4S சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை நான் ஐபோன் பயன்படுத்தியது இல்லை. அதனால் விரிவாக இதை பற்றி சொல்லப் போவதில்லை. கொஞ்சம் மட்டும் பார்ப்போம்.

இந்த புதிய பதிப்பில் என்னை கவர்ந்தது, SIRI என்னும் பெண் குரலில் உள்ள Voice Control Application. இதனிடம் நீங்கள் பேசலாம், அதுவும் உங்களுக்கு பதில் அளிக்கும். இதன் மூலம் யாருக்காவது SMS அனுப்ப சொல்லலாம், நமக்கு வந்துள்ள SMS-ஐ படிக்கச் சொல்லலாம், ஏதாவது ஒரு தகவலை நமக்கு பின்னால் நினைவுபடுத்த சொல்லலாம். இப்படி இன்னும் நிறைய. கீழுள்ள வீடியோவை பாருங்கள்.




இந்த வசதி இந்தியாவில் எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. காரணம் இதற்கு அதிவேகமுள்ள இணைய வசதி வேண்டும். மேலும் சில புதிய வசதிகளைப் பற்றி அறிய கீழுள்ள வீடியோவை பார்க்கவும்.




ப்ளாக்கர் LightBox மாற்றம்:



LightBox என்னும் புதிய வசதி பற்றி ப்ளாக்கரில் புதிய பட வசதி - LightBox என்ற பதிவில் பார்த்தோம். அந்த வசதி பலருக்கு பிடிக்காததால் அதனை நீக்குவது பற்றியும் அப்பதிவில் பார்த்தோம். தற்போது அதனை எளிமைப் படுத்தியுள்ளது. இவ்வசதியை நீக்க,

Blogger Dashboard => Settings =>Post and Comments என்ற பகுதிக்கு சென்று, அங்கு Open images in Lightbox என்ற இடத்தில் "No" என்பதை தேர்வு செய்து Save கொடுக்கவும்.

நீங்கள்  பழைய Dashboard பயன்படுத்தினால், Blogger Dashboard => Settings => Formatting என்ற பகுதிக்கு சென்று, அங்கு Open images in Lightbox என்ற இடத்தில் "No" என்பதை தேர்வு செய்து Save கொடுக்கவும்.


இந்த வசதியை வைப்பதால் ஒரு பயன் இருக்கிறது. பொதுவாக புகைப்படத்தை க்ளிக் செய்தால் அது இன்னொரு பக்கத்திற்கு சென்று முழு அளவையும் காட்டும். இதனால் துள்ளல் விகிதம் அதிகமாகும். இந்த வசதியை வைப்பதன் மூலம் துள்ளல் விகிதம் கொஞ்சம் குறையும்.


iPhone Image Credit: www.apple.com
iPhone Video Credit: www.techcrunch.com

Post a Comment

21 Comments

  1. நம்ம அனுப்புற தமிழ் SMS ஐ எப்படி அது படிக்கும் என்று யோசிக்கிறேன். ஹி ஹி ஹி

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள தகவல்

    ReplyDelete
  3. அருமையோ அருமை

    ReplyDelete
  4. நல்ல தகவல் நண்பா ..........

    ReplyDelete
  5. அருமையோ அருமை

    ReplyDelete
  6. நல்ல தகவல் நண்பா.. அந்த துள்ளல் விகிதம் என்பது புரியவில்லை நண்பா.. பகிர்வுக்கு நன்றி நண்பா.

    ReplyDelete
  7. nice post

    (astrologicalscience.blogspot.com)

    ReplyDelete
  8. ஐபோன் பற்றிய இப்பதிவு பெருமூச்சை வரவழைக்கிறது.
    [வாங்க முடியலேயேயேயே....]
    ரெட் பலூன் என்ற குழந்தைகளுக்கான உலகசினிமா பற்றி பதிவிட்டுள்ளேன்.
    வந்து பார்த்து கருத்துரைத்தால் மகிழ்வேன்.

    ReplyDelete
  9. //Prabu Krishna said... 1

    நம்ம அனுப்புற தமிழ் SMS ஐ எப்படி அது படிக்கும் என்று யோசிக்கிறேன். ஹி ஹி ஹி//

    வாங்கி டெஸ்ட் பண்ணிட்டா போச்சு.. :) :) :)

    வருகைக்கு நன்றி சகோ.!

    ReplyDelete
  10. பயனுள்ள தகவல் நண்பா..

    மிக்க நன்றி

    ReplyDelete
  11. //koodal bala said... 2

    Useful post//

    Thank You Friend!

    ReplyDelete
  12. //"என் ராஜபாட்டை"- ராஜா said... 3

    நல்ல பயனுள்ள தகவல்//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  13. //stalin said... 5

    நல்ல தகவல் நண்பா ..........
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  14. //ULTIMATE STAR said... 6

    அருமையோ அருமை
    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  15. //வைரை சதிஷ் said... 7

    super

    but video pakka mudiyala//

    நன்றி நண்பா! நீங்கள் மொபைலில் பார்க்கிறீர்களா?

    ReplyDelete
  16. //மாய உலகம் said... 8

    நல்ல தகவல் நண்பா.. அந்த துள்ளல் விகிதம் என்பது புரியவில்லை நண்பா.. பகிர்வுக்கு நன்றி நண்பா.//

    நன்றி நண்பா! துள்ளல் விகிதம் என்றால் Bounce Rate. அந்த சுட்டியை க்ளிக் செய்தால் அது பற்றி படிக்கலாம் நண்பா!

    ReplyDelete
  17. //arul said... 9

    nice post
    //

    Thank You Friend!

    ReplyDelete
  18. //உலக சினிமா ரசிகன் said... 10

    ஐபோன் பற்றிய இப்பதிவு பெருமூச்சை வரவழைக்கிறது.
    [வாங்க முடியலேயேயேயே....]
    //

    ஹிஹிஹி.. அதே பெருமூச்சுதான் இங்கும் நண்பரே!


    //ரெட் பலூன் என்ற குழந்தைகளுக்கான உலகசினிமா பற்றி பதிவிட்டுள்ளேன்.
    வந்து பார்த்து கருத்துரைத்தால் மகிழ்வேன்.//

    வருகிறேன் நண்பரே! த ங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  19. //சம்பத்குமார் said... 12

    பயனுள்ள தகவல் நண்பா..

    மிக்க நன்றி//

    நன்றி நண்பா!

    ReplyDelete