கூகுள் வெப்மாஸ்டர் டூல் - K.I.S

முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்

இரண்டாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration

மூன்றாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Search Queries

நான்காம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Links to your site

இந்த  பகுதியில் நாம் Keywords, Internal Links, Subscriber Stats [இது தான் K.I.S] என்ற மூன்று விசயங்களை பற்றி பார்க்கலாம். இவற்றை தனித்தனிப் பதிவுகளாக எழுதும் அளவு இல்லாததால் ஒரே பதிவில் எழுதுகிறேன்.

 
Keywords:



Webmaster Tool தளத்தில், இடதுபுற Sidebar-ல் "Your site on the web" என்ற இடத்தில் மூன்றாவதாக இருக்கும் Keywords என்பதை க்ளிக் செய்யவும். உங்கள் தளத்தில் உள்ள முக்கிய குறிச்சொற்களாக கூகிள் கருதும் வார்த்தைகளை காட்டும். அந்த வார்த்தைகள் தான் Keywords.

keywords-ல் காட்டப்படும் வார்த்தைகளில் சிலவற்றுக்கு கீழே Variants என்று இருக்கும். அதை க்ளிக் செய்தால் அந்த குறிச்சொற்கள் போன்ற சில வார்த்தைகளை காட்டும்.

இதன் மூலமும் நாம் எந்த வார்த்தைகளை பயன்படுத்தலாம்? என்பதை அறியலாம்.  ஆனால் இந்த keywords தமிழ் தளங்களை விட ஆங்கில தளத்திற்கு தான் அதிக பயன். காரணம் இங்கு "ப்ளாக்கர்" என்ற வார்த்தை முதலிடத்தில் உள்ளது. ஆனால் தமிழில் தேடும் போது, "ப்ளாக்கர்", "பிலாக்கர்", "பிளாக்கர்", "ப்லாக்கர்" என்று எப்படி வேண்டுமானாலும் பயனாளர்கள் கூகிளில் தேடலாம். அதனால் தமிழ் தளங்களுக்கு ஓரளவு பயன் தந்தாலும் அதிகம் பயன் தராது என்பது என் எண்ணம்.


 Internal Links:



Internal Links பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். நமது தளத்தில் உள்ள மொத்தமுள்ள உள்இணைப்புகள் பற்றி காட்டும். எந்த பக்கத்திற்கு எந்தெந்த பக்கங்களில் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.


Subscriber Stats:

உங்கள் தள ஓடையை (RSS Feed) பின்பற்றுபவர்கள் எத்தனை நபர்கள்? என்பதை காட்டும். ஆனால் கூகிள் ரீடர், ஐ-கூகிள்(iGoogle), ஆர்குட் போன்றவற்றில் பின்பற்றுபவர்கள் பற்றி தான் காட்டும். கூகிள் தளமான Feedburner, மற்றும் மற்ற தளங்கள் மூலம் பின்பற்றுபவர்களை இதில் சேர்க்காது.


அந்த பக்கத்தில் மூன்றுவிதமான தள ஓடைகள் இருக்கும். இரண்டு ஓடைகள்பதிவுகளுக்கனது, ஒரு ஓடை பின்னூட்டங்களுக்கானது. அதன் பக்கத்தில் "Submit Feed as Sitemap" என்று இருக்கும். ஏற்கனவே நாம் Sitemap சமர்ப்பித்துவிட்டதால் இது அவசியமில்லை.

_______________________________________________________________________________

பதிவு சின்னதா இருக்குன்னு யாரும் வருத்தப்படாதீங்க.. இறைவன் நாடினால், அடுத்த பகுதியில் ப்ளஸ் ஒன் பட்டன் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.


SEO Comic:


Post a Comment

15 Comments

  1. முதல் டூல் படித்துவிட்டு வருகிறேன் நண்பரே...!

    ReplyDelete
  2. லிங்கஸ், சப்ஸ்க்ரைபர்,கீ வேர்ட்ஸ் பற்றிய எளிமையான குறிப்புகள் பயனுள்ளது நண்பா...பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  3. சிறிய பதிவானாலும் உபயோகமான பதிவு ப்ளாக்கர் நண்பன், நன்றி,

    ReplyDelete
  4. தினம் தினம் புது புது தகவல்கள் மிகவும் உதவுகிறது நண்பரே. அடுத்த பதிவில் எப்படி Page Rank அதிகரிப்பது என்று எழுதுமாறு கேட்டு கொள்கிறேன் நண்பரே.

    ReplyDelete
  5. பயனுள்ள நல்ல பதிவு பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அழைக்கும் பிரதர், சுதந்திர மென்பொருளில் முதல் இடம் பிடித்ததற்கு எனது வாழ்த்துக்கள். விடுமுறை முடிந்து வேளையில் இருப்பதால் இணையத்தில் நேரம் செலுத்த முடியவில்லை. bye

    ReplyDelete
  7. //மாய உலகம் said... 1

    முதல் டூல் படித்துவிட்டு வருகிறேன் நண்பரே...!
    //
    :) :) :)

    //லிங்கஸ், சப்ஸ்க்ரைபர்,கீ வேர்ட்ஸ் பற்றிய எளிமையான குறிப்புகள் பயனுள்ளது நண்பா...பகிர்வுக்கு நன்றி நண்பா//

    நன்றி நண்பா

    ReplyDelete
  8. //Heart Rider said... 3

    சிறிய பதிவானாலும் உபயோகமான பதிவு ப்ளாக்கர் நண்பன், நன்றி,//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  9. //Jey@tecnoudates said... 4

    தினம் தினம் புது புது தகவல்கள் மிகவும் உதவுகிறது நண்பரே. அடுத்த பதிவில் எப்படி Page Rank அதிகரிப்பது என்று எழுதுமாறு கேட்டு கொள்கிறேன் நண்பரே.//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. //Prabu Krishna said... 5

    அருமை சகோ.....//

    நன்றி சகோ.!

    ReplyDelete
  11. //தமிழ்த்தோட்டம் said... 6

    பயனுள்ள நல்ல பதிவு பாராட்டுக்கள்//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. //தாரிக் said... 8

    அஸ்ஸலாமு அழைக்கும் பிரதர், சுதந்திர மென்பொருளில் முதல் இடம் பிடித்ததற்கு எனது வாழ்த்துக்கள். விடுமுறை முடிந்து வேளையில் இருப்பதால் இணையத்தில் நேரம் செலுத்த முடியவில்லை. bye
    //

    நன்றி சகோ!

    ReplyDelete
  13. அருமையான பதிவு

    ReplyDelete