கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Labs

முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்

இரண்டாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration

மூன்றாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Search Queries

நான்காம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Links to your site

ஐந்தாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - K.I.S

ஆறாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - +1 Metrics

ஏழாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Diagnostics

எட்டாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - HTML suggestions

கூகுள்  வெப்மாஸ்டர் தொடரின் இறுதியாக, அவ்வளவாக பயன்படாத  Labs பற்றி பார்ப்போம். வெப்மாஸ்டர் பக்கத்தில் இடதுபுற sidebar-ல் இருக்கும் Labs என்பதை க்ளிக் செய்தால் அங்கு Instant Previews, Site Performance, Video Sitemapsஎன்று இருக்கும்.

 Instant Previews - கூகிள் உங்கள் தளத்தை ஊடுருவும்போது அதன் கண்களுக்கு (கூகிளுக்கு கண் இருக்கான்னுலாம் கேட்கக் கூடாது!) உங்கள் தளம் எப்படி தெரிகிறது என்பதை காட்டும். இது நமக்கு அவசியமில்லை.

Video Sitemaps - Sitemap பற்றி பார்த்தோம் அல்லவா? அதனை வீடியோ வடிவாகவும் சமர்ப்பிக்கலாம். இதுவும் நமக்கு அவசியமில்லை.

Site Performance - நமது தளம் லோட் ஆவதற்கு சராசரியாக எவ்வளவு நேரம் எடுக்கிறது? என்பதை காட்டும். குறைவான நேரத்தில் லோட் ஆகும் தளங்களுக்கு தான் கூகிள் முக்கியத்துவம் அளிக்கிறது. உங்கள் தளங்கள் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டால், அதனை குறைப்பதற்கான வழிவகைகளை செய்யுங்கள்.


உங்கள் ப்ளாக் வேகமாக லோட் ஆக சில வழிகள்:

1. முகப்பு பக்கத்தில் பதிவுகள் முழுவதுமாக தெரியும்படி வைத்தீர்கள் என்றால் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் வைக்க வேண்டாம். அப்படியில்லையெனில், இத்தளத்தில் உள்ளது போல் Read More வைத்து அதிகபட்சமாக ஏழு பதிவுகள் தெரியும்படி வைக்கலாம்.

2. தேவையில்லாத, அளவுக்கதிகமாக Gadgets-களை சேர்க்காதீர்கள். ஃப்ளாஷ் கேட்ஜெட்களும் லோட் ஆக அதிக நேரம் ஆகும்.

3. சிம்பிளான டெம்ப்ளேட்களை பயன்படுத்துங்கள். சில டெம்ப்ளேட்களே லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்.

4. தேவையிருப்பின் மட்டுமே வீடியோக்களை பதிவில் சேருங்கள்.

5. குறிப்பிட்ட சில திரட்டி ஓட்டு பட்டைகளை மட்டும் சேர்க்கவும். அதிகமான திரட்டிகளை சேர்த்தாலும் லோட் ஆக அதிக நேரமாகும்.

6. படங்களை (Images) சேர்த்தால் சிறிய அளவிலான படங்களை மட்டும் சேருங்கள். சில படங்களின் கொள்ளளவு MB கணக்கில் இருக்கும். அவற்றின் அளவை குறைத்து சேருங்கள்.


தொடர்  முற்றும், மற்றவை தொடரும்..
______________________________________________________________________________


டிஸ்கி (அல்லது) நன்றியுரை:

வெப்மாஸ்டர் டூல் பற்றி எழுத சொன்ன நண்பர் ப்ரேம் அவர்களுக்கும், இத்தொடருக்கான உதவிக்குறிப்புகளை தந்து உதவிய கூகிளுக்கும் என் மனமார்ந்த நன்றி! இத்தொடர் எழுத ஆரம்பித்த பிறகு தான் இதில் உள்ள பல வசதிகளை நானே அறிந்துக் கொண்டேன்.

Post a Comment

25 Comments

  1. மிகவும் பயனுள்ள பதிவு நன்றி, இத்தொடர் இன்னும் இருக்கிறதா இல்லை நிறைவடைந்துவிட்டதா?

    ReplyDelete
  2. //Heart Rider said... 1

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி,//

    நன்றி நண்பா!

    // இத்தொடர் இன்னும் இருக்கிறதா இல்லை நிறைவடைந்துவிட்டதா?//

    :) :) :)

    தங்களுக்காக End Card போட்டாச்சு நண்பா...

    ReplyDelete
  3. அதுக்குள்ளயே முடித்துவிட்டிர்களே பிரதர்.., மிகவும் நன்றி

    ReplyDelete
  4. //இத்தொடர் எழுத ஆரம்பித்த பிறகு தான் இதில் உள்ள பல வசதிகளை நானே அறிந்துக் கொண்டேன்.//


    நீங்கள் மட்டுமல்ல நண்பரே.. நாங்களும்தான்

    பகிர்ந்தமைக்கு நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  5. நீங்கள் பகிரும் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள பதிவுதான் நண்பா.உங்கள் சேவை தொடரட்டும்.நன்றி சகோ

    ReplyDelete
  6. இதையும் படிங்க நண்பர்களே அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதம் நாள் 5

    தமிழர்கள் முட்டாள்களா?உண்ணாவிரத போராட்டம் நாள் 5

    ReplyDelete
  7. nice post Basith... Keep blogging... Actually I should thank you for writing such a detailed blog. Thanks :)

    ReplyDelete
  8. எனக்கு widgeo counter மிகவும் பிடித்திருக்கிறது.தளத்திற்கு அழகு சேர்க்க்கிறது
    2 widgeo counterகள் மற்றும் அலெக்ஸா Widjet இம்மூன்றும் ஒரே இடத்தில் இருப்பதால் அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
    நீங்கள் சொன்ன பிறகு இப்போது Poll விட்ஜெடை எனது தளத்தில் இணைத்து இருக்கிறேன்.நண்பர்களின் இடும் ஓட்டை பொறுத்து முடிவு எடுக்கிறேன் நண்பா.

    என்னை மன்னித்து விடுங்கள் நண்பா

    ReplyDelete
  9. நன்றி சகோ .வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  10. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    சகோ.அப்துல் பாஸித்,
    மிக நல்லதொரு தொடர். தொடர்ந்து அளித்தமைக்கு மிக்க நன்றி சகோ.

    அப்புறம், 'Site Performance' பக்கத்தில் GRAPH-க்கு கீழே...

    //Install the Page Speed browser add-on
    Use Page Speed to evaluate the performance of your pages and get suggestions on how to improve them.// என்று ஒரு விளம்பரம். இதுபற்றி..?

    ReplyDelete
  11. பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ ......

    ReplyDelete
  12. பயனுள்ள பதிவு நன்றி.

    ReplyDelete
  13. //தாரிக் said... 3

    அதுக்குள்ளயே முடித்துவிட்டிர்களே பிரதர்.., மிகவும் நன்றி
    //

    வெப்மாஸ்டர் தூளில் அவ்வளவு தான் இருக்கு பிரதர்.

    தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  14. //சம்பத்குமார் said... 4

    //இத்தொடர் எழுத ஆரம்பித்த பிறகு தான் இதில் உள்ள பல வசதிகளை நானே அறிந்துக் கொண்டேன்.//


    நீங்கள் மட்டுமல்ல நண்பரே.. நாங்களும்தான்

    பகிர்ந்தமைக்கு நன்றி

    நட்புடன்
    சம்பத்குமார்//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. //Prabu Krishna said... 5

    நன்றி சகோ... !!!//

    வருகைக்கு நன்றி சகோ.!

    ReplyDelete
  16. //வைரை சதிஷ் said... 6

    நீங்கள் பகிரும் பதிவுகள் அனைத்தும் பயனுள்ள பதிவுதான் நண்பா.உங்கள் சேவை தொடரட்டும்.நன்றி சகோ//

    நன்றி சகோ.!

    //எனக்கு widgeo counter மிகவும் பிடித்திருக்கிறது.தளத்திற்கு அழகு சேர்க்க்கிறது
    2 widgeo counterகள் மற்றும் அலெக்ஸா Widjet இம்மூன்றும் ஒரே இடத்தில் இருப்பதால் அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
    நீங்கள் சொன்ன பிறகு இப்போது Poll விட்ஜெடை எனது தளத்தில் இணைத்து இருக்கிறேன்.நண்பர்களின் இடும் ஓட்டை பொறுத்து முடிவு எடுக்கிறேன் நண்பா.

    என்னை மன்னித்து விடுங்கள் நண்பா//

    இதிக மன்னிப்பு கேட்க எதுவுமில்லை நண்பா! தங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்.

    :) :) :)

    ReplyDelete
  17. //Premkumar Masilamani said... 8

    nice post Basith... Keep blogging... Actually I should thank you for writing such a detailed blog. Thanks :)//

    You are always welcome Friend!

    ReplyDelete
  18. //stalin said... 9

    நன்றி நண்பா ..//

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  19. //arul said... 11

    nice post keep blogging
    //

    Thank You Friend!

    ReplyDelete
  20. //நண்டு @நொரண்டு -ஈரோடு said... 12

    நன்றி சகோ .வாழ்த்துக்கள் .//

    வாழ்த்துக்கு நன்றி சகோ.!

    ReplyDelete