கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration

முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்

கடந்த முதல் பதிவில் கூகுள் வெப்மாஸ்டர் டூல் பற்றிய சிறிய அறிமுகத்தையும், நமது தளத்தை அதில் சேர்ப்பது பற்றியும் பார்த்தோம்.  கூகிள் அனாலிடிக்ஸ் பயன்படுத்தாதவர்கள் புதிதாக இதில் சேர்த்திருந்தால் தளம் பற்றிய விவரங்களை காட்டாது. "No Data Available" என்று சொல்லும். அடுத்த முறை Google Bot (or Crawler) உங்கள் தளத்திற்கு வந்த பிறகு தான் விவரங்களை காட்டும். அதுவரை காத்திருக்கவும்.


இந்த கூகுள் வெப்மாஸ்டர் டூலில் பல்வேறு வசதிகள் இருக்கின்றன. அவற்றை எல்லாவற்றையும் சொன்னால் குழப்பிவிடும் என்பதால் நமக்கு தேவையான சிலவற்றை மற்றும் பகிர்கிறேன்.

வெப்மாஸ்டர் தளத்திற்குள் நுழைந்தால் பின்வருமாறு இருக்கும். அதில் உங்கள் தளத்தின் பெயரை க்ளிக் செய்யவும்.


பிறகு வரும் பக்கத்தில்இடதுபுறம் Sidebar-ல் Site Configuration என்பதை க்ளிக் செய்தால் அதில் SiteMaps, Crawler Access, Sitelinks, Change of Address, Settings, Url Parameters என்று ஆறு தேர்வுகள் இருக்கும்.


[படங்களை பெரிதாக காண அதன் மீது க்ளிக் செய்யவும்]

1. SiteMaps

நமது தளத்தின் அனைத்து பக்கங்களின் தொகுப்பே SiteMap ஆகும். இதில் இரண்டு விதங்கள் இருக்கின்றது.

ஒன்று, வாசகர்களுக்கான SiteMap. நமது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் வாசகர்களுக்கு காட்டுவதற்காக பயன்படுவது. இதனைப்  பற்றி ஏற்கனவே பதிவுகளை பட்டியலிடுவது எப்படி? என்ற  பதிவில் பார்த்தோம்.

இன்னொன்று தேடுபொறிகளுக்கான SiteMap. உங்கள் தளம் ஏற்கனவே கூகிள் அட்டவணையில் இருந்தாலும், சில பக்கங்கள் தவறிப் போகலாம். அதனால் நமது தளத்திற்கான SiteMap-ஐ சமர்ப்பித்தால் எல்லா பக்கங்களையும் கூகிள் தனது அட்டவணையில் சேர்த்துக் கொள்ளும். ப்ளாக்கர் தளத்தை பயன்படுத்துபவர்களுக்கு கூகிள் இதனை எளிதாக்கியுள்ளது.

வெப்மாஸ்டர்  Dashboard-ல் Site Configuration என்பதை க்ளிக் செய்து, SiteMaps என்பதை க்ளிக் செய்யவும். க்ளிக் செய்தால் உங்கள் தளத்தின் பெயரும் அதற்கு பக்கத்தில் ஒரு பெட்டியும் இருக்கும்.அந்த பெட்டியில் பின்வரும் Code-ஐ Paste செய்து, Submit SiteMap பட்டனை க்ளிக் செய்யவும்.

feeds/posts/default?orderby=updated


தங்கள் SiteMap சமர்ப்பிக்கப்பட்டதாக அறிவிக்கும்.இனி நீங்கள் புதிய பதிவுகள் பதிவிடும்போதேல்லாம் கூகிள் அட்டவணையில் சேர்த்துக் கொள்ளும்.


2. Crawler Access:

இதில் Test robots.txt, Generate robots.txt, Remove URL என்று மூன்று தேர்வுகள் இருக்கும். முதல் இரண்டும் நமக்கு தேவையில்லை. மூன்றாவதாக உள்ள Remove URL என்பதை பற்றி இறைவன் நாடினால் பின்னால் வர இருக்கும் Diagonostics பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

3. Sitelinks:

நீங்கள் கூகிளில் தேடும்பொழுது வரும் முடிவுகளில், சில தளங்களின் பெயருக்கு கீழே, அதே தளத்தின் இரண்டு மூன்று சுட்டிகள் இருப்பதை பார்த்திருப்பீர்கள். அந்த சுட்டிகள் தான் SiteLinks எனப்படும். இதனை கூகிள் உங்கள் தளங்களிலிருந்து தானாகவே முக்கியமானவைகள் என கருதும் சுட்டிகளை காட்டும். முதலில் அதிகமான தளங்களுக்கு Sitelinks காட்டுவதில்லை. தற்போது அதில் மாற்றம் செய்திருக்கிறது. இதன் மூலம் அதிகமான தளங்களுக்கு SiteLinks காட்டுகிறது.

ப்ளாக்கர்  நண்பன் தளத்திற்கான Site Links:


உங்களுக்கு SiteLinks தெரியவில்லையெனில் Logout செய்து பாருங்கள். எனக்கு அப்படி தான் தெரிந்தது. இதுவும் அனைத்து தளங்களுக்கும் தெரிவதில்லை.

Webmaster Tool பக்கத்தில் உள்ள SiteLinks பக்கத்தின் கீழே Demote என்ற வசதி இருக்கும். உங்களுக்கு காட்டும் Sitelinks-களில் தேவையில்லை என நீங்கள் கருதுபவற்றை SiteLinks-லிருந்து நீக்குவதற்காக பயன்படுகிறது. இது தேவையில்லை என நான் நினைக்கிறேன்.

4. Change of Address, 5. Settings, 6. Url Parameters:

இவற்றை பற்றி கவலைப்பட வேண்டாம். நமக்கு தேவையில்லாதது.

இறைவன் நாடினால் அடுத்த பகுதியில், இணையத்தில் உங்கள் தளம் எப்படி இருக்கிறது? என்பதை அறிய உதவும் "Your Site on the Web" பற்றி பார்ப்போம்.


SEO Quote:

"Google only loves you when everyone else loves you first."
-Wendy Piersall

Post a Comment

17 Comments

 1. dear friend , useful mater.. thank you sharing for with us

  ReplyDelete
 2. nice information.... but I cudnt see the sitelinks for your website... even after logging out...

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, பயனுள்ள தகவல் மிக்க நன்றி.

  ReplyDelete
 4. நல்ல தகவல். புதியவர்களுக்கு பயன்படும். நம்மை போன்ற பழைய பதிவர்களுக்கு 1. SiteMaps தானாகவே அப்டேட் ஆகிவிடும் என நினைக்கிறேன். சரியா?

  ReplyDelete
 5. //மாய உலகம் said... 1

  dear friend , useful mater.. thank you sharing for with us//

  Thank You friend!

  ReplyDelete
 6. //Premkumar Masilamani said... 2

  nice information.... but I cudnt see the sitelinks for your website... even after logging out...//

  Hi Friend! search as bloggernanban. i saw on chrome, internet explorer and firefox.

  ReplyDelete
 7. //ஐத்ருஸ் said... 3

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, பயனுள்ள தகவல் மிக்க நன்றி.//

  வ அலைக்கும் ஸலாம்.

  நன்றி சகோ.!

  ReplyDelete
 8. //Prabu Krishna (பலே பிரபு) said... 4

  நல்ல தகவல். புதியவர்களுக்கு பயன்படும். நம்மை போன்ற பழைய பதிவர்களுக்கு 1. SiteMaps தானாகவே அப்டேட் ஆகிவிடும் என நினைக்கிறேன். சரியா?//

  ஆம் சகோ.! தானாகவே அப்டேட் ஆகும். தங்கள் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 9. அருமையான பதிவு நண்பரே..

  இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

  நட்புடன்
  சம்பத்குமார்

  ReplyDelete
 10. EID MUBARAK - பெருநாள் வாழ்த்துக்கள் நண்பா

  ReplyDelete
 11. பல விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி நண்பா,

  ப்ளாக்கர் நண்பேண்டா...

  ReplyDelete
 12. //arul said... 9

  thanks//

  You are welcome friend!

  ReplyDelete
 13. //koodal bala said... 10

  Useful information ...thanks
  //

  You are Welcome Friend!

  ReplyDelete
 14. //சம்பத்குமார் said... 11

  அருமையான பதிவு நண்பரே..

  இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்

  நட்புடன்
  சம்பத்குமார்
  //

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 15. //மாய உலகம் said... 12

  EID MUBARAK - பெருநாள் வாழ்த்துக்கள் நண்பா//

  வாழ்த்துக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 16. //Heart Rider said... 13

  பல விஷயங்களை தெரிந்துகொண்டேன் நன்றி நண்பா,

  ப்ளாக்கர் நண்பேண்டா...
  //

  :) :) :)

  நன்றி நண்பா!

  ReplyDelete