ஃபைல்களை பதிவில் இணைப்பது எப்படி?

நம்முடைய பதிவுகளில் சில நேரங்களில் ஆடியோ, வீடியோ, பிடிஎஃப், பவர்பாய்ன்ட் போன்ற ஃபைல்களை இணைக்க விரும்புவோம். ப்ளாக்கரில் Default-ஆக அந்த வசதி இல்லை. அவற்றை நம் பதிவுகளில் இணைப்பது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் ஃபைலை இணையத்தில் பதிவேற்றம் செய்துக் கொள்ளுங்கள். அவ்வாறு பதிவேற்றம் செய்வதற்கு இலவசமாக பதிவேற்ற Google Sites என்ற பதிவை பார்க்கவும்.

ஆடியோ & வீடியோ ஃபைல்களை இணைக்க பின்வரும் பதிவுகளை படிக்கவும்.
ப்ளாக்கில் ஆடியோ ஃபைல்களை இணைக்க..
ப்ளாக்கரில் வீடியோவை இணைப்பது எப்படி?

கூகிள் டாக்ஸ் வீவர் (Google Docs Viewer):

பிடிஎஃப், வேர்ட், போட்டோஷாப், எக்ஸெல் என்று பல்வேறு ஃபைல்களை நமது தளத்தில் இணைப்பதற்கு கூகிள் டாக்ஸ் (கூகிள் டாகுமென்ட்ஸ்)  வீவர் (Google Docs Viewer) பயன்படுகிறது.

Supported Files:
 • Microsoft Word (.DOC and .DOCX)
 • Microsoft Excel (.XLS and .XLSX)
 • Microsoft PowerPoint (.PPT and .PPTX)
 • Adobe Portable Document Format (.PDF)
 • Apple Pages (.PAGES)
 • Adobe Illustrator (.AI)
 • Adobe Photoshop (.PSD)
 • Tagged Image File Format (.TIFF)
 • Autodesk AutoCad (.DXF)
 • Scalable Vector Graphics (.SVG)
 • PostScript (.EPS, .PS)
 • TrueType (.TTF)
 • XML Paper Specification (.XPS)
 • Archive file types (.ZIP and .RAR)

இவைகளை எப்படி இணைப்பது? என்று பார்ப்போம்.

1. முதலில் http://docs.google.com/viewer என்ற முகவரிக்கு சென்று, கூகிள் கணக்கு மூலம் உள்நுழையவும்.2. அங்கு "Enter a document URL below to generate a link to view it" என்ற இடத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்துள்ள ஃபைலின் முகவரியை கொடுத்து, Generate Link என்னும் பட்டனை சொடுக்கவும்.
3. அங்கு "For an embedded viewer, use this HTML tag instead:" என்ற இடத்தில் உள்ள iframe Code-ஐ காப்பி செய்துக் கொள்ளவும்.

4. பிறகு நமது ப்ளாக்கில் பதிவு எழுதும் பகுதியில் Edit Html Mode-ல் வைத்து, நாம் காப்பி செய்த iframe Code-ஐ Paste செய்து பதிவை பப்ளிஷ் செய்யவும்.

 உதாரணத்திற்கு ஒரு பிடிஎஃப் ஃபைல்:


ஃப்ளாஷ் ஃபைல்களை இணைக்க:

கூகிள் டாக்ஸ் மூலம் ஃப்ளாஷ் (.flv & .swf) ஃபைல்களை இணைக்க முடியாது. அவைகளை இணைக்க பின்வரும் Code-ஐ பயன்படுத்தவும். இதனையும் Edit Html Mode-ல் வைத்து Paste செய்யவும்.

<embed src="https://sites.google.com/site/bloggernanban/files/my1stflash.swf" quality="high" width="200" height="240" align="middle" allowscriptaccess="sameDomain" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer"></embed>

இதில் https://sites.google.com/site/bloggernanban/files/my1stflash.swf என்பதற்கு பதிலாக நீங்கள் பதிவேற்றியுள்ள ப்ளாஷ் ஃபைலின் முகவரியை கொடுக்கவும். Height, Weight என்ற இடத்தில் உங்கள் விருப்பப்படி உயரம், அகலம் ஆகியவற்றின் அளவை மாற்றிக் கொள்ளவும்.

இதன் வெளியீடு:


Post a Comment

14 Comments

 1. தாங்க்ஸ் பிரதர்

  ReplyDelete
 2. பயனுள்ள பதிவு. நன்றி

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள ப்ளாக்கர் தகவல் பதிவை பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு ரொம்ப நன்றி நண்பா!

  ReplyDelete
 4. பயனுள்ள பதிவு.. பகிர்வுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 5. அதிகம் தேவைப்படும் விஷயத்தை பற்றி
  பதிவிட்டு உள்ளீர்கள் நன்றி.

  ReplyDelete
 6. நல்ல பயனுள்ள தகவல் நண்பா...

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 7. நல்ல பயனுள்ள தகவல் நண்பா.......தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 8. நண்பா நாம் ziddu .com கூட பயன்படுத்தலாமே..

  ReplyDelete
 9. நல்ல பயனுள்ள பதிவு.....
  உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  ReplyDelete
 10. super article. excellent.

  ReplyDelete
 11. அருமை நண்பரே ,பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 12. i tried but it comes this massage "Sorry, we are unable to retrieve the document for viewing or you don't have permission to view the document" that was a word document please help me

  ReplyDelete
 13. எனக்குப் பயனுள்ள தகவல். நன்றி.

  ReplyDelete